உடல் நலத்தை பராமரிப்பது எப்படி ?

                                                    
Health Management
      
ஊணுடம்பு ஆலயம்
        உள்ளமவன் திருக்கோயில்

கிறித்துவ வேதத்திலும் கூட உடலைக் கோவிலாகப் போற்றும் பண்பு உண்டு     இறைவன் வந்து வாசம் செய்யும் நமது உடலை அவனது தேவாலயம் என்றே பாதுகாப்பாக வைக்க சொல்கிறது.
     
அதை விட தீய பழக்கத்தால் அசுத்தப்படுத்தாது இரு  
நல்ல எண்ணங்களால் உடலை தூய்மையகா வை எண்கிறது . அரிதரிது மானிடராய் பிறப்பதரிது என்றாள்  

ஆனால் இடையிலே பல காலம் உடலை கேவலமாகவும் பாரமாகவும் நினைக்கும் போக்கு வந்து விட்டது.    வாழ்வதற்காக உண்ண வேண்டும்     உண்பதற்காகவாழாதே என்பது மறந்து விட்டது.பலருக்கு வாய் என்பது கார்ப்பரேஷன் லாரி போல ஆகிவிட்டது  

 


அறிவு பூர்வமாக உடலை உடல் நலத்தைபாதுகாக்க  இரு வகைகள் உண்டு.
        positive physical health – 
நமது பயிற்சிகளால் உடலை வளர்ப்பது
         preventive health-
நமது தற்காப்பு முயற்சிகளால் பாதுகாப்பது
    
பாதுகாப்பிலும் இரண்டு வகையுள்ளது .         
               
ஒன்று வியாதிகளை  விலை கொடுத்து வாங்காதிருப்பது மற்றது விதிவசத்தால் வந்ததிலிருந்து மீள்வது உடலைப் போற்றுவதில் உள்ள் நலம் என்பதின் பங்கு பிரதனமாது    
தெளிவான இனிமையான மனமும் அதில்
நம்பிக்கையான நல்ல எண்ணங்களும்,            
தூய்மையான துனிவான செயல்களும்”  
தொடர்ந்தால்தான் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வே இருக்கும் . 
துயரம்,தோல்வி, விரக்தி,சலிப்பு,அலுப்பு,மலைப்பு,இது போன்ற இன்னும் பல நஞ்சு சுரக்கும் பூக்கள் மனதில் பூத்தால் என்னவாகும்.

          வாழ்வு மேல் கசப்பு ஏற்படும்
          உடல் மேல் வெறுப்பு ஏற்படும்
          மரணத்தின் மேல் ஈர்ப்பு ஏற்படும்.

நல்ல மன நலம் அதுதான் நல்ல உடல் நலத்தின் ஆதாரம்.
உடல் என்பதை ஒரு வசந்த மண்டபமாக்க நினைத்தால் அதன் நான்கு தூண்களும் உறுதியாக கட்டபட வேண்டும். அவை உணவு,உழைப்பு,சுத்தம், உறவு, ஒய்வு, உறக்கம் ஆகும் ஆனால் நடைமுறை வாழ்வில் அறுசுவைக்கு தரப்படும் முக்கியத்துவம் உடலில் அடிப்படை தேவைகளுக்கு தரப்படுவதில்லை.
    
இந்த ஆதாரத்தூண்களின் அளவு சரியாக அமைக்கபடுவதில்லை ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு தேவையை அளவுக்கதிகமாக கவனித்து மற்றதை அடியோடு புறக்கணித்து விடுகிறார்
   
ஒருவர் நிறைய உண்டு நிறைய உறங்குகிறார் குறைய உழைத்து குறைவான சுத்தம் பார்க்கிறார்.

   ஒருவர் நிறைய உழைக்கிறார்
   ஒருவர் நிறைய உறவுகொள்கிறார்
   ஒய்வையும் உறக்கத்தையும் மறக்கிறார்
   சிலர் உணவையும் கூட மறுக்கிறார்

இப்படி நெட்டையும் குட்டையமான தூண்கள் இருந்தால் காலிலில்லாத நாற்காலி போலி போல உடல் நடனமாடிதள்ளாடும் முதலில் உணவுப் பழக்கங்களை பார்த்தால் இரு கோணல்கள்.
   ஒன்று undereating
   மற்றது overeating
குறைந்த உணவுக்கு பெரும் காரணம் வறுமையே வறுமையிலும் கூட திறமையிருந்தால் உணவைப் போதுமானதாக்க முடியும்.  குறைந்த செலவில் நல்ல உணவு உண்ண முடியும் மற்றது வளமை யிருந்தும்
உணவை புறக்கணித்து அக்கறையின்றி சோம்பி உறங்குவது இது அபூர்வம்

ஆனால்   பரவலாக  ஒன்றாம் நம்பர் மனிதர்கள் உண்டு அவர்கள் மனம் என்பது பந்தயக் குதிரையாக ஓடும்.
  
உழைப்பு,உழைப்பு,உயர்வு என்ற இலக்கிலே உணவு,உறவு,ஓய்வு,உறக்கம் அத்தனையும் உதாசீனப்படுத்தும்.விளைவுகள் மோசமானது எல்லா sir
பட்டங்களையும் சுலபமாக வாங்கிவிடும் ulcer,pressure,cancer என்று இந்த பட்டங்களில் பட்டியல் நீளும் பக்கவாதம்,மாரடைப்பு என இவரது ஆயுள் குறைக்கபடும்.

ஆனாலும் அவர் ஒரு நொடி வாழ்ந்தாலும் மின்னலென மின்னி மறைய ஆசைப்படுவார். இது நல்லதல்ல, நல்லவர் வேண்டும் நாடு வாழ  அவர் நீடு வாழ வேண்டும் அவர் தன் உடலைப் போற்ற வேண்டும்.
இதற்கு நேர் மாறாக,  உண்பதற்காகவே பிறந்தவருமுண்டு. வாழ்வதற்காக உண்ண வேண்டும் உண்பதற்காக வாழ வேண்டாம் இது நலத்திற்கு ஒரு நல்ல மந்திரச் சொல் சிலர் இன்றே கடைசி     இன்றே அவரது இறுடி நாள் என்பது போல கிடைத்ததெல்லாம் உண்டு கொண்டே இருக்கிறார் இவரும் ஓய்வு கொடுப்பதில்லை அவரது வாய்க்கு.     
    
அரிசி ஆலை,மாவு ஆலை,எண்ணெய் ஆலைபோல இடைவிடாது  இயங்குகிறது இவரது சீரண மண்டலம்.  சீரணித்தது எல்லாம் கொழுப்பாக சேமிப்பு வங்கியில் நோய்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது உப்பு,சர்க்கரை,கொழுப்பு,குண்டு என்று over eating ல் வரும் வியாதிகளின் பட்டியல் மிக மிக நீளம் வறுமையின் நோய் பட்டியலை விட வறுமையின் வாயால் வந்த நோயால் வந்தது நீளமானது.
   
நாக்குக்காக சாப்பிடுவதை விட்டு விட்டு வயிறுக்காக சாப்பிடுவது நலம்  ருசிக்காக புசிப்பதை விட்டு பசிக்காக உண்பது நலம் உடலை அலங்கரிக்கலாம் உணவை அலங்கரிக்கலாமோ இசையை ரசிக்கலாம் உண்பதில் ஓராயிரம் சுவையும்,ரசனையும் தேவையே எப்போதாவது இருந்தால் தவறில்லை , எப்போதுமே இருந்தால் தவறிவிடும் உடலும் உயிரும் வாழ்வும்    உணவைத் தாண்டி சுத்தத்துக்கு வருவோம். சுத்தமென்பது சுத்தமாக இல்லை இன்று பல் துளக்குவது,குளிப்பது,உடை,வீடு சுத்தம் இதில் குறையில்லை ஓரளவிற்கு வறுமையில் உள்ளவர் கூட மேம்பட்டு உள்ளார்.

ஆனால் உண்மையான சுத்தம் என்பது பழக்கங்கள் அவை நிறைய அசுத்தமானவையாகிவிட்டது.தீமையான அசுத்தமான பழக்கவழக்க‌ங்கள் அதிகமாகிவிட்டன.  திட திரவ வாயு என எல்லா போதைகளையும் விழங்குகிறார்கள்.உணவைத் தவிர உண்ணும் தேவையற்ற போதைகள் டன்டன்னாக அதிகரிக்கின்றன.    

மருந்து,மாத்திரைகள்,பாக்கு,பான்பரக்கு,மது,பீர்,பிராந்தி,பீடி,சிகரெட் என தீய பழக்கங்களின் பட்டியல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நீண்டது.lifestyle என்பதில் அசுத்தம் அதிகமாகிறது.   உணவு மட்டுமல்ல‌    
உடலுறவிலும் ஒழுங்கு மீறப்படுகிறது.   உழைப்பு,ஓய்வு,உறக்கம் 
இதிலும்    அசுத்தமான பழக்க வழக்கங்கள் அதிகமாகி வருகின்றன.
   
மன உளைச்சலை அதிகமாக்குகின்றன‌   

உடல் உழைப்பு குறைந்து வருகின்றது.வாழும் முறைகளும் வழிகளும் சுத்தபடுத்தப்படுத்த வேண்டியது நிறைய உள்ளது.  உடல் சுத்தமில்லாது போகும் போது தொற்று நோய் மட்டும் வரும். 
ஆனால் வாழும் வழிகள் அசுத்தமானால்        
உடலுக்கும் உள்ளத்துக்கும் அபாயகரமான 
பல நோய்கள் வரும்.
     
இரத்தஅழுத்தம்,மாரடைப்பு,பக்கவாதம்,சர்க்கரை,
கொழுப்பு,இன்னும் இது போன்ற பல உயிர் கொல்லும் நோய்களுக்கு உடல் வதைக்கும் உபாதைகளுக்கு இளமையில் வாழும் வகையறியாது வாழ்பவர் ஆளாக வாய்ப்புள்ளது.உணவு,சுத்தம் இதைத்தாண்டி உடலுறவு என்பது முக்யமானது முறையான காமம் தவறில்லை தேவையானாதும் கூட‌ மானுடர்க்கு காதலினால் கலவியினால் இன்ப வாழ்வு என்றான் பாரதி.
      தகுதியான,அங்கீகரிக்கப்பட்ட,அன்பான,அளவான,சீரான தாம்பத்ய வாழ்வு புனிதமானது.உணவும் ஓய்வும் போல அத்யாவசயமானது உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் தரக்கூடியது உடல் நல மன நலத்தை காக்கும் மருந்தானது
   திருமண முன் உறவு,
   திருமண பின் உறவு
   வியாபாரப் பெண்கள் உறவு
   பல பெண்கள் உறவு,
   ஓரினசேர்க்கை உறவு
   பாலியல்வக்ரங்கள்
   மனைவியுடன் கூட அன்பில்லாத கூடல்
   வன்முறையான வக்ரமான கூடல்
இன்னும் இது போன்ற பல அநீதியான முறையற்ற‌
ஒழுங்கு மீறல்கள் உடலுறவை நோயாக்கும்
உடலுக்கு வரும் தொற்று நோய்களின்
பக்கவிளைவுகளைவிட‌நலம்பாதிக்கப்படும்,
ஒழுக்கமின்மையால்குற்றஉணர்வு,தன்னம்பிக்கை குறைவு தாம்பத்ய முறிவு,விவாக முறிவு போன்ற பல குடும்ப நல பிரச்னைகளும் ஏற்படும்.
  
பரஸ்பர சந்தேகம்,வாதம்,விவாதம்,விதண்டாவாதம் விளைவாகும்.
   
உணவு,சுத்தமான பழக்க வழக்கங்கள்
உடலுறவை ஒழுங்கு இவைகளையும் தாண்டி
ஓய்வு‍ உறக்கம் என்பதில் மிக திட்டமிடுதல் அவசியம்

ஓய்வு வேறு உறக்கம் வேறு
உறக்கம் என்பது உடலுக்கு மட்டுமே
உறக்கம் இல்லாத ஓய்வு உன் நலத்திற்கு மிக அவசியம்.

இயல்பான தொடர் கடமைகளில் இருந்து சற்றே விலகி நின்றுஉள்ளத்தையும் இனிமையாக்க வேண்டும்,
இசை,படிப்பு, யோகா,தியானம்
தொழுகை,விளையாட்டு,என்றுஇன்னும் பல அத்யாவசமான மனித தேவைகள்
‘பொழுது’போக்கு என்று வகைப்படுத்தபடுகிறது.
காலப்போக்கில் பொழுதை போக்குவது எனபது உபயோகமில்லாது போய் இன்று உபத்திரவமாகி விட்டது பொழுதை கொல்லுவது என்றாகிவிட்டது. சின்னத்திரையும் பெரியதிரையும் விரித்த வலையில் மனித மனமென்னும் திமிங்கிலம் சிக்கி கொண்டது. 
முட்டாள் பெட்டியால் மனித மனம்முட்டாளடிக்கபடுகிறது.
எதையும் தானாக செய்யும் இன்பம் மறந்து போய் விட்டது மற்றவர் செய்வதை திரையிலே நிழலிலே பார்த்து திருப்தியடைகிறான் மனிதன்.

ஆடல் பாடல் மட்டுமல்ல‌
கூடல் கூட திரையிலே கண்டு மகிழ்கிறான்
விளையாட்டு
வேடிக்கை யோகா
தியான மட்டுமல்ல‌
தொழுகை கூட மற்றவர் செய்வதை கண்டு மகிழ்கிறான்

இது ஓய்வாகுமா?
உடலும் மனமும் புத்துணர்வு பெற வேண்டுமானால்
நிழலை மறந்து நிஜமான ஓய்வுச் செயல்களில் நேரிடையாக மகிழனும்
இறுதியாக உறக்கம் 

உறக்கம் என்பது உடலின் புதுபிறப்பு
இதிலும் மனிதரிடையே குழப்பம்
அளவுக்கதிகமாக உறங்கி உடல்,மனம்,மட்டுமல்ல‌
வாழ்வையே நோயாக்கும் மனிதர் அதிகம்
நல்ல பொழுதை எல்லாம் தூங்கி நாசமாக்குப‌வர் பலர்

சிலர் உழைப்புக்கு பிராதான முக்யம் கொடுத்து சரியாக உறங்காமல் களைப்பு,உடல் மற்றும் மனசோர்வுக்கு ஆளாகி ஆயுளுக்கு சுய தண்டனை கொடுத்து கொள்கிறார்கள்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX