உயர்வான எண்ணம்

எதுவுமே கிடைத்திருக்காவிட்டாலும்….. ஆசைபட்டதற்கு எதிராகவே எல்லாமும் கிடைத்திருந்தாலும்…. கிடைத்ததெல்லாமே அறைகுறையாகவே இருந்தாலும்…
எல்லாமே மனதிருப்தியாகவே கிடைத்திருந்தாலும்… எல்லாவற்றையுமே அடைந்துவிட்டோம்..குறையொன்றுமில்லை என்று முழு திருப்திதேயாடு இருந்தாலும்….
மனதைமட்டும் குறையோடு…தாழ்வாக…ஏழ்மையாக வைத்துவிடவேண்டாம்…அதிக அகங்காரத்தோடும் வைத்துவிட வேண்டாம்…
எனக்கு வாய்த்தது இவ்வளவுதான்…. நானெல்லாம் அந்த மாதிரி வாழவே முடியாது..என உங்களை நீங்களே சுறுக்கிகொள்ள வேண்டாம்…
யாரையெல்லாம்..யாருடைய வாழ்வையெல்லாம் பார்த்து பெருமூச்சு விடுகின்றீர்களோ…யாரைபோல் நம்மால் வாழமுடியாது நமக்கு கொடுத்துவைக்கவில்லை என்று நினைக்கின்றீர்களோ..
யாரெல்லாம்..எவையெல்லாம் நமக்கு கிட்டவே கிட்டாது… என்று மனதை வலுக்கட்டாயமாக விலக்கி..ஏமாற்றத்தோடு வேறு காரியங்களில் கவனத்தை வைத்தோமோ…..
அவர்களெல்லாருமே…எல்லாமே… ஒரு காலத்தில் நம்மைபோல் சாதாரணமானவர்களாக… நாம் அடையகூடிய வகையில் சாதாரணமாக இருந்தவவைகளே…
மனதளவில் தாழ்வுகொள்ளாமல்..உயர்வாக எண்ணி..தன்னை எல்லாவற்றிற்குமே தகுதியுடையவராக கற்பனை செய்து..அந்த எண்ணங்களின் இழுப்பில் வெற்றியடைந்தவராகவே இருப்பர்..
நம்மைபற்றிய தாழ்வான மதிப்பீடு…நாம் இயலாதவர் என்ற எண்ணம் யாரிடமும் சரளமாக அணுக பயப்படும்… ஏழை மனது…அடக்கி அடக்கி வைக்கும்..எல்லாவற்றிற்குமே தடைபோடும்…
சரளமாக செயல்படவிடாது… உயர்வான எண்ணம்..உயர்வான மனது..உயர்வாகவே எண்ணவைக்கும்.. தடையின்றி எல்லோரிடமும் எல்லா இடத்திலும் செயல்படவைத்து…பிறர் மனதில் எளிதாக இடம் பிடிகக வைக்கும்…
முதலில் மனதை உயர்வாக தன்னம்பிக்கையோடு…வைப்போம்…

செல்வி…மனநல ஆலோசகர்

மீண்டும் மீண்டும் நினைப்பதனால்??

எதோ ஒரு தேவைக்காக…உள்ளொன்று வைத்து..புறம் ஒன்று பழகுபவர்கள்… அவர்கள் காரியம் முடிந்ததும் அல்லது..முடியாது என தெரிந்ததும் நம்மை விட்டு சென்றுவிட்டால்…
அதற்காக வருத்தபடுவதும் வேதனைபடுவதும்..மேலும் நமக்கேதான் இழப்பை பிரச்சனையை ஏற்படுத்தும்….
ஒரு நிலையில் நமக்கே புரிந்துவிடும்… எதற்காக வந்தார்கள் பழகினார்கள் சென்றார்கள் என்று…ஒருவேளை நாம் இழந்திருத்லும் அல்லது தப்பித்திருந்தாலும்..எதற்காகவும் மன உளைச்சல் அடையதேவையில்லை.
வருத்தபடுவதனால் இழந்தவை மீண்டும் கிடைக்கபோவதில்லை.. தப்பித்திருந்தால்…அதுவே ஒரு பாடமாக அமைந்து நிம்மதி பெருமூச்சுவிட வைக்கும்….
அதனையே மீண்டும் மீண்டும் நினைப்பதனாலும்…அவர்களுக்கு எதோ ஒரு வகையில் தொந்தரவு செய்யவேண்டும் என நினைத்தாலும்
அல்லது மற்றவர்களை எச்சரிக்கை செய்வதாக நினைத்து புத்தியில்லாமல் நினைத்த காரியத்தை பிரச்சனை இல்லாமல் செய்ய தெரியாமல்..மேலும் பிரச்சனையிலும் பகையிலும் மாட்டிகொள்வது நல்லதல்ல…
நடந்தது நடந்ததே….அழுதாலும் புரண்டாலும் மாறபோவதில்லை.. அதற்காக மேலும் மேலும் நம்மை வருத்திகொள்வது புத்திசாலிதனமல்ல…
நடந்ததை ஒரு பாடமாக எடுத்துகொண்டு… பிறரை எச்சரிப்பதுகூட பிரச்சனையில்லாமல் எச்சரித்து… அமைதியாக வாழ பழகுவதே..என்றும் மனஉளைச்சலின்றி..நோயின்றி வாழவைக்கும்…

செல்வி…மனநல ஆலோசகர்

தவறான புரிதல்கள்

யாரிடமும் எதையோ ஒன்றை எதிர்பார்த்தே பழகுவது நம்மோடு ஒட்டிகொண்டுவிட்டதனால்… ஏமாற்றங்களும்..பிரச்சனைகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது…
உண்மையான அன்பையோ..பிரியத்தையோ புரிந்துகொள்ள முடியாமலும்…ஏற்றுகொள்ளமுடியாமலுமே போய்விட்டது…
எல்லோருமே…கொண்ட அன்பையோ… நலனையோ.. உடனடியாகவோ.. எதாவது ஒரு வகையிலோ வெளிப்படுத்த முடிவதில்லை…
அதனால் தவறான புரிதல்களும்..அதனால் உறவுகளை இழப்பதும். மனநல பிரச்சனைகளும் ஏற்பட்டு அமைதி போய்விடுகின்றது…
வெளிப்படையாக தெரியாவிட்டாலும்..பெரும்பாலான நேரங்களில் சிறு பார்வையும்… செயல்களும்…. நம் உள்உணர்வில் உணர்த்தும்.. இவர் நம் நலனில் அக்கரைகொண்டவர்..பிரியம் கொண்டவர் என்றோ
அல்லது… இவர் பாதுகாப்பானவர் அன்று…. பிரச்சனைகள் ஏற்படலாம் நமக்கு தொல்லைகள் செய்துவிடலாம் என்றோ.. நம்மை அறியாமலேயே உணரும் தருணங்களே போதுமானது… நாம் விழித்துகொள்வதற்கு… நன்மை தீமையை புரிந்துகொள்வதற்கு..
அதற்காக யாரும் பாடம் நடத்தவேண்டும்… டிகிரி படிக்கவேண்டும் என்றும் அப்போதுதான் புரியும்..என்றும் அங்கலாய்க்க தேவையில்லை
யாருக்குமே அந்த உள்உணர்வு திறன் இருக்கின்றது… நமது அலட்சியத்தினாலும்…விழிப்பு இல்லாமையினாலும்தான் ஏமாந்துபோகின்றோம்….
நாமும் யாரிடமும் எதனையும் எதிர்பார்க்கவேண்டாம்…. யாரிடம் என்ன வகையான அன்பை எதிர்பார்க்கின்றோமோ..அதனை முதலில் நாம் கொடுக்க முயல்வோம்…
பிறகு பாருங்கள் எல்லாமே நன்மையாகவும்…. மேன்மையாகவும் மகிழ்ச்சியாகவுமே நடக்கும்….

செல்வி….மனநல ஆலோசகர்

அமைதியாக தீர்க்கமாக செயல்படு

செய்யவேண்டியது என்ன….. செய்யகூடாதவை என்ன என்பதில் முதலில் தெளிவாகி கொள்ளவேண்டும்…
குழப்பத்தோடும்..படபடப்போடும்..அலைபாயும் மனதோடும்…. முன்னேறனும்..முன்னேறனும்…4 பேர் மதிக்க வாழனும்..நேர்மையா இருக்கனும்…அப்படி இப்படின்னு…
பெருசா யோசித்துகொண்டும்…. பயந்துகொண்டும்.. பரிதவித்து கொண்டும்….. ஒரு தெளிவின்றி…யார் எதை சொன்னாலும்..அதனை முழுவதுமாக கவனிக்கும் திறனின்றி
எப்பொழுதும்..நகம் கடித்துகொண்டும்…சம்மந்தமில்லாமல் புன்னகைத்து கொண்டும்… யார் எதை சொன்னாலும்..இரண்டு மூன்று முறை உம் உம் போட்டுகொண்டும்….
எதையாவது சிந்தித்துகொண்டே… இருப்பதினால்..அதிக பிரச்சனைகள் வந்துவிடும்…. நம் எண்ணமும் ஈடேறாது… அதனால் ஏற்படும் மனஉளைச்சல்களும்… நஷ்டங்களும்.. நிலைகுலைய வைத்துவிடும்..
அப்படிபட்டவர்களை மீண்டும் மறுசீரமைக்க மிகுந்த சிரமமாகிவிடும்
நம்மை நாமே..அடிக்கடி பரிட்சித்துகொண்டு… மாற்றிகொள்வது நல்லது…
என்னவேண்டும்..எது வேண்டும்..என்னவாகவேண்டும் என்பதை முதலில் நன்றாக தெளிவுபடுத்திக்கொண்டு… அதில் உள்ள நன்மை தீமைகளை ஒருமுறைக்கு..பலமுறை ஆராய்ந்து…
பிறரிடம் ஒபீனியன் கேட்டாலும் அவரது பார்வையில்தான் சொல்வார்கள்..அதில் நமக்கு என்ன தேவையோ அதனை அவர் மனம் நோகாவண்ணம் எடுத்துகொண்டு… அமைதியாக தீர்க்கமாக செயல்படுவது என்றும் நன்மையே….

செல்வி….மனநல ஆலோசகர்

மகிழ்வோடு இருக்க… முயற்சிப்போம்

மனது எதிர்பார்க்கும்… நமக்கு நெருக்கமானவர்கள்..நம்மை சேர்ந்தவர்கள்…நமக்கு இதைதான் செய்யவேண்டும்..என்றும்.. நம்மிடம் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்றும்…அவரது நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும்….
ஆனால் அதனை வெளிப்படுத்தமாட்டோம்…. மனதிற்குள்ளேயே வைத்து…எதையும் காட்டிகொள்ளாமல் கண்டுகொள்ளாமல் பேசிகொண்டிருப்போம்…
ஒன்றுமே இல்லை என்பதுபோல் இருக்கும் பேச்சு… ஆனால் உள்ளே அனல் பறந்துகொண்டிருக்கும்…மனம் தீயாய் வெந்துகொண்டிருக்கும்..
எனக்கொன்றுமில்லை…உனது விருப்பம்.. விரும்பியதை பார் என்று நம்பவும் வைப்போம்…. ஆனால் ஆற்றாமை வேறுவிதங்களில் வெளிப்படும்….
இதுதான் என்றுமே ஆபத்தானது…மிக விரைவாக மனம் உடல் எல்லாம் பாதிக்கவைக்கவல்லது… உறவுகளையும் இழக்கவைக்க வல்லது…
கொஞ்சம் மாற்றிகொள்ளலாமே….. நமக்கு என்ன தேவையோ… நாம் என்ன விரும்புகின்றோமோ…அதனை நேரடியாக வெளிப்படுத்திவிட்டு அமைதியாக இருந்துவிடுங்கள்…அமைதியாவது மிஞ்சும்..
அது நடக்கிறதோ இல்லையோ…அது எதிராளியின் விருப்பத்தினை பொருத்தது…என்ன நடந்தாலும் அதனையும் ஏற்றுகொள்ளம் மனபக்குவத்தினை நாமேதான் உருவாக்கிகொள்ளவேண்டும்…
நமது விருப்பத்தினை . எண்ணத்தை வெளிப்படுத்தியாயிற்று.அதுவே பாதி நிம்மதி… நடப்பதோ நடக்காததோ…எதுவென்றாலும் ஏற்றுகொள்ளும் மனபக்குவம்…
இதைவிட வேறு என்ன வேண்டும்..மனதை உடலை..உறவை ஆரோக்கியமாக வைத்துகொள்ள…மகிழ்வோடு இருக்க… முயற்சிப்போம்…

செல்வி…..மனநல ஆலோசகர்

முகமே பிறரை கவரும்

மறக்க வேண்டியவைகளை மறக்காமலும்… 
மன்னிக்க வேண்டியவைகளை மன்னிக்காமலும்…
தேவையற்ற நடந்துமுடிந்த எல்லா விஷயங்களையும் ஒரே கலவையாக குப்பைதொட்டிபோல் மனதில் போட்டுவைத்துகொண்டு குழம்புவதாலேயே பெரும்பாலான மனநல பிரச்சனைகள் ஏற்படுகின்றது…

நாம் இருக்கும் இடத்தையும்..நம்மையும் நன்றாக அழகுபடுத்தி.. அல்லது நாம் உபயோகபடுத்தும் கைபை..பர்ஸ் போன்றவைகளில் தேவையற்றவைகளை நீக்கி… பார்த்தாலே நம்மையறியாமலேயே ஒரு மகிழ்ச்சி..ஒருவகையான திருப்தி நிம்மதி கிடைக்கும்…
மற்ற வேலைகளை உற்சாகமாக செய்வதும்..உற்சாகமாக செயல்படுவதுமாக…
முகமே பிறரை கவரும்வண்ணம் அழகாக காட்சியளிக்கும்…

இதுபோல்தான்..மனமும்…. எத்தனையோ ஆண்டுகள் வாழும் காலங்களில் எவ்வளவோ சந்திக்கின்றோம்…மகிழ்ச்சியும் துக்கமுமாக. அவை நம் மனதிலே தேங்கி கிடக்கும்….
என்னதான் வெளிபார்வையில் மற்ற வேலைகளை கவனித்துகொண்டே இருந்தாலும்.. மறக்காமல் தேக்கபட்ட சில நிகழ்வுகள் நம் உள்மனதை உறுத்தி பாதிக்கவைத்து…
நம்மை பிறர் மத்தியில் மனநிலை பாதிக்கபட்டவராகவே காட்டும்… நமது செயல்கள்..நம்மையறியாமேலேயே மற்றவர் பார்வையில் பாதிக்கபட்டவராகவே காட்டும்…சிறுக சிறுக நாம் சுயநினைவிழந்து முற்றிலும் பதிக்கபட்டவராகி விடுகின்றோம்….

நம் உடலை அன்றாடம் சுத்தபடுத்திகொள்வதுபோல்… அன்றாட நிகழ்வுகளை.. தினந்தோறும் வகைபடுத்தி…. தேவையற்றவைகளை நீக்கி…
மறக்கவேண்டியவைகளையும்..மன்னிக்க வேண்டியவைகளையும்… அன்றன்றே சரிசெய்துகொண்டு… புதிது புதிதாக நாட்களை அனுபவிக்க பழகவேண்டும்….

புத்துணர்ச்சியோடு எல்லா விஷயங்களையும் 
அனுக பழகிவிட்டாலே போதும்….
வாழும் காலம் வரை சுறுசுறுப்பாகவும் அழகாகவும் இளமையாகவும்,, மற்றவரைகவரும் வண்ணமும் வெற்றியாளராகவும் வாழ்ந்துவிட்டு போகலாம்… முயற்சி செய்வோம்…

செல்வி…..மனநல ஆலோசகர்

அழகும் வசீகரமும்

எவ்வளவுதான் திறமை நம்மிடம் கொட்டிகிடந்தாலும்… செய்யும் காரியங்கள் எல்லாம் எவ்வளவுதான் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும்
எவ்வளவுதான் காண்போரை கவரும் வகையில் அழகும் வசீகரமும் நிறைந்தவராக இருந்தாலும்….
முதலில் நம்மை நாம் நம்பவேண்டும்..நமது திறமையை..நமது சிறப்புகளை… நாம் அங்கீகரித்துகொள்ளவேண்டும்..மிக பெருமிதத்தோடு…
அந்த பெருமிதம் தன்னம்பிக்கை தேஜஸ் முகத்தில் எப்பொழுதும் பிரதிபலித்துகொண்டிருக்கவேண்டும்…. அந்த பிரதிபலிப்பானது…. எல்லோரது மத்தியிலும் நம்மை உயர்த்தவல்லது..

நம்முடைய பெருமைகளை சிறப்புகளை மேலும் மேலும் உயர்த்தவல்லது… மேலும் பல நற்செயல்களையும்…. சாதனைகளையும் செய்ய தூண்டவல்லது…
சிலர் தன்னடக்கத்தோடு இருப்பதாக நினைத்துகொண்டு…தன்னிடம் ஒன்றுமே இல்லாததுபோல்..எப்பொழுதும் தன்னைதானே தாழ்த்தியே பேசிகொண்டிருப்பர்….

செய்றதெல்லாம் சிறப்பாதான் செய்வாங்க…தன்னை குறைத்து மதிப்பிட்டு வச்சிருப்பாங்க… மத்தவங்கள பாத்து அவங்க தன்னவிட பெட்டர்ன்னு நினைப்பாங்க…
மத்தவங்க மனதார பாராட்டும்போதுகூட அந்த பாராட்டை அப்படியே முழு மனதாக சந்தோஷமாக ஏற்றுகொள்ளாமல்… வேண்டாமே.. அப்படில்லாம் இல்லையே..என்ற ரீதியில் அவநம்பிக்கையோடவே… முகத்தை வலித்து வைத்துகொள்வர்..
அது பார்க்கவே இவரை ஏன் பாராட்டினோம் என்று பாராட்டவந்தவர் மனதிற்குள் தலையிலடித்துகொள்வார்…

மற்றவர் நமது சிறு செயல்களுக்கும் பராட்டும்போது அகமும் முகமும் மலர புன்னகைத்து பாருங்கள்…. உள்ளுக்குள்ளே அந்த மகிழ்ச்சியை வேண்டுமளவு கிரகித்துகொள்ளுங்கள்..(வயிரார பிடித்த விருந்து சாப்பிடுவதுபோல்)… மாற்றங்கள் வெகு சிறப்பாக இருக்கும்…

செல்வி…மனநல ஆலோசகர்