இயம்ப அரும் பொருள் …

எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருள்
கல்லிடைப் பிறந்து,

போந்து,

கடலிடைக் கலந்த நீத்தம்,
தொல்லையில் ஒன்றே ஆகி,
துறைதொறும், பரந்தது அன்றே

கம்பனின் கடவள் தத்துவம் …………………….

நதிகளின் பிறப்பும் நடப்பும் பலவாக இருந்தாலும்
அவை யாவும் கலக்கும் இடம் கடலே

மதங்களின் சாரத்தை நாலு வரியில் படம் பிடித்தான்
ஆயிரம்  வேதங்கள் ஆயிரம் மதங்கள் சொல்லும் பொருள் ஒன்றே …

கம்பரசம் 1

வழி கெட வரினும்
தம் தம் வாழ்க்கை தேய்ந்து இறினும்
மார்பம்கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும்
ஆன்றோர் கூறும்மொழிகொடு வாழ்வது அல்லால்
முறை கெடப் புறம் நின்று ஆர்க்கும்
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ
பாவம்

கம்பனின் சத்யசோதனை..

1.நம் பாதையில் யார் வந்து தடுத்தாலும்
2.நம் வாழ்வே அழிந்தாலும்
3.மார்பை தோட்டா வந்து துளைத்தாலும்
சத்யத்தின் பாதை மாறி
ஊரார் கேவலமாக ஏசிட வாழ்வதும் ஒரு வாழ்வோ?

………………………………….தொடரும்.