பேராசை காற்று நிரப்பிய பலூன்

உள்ளத்தில் ரசனைகள் உள்ளவரை
உலகத்தின் துயர்களால் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது
உள்ளம் என்பது ஆமையின் உடல் போல மென்மையானது
குளிர்,சூடு தாங்காது
அதற்கு ஒரு ஓடு வேண்டும்
மனித மனம் என்பது தோல் இல்லாத பல்லி,
ஒரு துயரத்தை தாங்காது
ஒரு சொல்லைத் தாங்காது
தான் நினைத்தது எல்லாம்
     நினத்த உடன்
     நினைத்த படியே
நடக்க வேண்டும் என்ற பேராசை காற்று நிரப்பிய பலூன்
      சிறு ஊசி பட்டாலும் காற்றுப் போய் சுருங்கி விடும்
   தொட்டாற் சுருங்கியான குழந்தை அது
   அதை சமாதனப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல‌
திட,திரவ,வாயு என‌
    அதை அழவிடாமல் தூங்க வைக்க‌
    அதை ஏங்க விடாமல் தாங்கிக் கொள்ள‌
மனிதன் கண்டு பிடித்தது ஏராளம்,அதனால் விளைந்த துயர்களும் ஏராளம்
ஆனால் அழகு,அன்பு,இசை,இயற்கை,மனிதநேயம்
எனும் பண்புள்ள பாதுகாப்பான ரசனைகள்

 

கவசங்களாக உள்ளவரை இந்தத் துயரங்களால் நம்மை தொடமுடியாது

துணைவி

மணைக்கேற்ப மாண்புடையளாகி தான்

துணைக்கேற்ப வளமுடையளாகி வாழ்வது துணைவி
இல்லத்தில் உள்ளவன் குணம் இல்லாதவன் ஆனால் பின்னே
உலகத்தில் உள்ளவர் பணம் எல்லாமிருந்தும் பயனென்ன
இல்லத்தில் உள்ளவன் இனியவனானால் இல்லாதது எதுவுமில்லை
உள்ளத்தில் வந்தவன் இன்னலானால் உள்ளதென்று ஒன்றுமில்லை
கற்பு எனும் நெருப்பு இருந்தால்
 பெண்ணை விட பெரிய பொன்னில்லை
அற்பம் எனும் நெருப்பு வளர்த்தால்
பெண்ணை விட துயர புண்ணில்லை
கடவுளென்றே கணவனைத் தொழுவாள்
 பெய்யென்றால் மழை பெய்யுமே
தன்னை காத்து தன் கணவன் உயிர் காத்து
தன் சொல் காத்து தன் சுற்றம் காத்து சோர்வு இலாதவள் பெண்
சிறையின் காவலால் என்ன பயன் மகளிர் தம் நாணமெனும்
நிறையின் காவலால் கற்பு காக்க படுமே தன் மானமென்றும்
 நல்ல கணவரைப் பெறும் பேறு பெற்ற பெண்ணே
தேவர் வாழுமுலகில் வாழுப் பேறு பெற்ற பெண்டிரே
தன்னை இகழ்பவர் பெறும் முன் ஏறு போல பீடுடைய நடை
தன் இல்லத்திலே நல் புகழுடையாள் இல்லாதவர்க்கு இல்லை
தன் மனையில் உள்ளவன் மான்பே
 வாழ்வுக்கு மங்கலமாகும்
தன் மக்களை பெற்றவள் மாண்பே  
அழகுக்கு அணிகலமாகும்

குறள் நெறி இல்லறம்

பெற்றவர்க்கும் பெற்றோர்க்கும் துணை

உற்றோருக்கும் துணைவனே துணை
துறந்தவர்க்கும் இரந்தவர்க்கும்   கை
இரந்தவர்க்கும் தலைவனே துணை
இல்லத்தை சுற்றத்தை தெய்வம் தெளிந்தவரை காப்பது கடமை
பழி தவிர்த்து செல்வம் சேர்த்த வாழ்வு விழி என்றும் தவறுவது இல்லை
அன்பும் அறனும் உடைய இல்லமே பண்பும் பயனுமாகும்
அறம் மாறாத இல்லற வாழ்வு மலர்ந்தால் துறவறம் எதற்கு
அறம் வழவாத இல்லற வாழ்வு ஆற்றுவதே துறவிலும் தூய்மையே
இயல்பான இல்லறம் வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலைவனே
அறம் என்று வாழ்வது ஒன்றே இல்லற வாழ்வு
பிறர் ஒன்று பழிப்பது இன்றேல் அதனிலும் நன்று
வையகத்துள் நல்லவனாக வாழ்பவன்
தெய்வத்துள் வானகத்தில் வணங்கப்படுவான்

குறள் நெறி அறம்

சிறப்பு தரும் செல்வம் தரும்
உயிர்க்கு அறம் செய்பவனுக்கு
அறிவு தரும் ஆக்கம் தரும்
உயிரிடம் கருணை வைப்பவர்க்கு
அறத்தினும் சிறந்த ஆக்கம் புகழ் பிறிதொன்றில்லை
மறத்தலின்இழிந்த அழிவும் கேடும் வேறின்றில்லை
செல்லும் இடமெல்லாம் தானமும் தர்மமும் செய்வாயே
முடியும் வகையெல்லாம் ஈகையும் இனிமையும்  மறவாதே
மனத்தின் ஆழத்தில் மாசு இல்லாதவனே அறத்தின் அரசன்
குணத்தின் விழியில் தூசு இல்லாதவனே தர்மத்தின் தலைவன்
ஆசை வெகுளி கடுஞ்சொல் பொறாமை நீக்குவதே அறம்
பிறகு செய்வோமென்று என்னாது இன்று அறம் செய்க 
இன்று வந்தேனென்று காலன்வர நல்ல துணையாகுமே
பல்லாக்கு மேல் ஒருவன் கீழ் ஒருவன் ஆனது பணத்தாலே
புகழுக்கு மேல் ஒருவன் கீழ் ஒருவன் ஆவது குணத்தாலே
அறத்தினால் வருவதே பேரின்பம்
மற்றதெல்லாம் புகழில்லாத புழுதியே
வீழும் நாளெல்லாம் வீணாகாது நன்மை செய்வதே
வாழும் நாளெல்லாம் துயர் வழி அடைக்கும் கதவாகும்
செய்ய வேண்டியது எல்லாம் அறமே
தவிர்க்க வேண்டியது எப்போதும் தவறே.

குறள் நெறி நன்றி

நாம் ஏதும் செய்யலாம் நமக்கு உதவியவர்க்கு
வையகத்தையும் வானகத்தையும் தந்தாலும்  ஈடாகாது 
காலத்தினால் செய்த உதவி சிறிதே என்றாலும்
ஞாலத்தை விட பெரிது அந்த நன்றி என்பார் பெரியோரே
பயன் கருதாது ஒருவர் செய்த உதவியை 
நினைத்து பார்த்தால் அதன் நன்மை கடலை விட பெரிதே
தினையளவே உதவி செய்தவரையும் அறிவுற்றவர்
பனையளவாகக் கொண்டு நன்றி செய்வார் பயனுற்றவர் 
உதவியின் பயனை அளந்து பார்த்தால் அது
உதவி பெற்றவரின் பண்பை போல வளரும் தன்மையுடையது
                        
மாசு இல்லாதவர் நட்பை என்றும் மறவாதே
துன்பம் வரும் போதும் தூயவர் நட்பை 
பிரியாதே
துயருற்ற போது வந்து துன்பம் துடைத்தவர் நட்பை
என்றென்றும் ஏழபிறவியிலும் எந்நாளும் நினைப்பாரே
                                                                        
நன்றியை மறப்பதும் நல்லதல்ல
நன்றியை  மறந்தவரை நினைப்பதும் நல்லதல்ல
கொலை போல ஒருவர் கொடுமை செய்தாலும்
இலை போல ஒரு சிரிய நன்மை செய்தரென்றால் மன்னிக்கப்படுவாரே
எந்த நன்றியை கொன்றவர்க்கும் மன்னிப்பு உண்டு 
செய்த நன்றியை கொன்ற கயவருக்கு கருணையேது

குறள் நெறி பொறாமை

நெஞ்சத்து பொறாமை இல்லாத பண்பே
உலகத்து ஒழுக்கமென ஒருவன் கொள்ள வேண்டும்
எவரிடத்தும் பொறாமை இல்லாத குணமிருந்தால்
அதைவிட பெருஞ் செல்வம் பிறிதொன்றில்லை
பிறர் செல்வம் கண்டு பொறாமையில்லாதவனுக்கு
பிற அறமும் ஆக்கமும் தேவையில்லை
இழிந்த தீமை படுத்தும் பாடு அறிந்தவர்
ஒருபோதும் 
பொறாமையினால் வரும் தீமையை செய்ய மாட்டார்
                                                     
பொறாமை உடையவர்க்கு அது ஒன்று போதும்
பிற பகை எதுவும் வழக்கும் கேட்டிற்கு
கொடுத்தது உதவுவதை தடுத்து நிறுத்தும் பொறாமையுடையவன்
சுற்றமும் உடுப்பதும் உண்ணவும் ஏதுமின்றி கொடுப்பான்
பொங்கும் பொறாமை உடையவனை விட்டு
தங்கும் செல்வமும் தங்காது போகும்
பொறாமை என்றொரு பொல்லாத பாவி
திருவை அழித்து தீயவழி விட்டு விடும்
பொறாமை பொங்கும் நெஞ்சமுடையவன்
செல்வமும் கேடே என்று நினைக்கப்படும்
பொறாமையினால் உயர்ந்து வாழ்ந்தவர் இல்லை
பொறாமையில்லாதாவர் ஒருபோதும்
தாழ்ந்ததும் இல்லை

குறள் நெறி நடு நிலை

நியாயமாக சேர்த்த ஒருவர் பொருளை

நியாயம் இல்லாது ஒருவன் விரும்புவது குற்றமாகும்
பயன் விரும்பி பழியாகும் செயல் செய்யமாட்டார் 
நடு நிலையை மீறி அநியாயமாக செய்ய நாணம் உடையார்
பேரின்பம் பெற வேண்டும் என விருப்பம் உள்ளவர்
சிற்றின்பம் விரும்பி அறன் அல்லாத செயல் செய்யமாட்டார்
தன் புலன்களை வென்ற தெளிவான காட்சி உடையவர்
இல்லை என ஏங்கி இன்னல் செய்ய மாட்டார்
அருள் விரும்பி நல் வழியில் நின்று வாழ்பவன்
பொருள் விரும்பி பொல்லாதது செய்தால் வீழ்வான்
பிறர் பொருளை விரும்பி கவர வேண்டாம்
அதனால் விளையும் பயன் தீமையாகும் முடியும்
நம்செல்வம் குறையாமல் இருக்க நாம் விரும்பினால்
பிறர் செல்வம் விரும்பாமல் இருக்க பழக வேண்டும்
அறன் அறிந்து பிறர் பொருள் விரும்பாத அறிவுடையாரை
திறன் அறிந்து அவர் பொருள் சேர்ப்பாள் திருமகளே
தவறு என்று எண்ணாது பிறர் பொருள் விரும்பினால் 
வெற்றி என்றும் சேராது வேண்டாமே அந்த செருக்கு