திருவாளர் குணாதிசயம் Personality Disorders..

குணநலகுறைபாடுகள்

  1. திருவாளர் சந்தேகம்:
  2. திருவாளர் சுயகாதல்:
  3. திருவாளர் ஒத்துழையாமை:
  4. திருவாளர் தவிர்ப்பு:
  5. திருவாளர் சார்பு:
  6. திருவாளர் சமூக விரோதம்:
  7. திருவாளர் நிலையாமை
  8. திருவாளர் தனிமை


திருவாளர் குணாதிசயம்       நமது பழைய தமிழ் இலக்கிய கதைகளின் வித்தியாசமான மாறுபட்ட வினோத குணச்சித்திரங்களை சேர்த்து நகைச்சுவைக்காக சித்தரிப்பது வழக்கம் நாம் கேலியாக எடுத்து கொள்ளாமல் ஒரு குண நல குறைபாடு என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ள தமிழில் மொழி பெயர்த்து கொள்ளலாம்
மனநல மருத்துவத்தில் குண நலகுறைபாடுகள்என்றுசொல்லப்படுகிறது.அல்சிப்ரா கணக்கில் வரும் சூத்திரத்தை கற்பனை செய்வோம்.சில நேரங்களில் சில மனிதர்கள் என்று சொல்லாம்.
தனிப்பட்ட மனிதர்+சூழ்நிலை=செயல்
     இந்த மனிதர் இந்த சூழ் நிலையில் இப்படித்தான் நடப்பார் என்ற அனுமானம்.அவள் அப்படித்தான்
ஒரு உதாரணம் இன்று தாமதமாக போனால் எவனோடு ஊர் சுற்றினாய் என்று கத்துவார் நிச்சயம் இது அவரது தனி குணம் சந்தேக குணம்.
      மனிதன்+சூழ்நிலை+ந‌டத்தை=குணம்
இது போன்ற தொடர்புடைய குணங்களை கற்களாக கொண்டு கட்டப்பட்ட ஒரு தனி கட்டிடம் குணாதிசயம் என்று சொல்லப்படுகிறது
இதில் பதினோரு தெளிவாக அதிகமாக காணப்படும் வகைகள் புள்ளியியல் மனநல‌மருத்துவர்கள் கணிப்பு அனுபவத்தில் கண்டுபிடிக்கப்படுள்ளது.
பல நேரங்களில் கலாச்சார நாடு வளர்பருவ் குடும்ப சூழ் நிலைகளில் மாறுபட்ட சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் வேறுபட்டவராக முத்திரையிடப்படுகிறார் இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
விடலை வாலிப பருவ முதல் தொடக்கம் காணாமல் தொடர்ந்து மாற்றமின்றி நடைமுறையில் இந்த சிறுபான்மையினரான வேறுபட்ட குணாதிசயங்களை குண நல குறைபாடுகளாக பகுத்துள்ளார்கள்.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

PD001


திருவாளர் சந்தேகம்:

மூடி மறைத்து கொள்ளும் வெறுப்புணர்வு …
         அவ நம்பிக்கை குறிப்பாக விரோதிகள் உறவினர் இறுதியில் நண்பர்கள் பிறகு எல்லோர்மீதும் சம்பந்தமே இல்லாதவர் மீதும் கூட அவரது பேச்சு செயல் குறித்த சந்தேகம் நம்பிக்கையின்மை சிறிய நூல்களாக துவங்கி ஒரு பெரிய வலையாக கற்பனையில் பிண்ணிக் கொள்கிறார்.
அரங்க தனம்
பாதுகாப்புணர்வு
இரகசியம்
மூடி மறைத்து கொள்ளும் வெறுப்புணர்வு
காழ்ப்புணர்வு
அனைவரையும் நம்பிக்கையற்றவராக
தீயவராக விரோதிகளாக உருவகபடுத்தி கொள்கிறார்.
அனைவர்மீது வெளிபடுத்தாத மூடி மறைத்து கொள்ளும் வெறுப்புணர்வு காழ்ப்புணர்ச்சி அனைவரையும் நம்பிக்கையற்றவராக தீயவராக விரோதிகளாக உருவகபடுத்தி கொள்கிறார்.
சிறிய அவமானங்கள் வார்த்தைகளையும் மறக்காமல் ஆழமாக நீண்ட நெடுங்கால உட்பகை வளர்த்து கொள்கிறார்.தனிமனிதனாக பாதுகாப்புணர்வுடன் இனிமையான ஆழமான நட்புறவில்லாமல் தனிதீவாக வாழ்கிறார்.இவருக்கு பல நேரங்களில் எதிர்பாரத தீவிர நெருக்கடி மற்றும் சம்பவங்கள் நிகழ்ச்சியின் போது தீவிர மன நோயால் கற்பனை சந்தேக பயங்கள் குழப்பங்களால் பாதிக்கபட வாய்ப்புண்டு.
தன்னை பாதுகாத்து கொள்ள நியாயப்படுத்தி கொண்டு பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் இறங்க கூடும்.மன சிதைவு நோயின் ஒரு சிறிய பாதிப்பு வகை என இந்த குணாதிசயம் கருதப்படுகிறது.மிக தீவிர நெருக்கடிகள் மற்றும் மன நல பாதிப்புக்களின் போது இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

PD002


திருவாளர் சுயகாதல்:

விமர்சனத்தை தாங்க மாட்டாதவர்கள்……….
    ஒரு சதவீதத்தினருக்கும் குறைவாகவே பெரும்பாலும் ஆண்களிடம் காணப்படும்.
அதிகமாக சுயமுக்கியத்துவமும் உலகிலேயே முதன்மையானவன் என்ற சுய முடிவும் தனிபட்ட முக்கியத்துவத்தையும் புகழையும் எதிர்பார்கிறார்கள்.
விமர்சனத்தை தாங்க மாட்டாதவர்கள்.விமர்சகர்களை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.தீவிரமாக பெரிய பெரிய பதவிகள் வெற்றிகள் மற்றும் கற்பனைக் கொட்டாத ஒருதலை காதல் போன்ற கற்பனைகள் பகல் கனவுகள் காண்கிறார்கள்.மற்றவர்களை கேவலமாக நினைக்க கூடியவர்கள் எந்நேரமும் தன்னை துதிப்பவர்களையும் புகழ்பாடுபவர்களையும் விருப்ப கூடியவர்கள்.
      ஆனால் என்றும் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தி சுரண்ட கூடிய உண்மையில் உணர்வுபூர்வமான ஆழமான உணர்வில்லாத தொடர்புடையவர்கள்.முதுமையில் தனது உண்மையான நிலையை ஏற்றுகொள்ள முடியாமல் தவிப்பும் சோர்வும் அடைகிறார்கள்.


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

PD003

திருவாளர் ஒத்துழையாமை:
        

கோபம் எதிர்ப்பு உடன்பாடில்லாததை வெறுப்பை எதிர்மறை உணர்வை வெளிப்படுத்த பெரும்பாலானவர் நேரடியாக வெளிப்படையாக தனது ஆக்ரோசத்தை வண்மையாக தெளிவாக உணர்த்துவது இயல்பு.
மிகச்சிலர் இதற்க்கு நேர்மாறான மறைமுக எதிர்ப்பு என்ற ஒத்துழையாமை குணத்தில் உணர்த்த முயல்கிறார்கள்.குழந்தைபருவம் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம்.பயமும் தெளிவான ஆழ்மன உணர்வும் காரணங்கள்.
சமூக வாழ்வில் அடக்கபட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதமில்லாதவர்களுக்கு அவர்கள் அனைவரும் ஒத்துழையாமை செய்தால் பலனிருக்கலாம்.
ஒரு தனிமனிதனாக பள்ளியில் குடும்பத்தில் வேலையிடத்தில் பொது இடத்தில் சமூகத்தில் இந்த குறைபாடு வெளிப்படும் போது தன்னைதானே தோற்கடிக்து விலக்கபடவும் வாய்ப்பாக அமையும்.
கல்வியை வேலையை இழக்கவும் வழி வகுக்கிறது.
மற்றவரது
(பெற்றோர்/ஆசிரியர்/மேற்பார்வையாளர்)எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் உத்த்ரவுகளையும் எப்போதும் அக்கிரமம் அநீதி அதீதமானது என்று சரியாக புரியவில்லையென்பதுசொல்லவில்லையென்று மறுப்பது மற்றவரை குற்றம் சொல்வது போன்ற நடத்தை உள்ளவர்கள்.
      எதிர்ப்பவர்கள் விரக்தியும் தோல்வியும் இழப்பும் ஏற்பட மறைமுகமாக செயல்படுகிறார்கள்.
பள்ளியிலும்வேலையிடத்திலும் அயலரிடத்தும் காண்பிக்கிறார்கள்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

PD004


திருவாளர் தவிர்ப்பு:

எப்போதும் தீர்மானமில்லா குழப்பம் பொறுப்புகளை தவிர்த்தல் வழக்கம் ….
இரு பாலரிடமும் அரை சதவீதத்தினருக்கும் குறைந்த பட்சம் அபூர்வமாக காணப்படுகிறது.
குழந்தை பருவத்திலேயே தொடக்கம் தென்படுகிறது.
தன்னம்பிக்கையில்லாத சுயவெறுப்பும் சமூக திறமையற்றவன் என்ற தாழ்வு மனமும் உடையவர்கள்.
யாராவது தன்னை நேசிக்கமாட்டார்களா என்றும் நெருங்கிய நட்புக்காக ஏங்கும் ஏமாற்றமுடையவர்கள்.
பொது இடங்களிலும் புதியவர்களிடமும் அச்சமும் கூச்சமும் வெட்கமும் தாழ்வு மனப்பான்மையும் கொண்டு விலகி தவிர்க்க கூடியவர்கள்.
தன்னை தானே குற்றபடுத்தி கொண்டு ஒதுங்கி கொள்கிறார்கள்.
இலகுவாக சுலபமாக இயல்பாக இருக்க முடியாமல் இறுக்கமாக பதட்டமாக கூச்சத்துடன் எப்போதும் தவிப்பவர்கள் தன்னை கேவலமாகவோ தாழ்வாகவோ இகழ்வாகவோஎண்ணிவிடுவார்கள் சிரித்து விடுவார்கள்  என்று அச்சத்தில் ஒதுங்கி விடுவார்கள்
உறுதியாக மற்றவர்களுக்கு தன்னை பிடிக்காது தனனைமதிக்கமாட்டார்கள் தவிர்த்துவிடுவார்கள்
என்று கற்பனை செய்து கொள்கிறார்கள்.அவமானம் வந்துவிடும் என்ற அச்சம் தொடர அந்த வேதனை தவிர்க்க பயந்து அந்த சூழ் நிலையையே தவிர்த்து விடுவார்கள்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

PDOO5


திருவாளர் சார்பு:

சரியாக கணக்கெடுக்கப்படவில்லை.
குடும்பங்களில் அதிலும் பெண்களிடம் காணப்படலாம்.
மருத்துவர்களின் கவனத்திற்கு வராத அதிக உபாதையில்லாத குறைபாடு.
தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட தைர்யமும் ஆர்வமும் இல்லாதவர்
மற்றவர் மேற்பார்வையில் சொன்னால் சொல்லும் கிளிபிள்ளைபோல் இயங்கிறார்கள்.
எப்போதும் தீர்மானமில்லா குழப்பம்
பொறுப்புகளை தவிர்த்தல் வழக்கம்
ஒருதலைவரின் கீழ் உழைக்கும் தொண்டராக உத்தரவிட்டால் செயல்படும் எந்திரமாக தவறென்றாலும் மறுக்காத உடன்பாடாக எவ்வளவு கேவலமாக திட்டினாலும் எதிர்க்காது வாழ பழகி கொள்கிறார்கள்.
     தவிர்க்க கூடிய குண நல குறைபாடு உள்ளவர்களுக்கு உள்ள பதட்டமும் வேதனையும் இவர்களுக்கு இருப்பதில்லை.
அடிமை போல வாழ்ந்தாலும் வருத்தமின்றி சுகமாக இலகுவாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இவர்கள் மீது இரக்கம் கொண்டவர்கள்தான் வருத்தபட வாய்ப்புண்டு.
மருத்துவம் பார்க்க அவர்களுக்கு தேவையான அன்பு கொண்டவர் நினைத்தாலும் பாதிக்கப்பட்டவர் தனக்கு குறையிருப்பதை உணர‌வாய்ப்பில்லை.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

PD006


திருவாளர் சமூக விரோதம்:


வெட்கமோ குற்றவுணர்வோ இல்லாதிருத்தல் இவர்களது இயற்கையாகும்…
       இந்தவகை குறைபாடு தொடக்க முதல் இன்று வரை மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட ஆராயப்பட்ட ஒன்று.எல்லோராலும் வெறுக்கப்பட்டு என்றாலே  குறிப்பிடும் அளவிற்கு
பிரபலமாக வகைப்படுத்தப்பட்டது.
அதிகபட்சம் ஆண்களில் 5சதவீதத்தினார் வரைநிறைந்துள்ளது.
ஒழுக்கத்தாலும் சட்டத்தாலும் தீயவர்,கேடி,முரடன். போன்று பலவாறு இகழப்படுவார்கள்.
சமூக குற்றங்கள் நிறைய செய்வதால் சமூக விரோதி என பெயரிடும்படி நேரிட்டது.
உண்மையில் இவர்கள் தண்டிக்கப்படுவதைவிட புரிந்து கொள்ளபடவேண்டியது மிக மிக அவசியமாகிறது.
மிக முக்கியமாக விடலை பருவத்தில் வெடித்து கிளம்பும் குண நல மாற்றங்கள் அல்லது அதிகரிப்பு அதிகம்.இரக்க உணர்வு,அன்பு,பாசம்,சட்டத்திற்கும் பெரியர்கவளுக்கும் கற்றவர்களுக்கும் மரியாதை என்ற பல அடிப்படை மனித உணர்வுகளை இழந்துவிட்டவர்கள்.
தீவிர சுய நலத்தால்
மற்றவரது மனித உரிமைகளை எல்லைகளைமீறுதல்,
தன் சுயகடமை,சுயகட்டுபாடுகளை மீறுதல்,
சிறிதளவு கூட  வெட்கமோ குற்றவுணர்வோ இல்லாதிருத்தல்
இவர்களது இயற்கையாகும்.
பொய் கூறுதல்,
பொறுப்பற்றிருத்தல்,
கடன்கட்டமறுத்தல்,
பாலியல் குற்றங்கள்,
சட்டமீறல்கள்,
குற்றசாட்டுகள்,
கைதுகள்,
தண்டனைகள்,
மது கஞ்சா ஊசி மாத்திரை போதை பழக்கங்கள்,
சூதாட்டம்
போன்று இவர்களது பட்டியல் அட்டவணை இடமுடியாத நீளமுள்ளது.
விவாகரத்து,பெற்றோர் மற்றவரால் வெறுத்து ஒதுக்கபடுதல் சகசமாக நிகழ்கிறது.
தண்டனைகளும் வன்முறை சாவுகளால்,தற்கொலை கொலைகளால் மரணங்கள் நிகழ்கின்றன.
பலர் 40 வயதிற்கு பிறகு தனிய ஆரம்பித்து
சுய பச்சாதாபம்
தனிமை,
வறுமை,
மனசோர்வு,
உடல் நல பாதிப்புடன் வாழ்கிறார்கள்.
ஆனால் இந்த தீவிரவாதிகள் சிலர் தந்திரசாலிகளாக திறமைசாலிகளாக கவர்ச்சிகரமான தொழில் தாதாக்களாக வெற்றி பெற்றதும் உண்டு.
எப்படி இருந்தாலும் குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில் சமூகத்தினர் பார்த்தாலும் இந்த வகை குண நல மாற்றங்களுக்கு பாரம்பர்ய குடும்ப ஆதாரங்களும் சூழ் நிலை காரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தத்து எடுக்கப்பட்டவர்கள்,
குழந்தையாக அனாதையாக கைவிடப்பட்டவர்கள்.
சிறிய வயதில் குறும்புதனம் கொண்டவர்கள்,
பலர் எதிர்காலத்தில் சமூக விரோத குணங்களை உடையவர்களாக மாறுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மூளை மின் பதிவுகளில் மாற்றங்கள் கண்டறிப்பட்டுள்ளது.
40 வயது வரை இவர்களையும் இவர்களிடமிருந்து மற்றவர்களையும்பாதுகாப்பது அவசியமானது.
மன நிலை நிலைப்படுத்தும் மருந்துகள்.சிலருக்கு வேகத்தை தணிக்கஉதவி செய்கிறது.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

PD007


திருவாளர் நிலையாமை


சிந்தை/செயல்/வாக்கு என்பதில் ஒருமுகம் இல்லாமல் நிலையற்ற ஊசல் போல செயல்படுகிறார்கள்
அதிகபட்சம் 3 சதவீத்தினரிடம் குறிப்பாக பெண்களிடம் அதிகமாக பரவலாக காணப்படுகிறது.
தீவிர குணமாறுபாடு உடையவர்கள்
சிந்தை/செயல்/வாக்கு என்பதில் ஒருமுகம் இல்லாமல் நிலையற்ற ஊசல் போல செயல்படுகிறார்கள்
எனவே என்றும் நிலைக்கும் நிலையாமை
அதாவது இவர்களுடைய ஊசலாட்டம் ஒரு போதும் மாறுவதில்லை என்பார்கள். 
சுய கருத்து அதாவது தான் எனபது சில நேரம் மிக மிக தாழ்வாகவும் நேர்மாறாக சில நேரம் மிக மிக உயர்வாகவும் இரண்டு எல்லையில் ஊசலாடும் அதனால்தான்  நிலையாமை என்று வைத்தார்கள் போல  மதில் மேல் பூனை இடம் தாவுமா/வலம் போகுமா என்று புரியாது.சில நேரம் இவர்கள்  இரண்டுங்கெட்டான் எல்லை கோட்டில் நிற்கிறார்கள்.
இதே போல் மற்றவர் மீது இவர் கொண்ட கருத்தும் காதலும் உறவும் உணர்வும் மதிப்பும் வேகமான மாற்றங்களுக்கு உள்ளாகும்.இவர்களுடைய சிந்தனை கருப்பு அல்லது வெள்ளை,உண்டு அல்லது இல்லை என்று நேர்மாறாக மாறும்.போற்றி புகழ்வார்கள் சிறிய ஏமாற்றம் தாங்காமல் அவரையே தூற்றி இகழ்வார்கள்.அதே  போல தன்னையும் அதிகமாக பாராட்டி கொள்வார்கள்.சிறிய தோல்வியில் தன்னையே மிக கேவலமாக இகழ்ந்து கொள்வார்கள்.
அதைபோல மாறுகின்ற சிந்தனைகளும் செயல்களும் உணர்வுகளும் நிலையான உறவுகளிலிருந்து இவர்களை நீடிக்க நிற்க விடுவதில்லை.
மிக சிறிய ஏமாற்றத்தில் சார்புணர்வு,ஒட்டிகொள்ளுதல்,தவிர்த்தால்  ஆக்ரோசம் அவமதிப்பது பிரச்சனை செய்வது பரிபூரண அன்பிற்காக கவனத்திற்காக ஏங்குவது போராடுவது என்ற புயல் வேக உறவு தாக்கத்தையும் மீறி இவரோடு நீடித்த உறவாகவோ நட்பாகவோ இருந்தவர் மிக அபூர்வம்.
அடிக்கடி தற்கொலை மிரட்டல்களை,முயற்சிகள்,சுயகாயம்,கைகளில் கீறி கொள்வது.
இவரது முன் கையில் ஏணி போல படிகள் காயதழும்புகளை காணலாம்.
உண்மையான நெருக்கடியான துன்பமான நேரங்களில் மனசிதைவு மன எழுச்சி போன்ற தவிர மன நோய் தோற்றங்கள் ஏற்பட்டு விரைவில்மாறிவிடலாம்.பயம்,பீதி,மனபதட்டம்,மனசோர்வு,மன அதிர்ச்சி போன்ற தற்காலிக தாக்கங்களும் ஏற்படும்.
போதை பழக்க வழக்கங்களும் உண்டாக வாய்ப்புண்டு.
நட்புறம் திருமண உறவும் நீடிப்பது அபூர்வம் அதிகபட்சம் இந்த குறையுடையவர்களில் சதவீதம் தற்கொலையில் மரணமடைகின்றனர்.
எல்லா விதமான மன நல மருத்துகளும் இவர்களுக்கு தற்காலிக அறிகுறிகளை தணிக்க உதவும்.
நீண்ட‌கால மருத்துவ சிகிச்சை எதுவும் பலனிளிப்பதில்லை.
மன நல ஆலோசனைகளால் தற்கொலை முயற்சிகளை தள்ளிபோட வாய்ப்புண்டு.
40 வயதிற்கு பின் இயற்கையாக தனிய வாய்ப்புண்டு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
PD008திருவாளர் தனிமை:

இரகசியமாக தனிமையாக செயல்படுகிறார்கள்…..
தானே விலகி ஒதுங்கி தனிமைப்படுத்திகொண்டு
சமூக தொடர்பின்றி தனி தீவு போல வாழ்கிறார்கள்.
சமூக சமுதாய விழாக்கள்,உடலுறவு,திருமணம்.குடும்பம் போன்ற பந்த பாசங்கள் நட்பு றவு எதிலும் மகிழ்ச்சியும் ஆர்வமும் இல்லாமல் விலகி இருப்பார்கள்.
SOLITARY இயந்திர தொடர்புடன் மனித் தொடர்பின்றி இயந்திரம் போலவே வாழவிரும்புகிறார்கள்
சமூக பரிமாற்றம் திறமைகளில்லாமல் குளிர்ந்த உணர்வற்ற மரக்கடை போன்ற எந்தவித உணர்ச்சி கருத்து வெளிபாடு இல்லாமல் ஒதுங்கி வாழ்கிறார்கள்.
வாலிப  முதல் தொடர்ந்து மாறாமல் நீடிக்கும் இந்த குணங்களை அதிகபட்சம் ஒரு சதவீதத்தினர் குறிப்பாக ஆண்களிடம் தென்படுகிறது.இது எளிமையான மனசிதைவின் குறைவான தாக்கத்தினால் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.மருத்துவ சிகிச்சைகள் எதுவும் இதுவரை இவர்களுக்கு பெரிய மாற்றங்கள் ஒன்றும் உருவாககவில்லை.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

PD009

திருவாளர் வித்தியாசம்:

  சமூக சூழ் நிலைகள் விழாக்கள் போன்றவைகளை சங்கடம் தவிர்ப்பு என்று தன்னை தனிமைப்படுத்தி கொள்கிறார்கள்.
வித்தியாசமான சிந்தனைகளால் அபூர்வமான குழப்பமான எண்ணங்கள்,
உதாரணமாக,மந்திரம்,மாயம்,சித்து வேலை,ஆத்மீக சக்தி,சித்தி,ஆருடம்,இது போன்ற பல நம்பிக்கைகளில் ஆழமாக சிநதிக்க தொடங்குதல்,ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளில்
இரகசியமாக தனிமையாக செயல்படுகிறார்கள்.
சுற்றிவளைத்து புரியாமல் ஊடகமாக,விட்டுவிட்டு தொடர்பின்றி வித்தியாசமாக பேசுவதால் பலரால் ECCENTRIC அதாவது ODD MAN OUT என்றும் வித்தியாசமான மனிதர் என்று ஒதுக்கபடுகிறார்கள்
நெருக்கடியான துன்பமான நேரங்களில் மனசிதைவு போல கற்பனை பயங்களும் எல்லோரையும் எதிரியாக கற்பனை செய்தும் தனது மனதிற்கும் உடலுக்கும்  பெயருக்கும் தீவினை செய்வதாக கற்பனை கருத்துகளும் கொண்டு குழப்பமடைய வாய்ப்புண்டு
திருமண உறவு,  நட்புறவு சமூக உறவு,வேலை போன்ற பல சமுதாய திறமைகளில் பாதிப்படைகிறார்.
இது மனசிதைவின் ஒரு வகையான இருக்கலாம் என்றும்
3 சதவீதத்தினரிடம் காணப்படுகிறது என்றும் கருதப்படுகிறது.
சிறிது அளவு மன நல மருத்துகளால் சிறிது பலன் இவர்களுக்கு கிடைக்கலாம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX