எதிர்பார்ப்பு ஏமாற்றம் அவமானம்

                         எதிர்பார்ப்பு

ஏமாற்றம் குறைய வேண்டுமானால் எதிர்பார்ப்பை குறைத்துகொள்
செலவு குறைய வேண்டுமானால் ஆசைகளை குறைத்துக்கொள்
தூங்குபவன் ஒரு பொழதும் எதிலும் வெல்வதில்லை
ஏங்குபவனும் ஒரு பொழதும் எதிலும் வெல்வதில்லை
எல்லார் தலைவலிகளுக்கும் காரணம் எதிர்பார்ப்பே
எல்லா இதயவலிகளுக்கும் காரணம் ஏமாற்றமே
சிறப்பான் வெற்றியை சத்திக்க செயல்படுவோம்
மோசமான தோல்விமையும் சமாளிக்க தயாரயிருப்போம்
சிலர் தமக்கு இருப்பதை மகிழ்ந்து ஒங்கி வாழ்கிறார்
சிலர் தம்மிடம் இல்லாததை நினைத்து ஏங்கி அழகிறார்
விதையை விதைக்கும் போது ஒருவரும் உதவுவதில்லையே
அறுவடை நடக்கும் போது ஒராயிரம் பேர் வருவாரே
நாம் விரும்பியது நமக்கு கிடைப்பது தற்காலிக வெற்றி
நம்க்கு தேவையானது மட்டுமே கிடைப்பது நிரந்தர வெற்றி
கண்மூடி மந்திரம் சொல்லி காலம் கழித்தால் வரமாட்டான்
நிலமிறங்கி உடல் வாட நாம் உழைத்தால் அவன் வருவானே
உலருக்கு ஒளி கொடுக்கும் விளக்கின் அடியிலே இருள் இருக்கும்
உலருக்கு வழி காட்டும் அறிஞரின் மனதிலேம் துயர் இருக்கும்
மேட்டிலே பயிர் செய்தவன் அறுவடையில் ஏமாறுவான்
மேனி யிலே மயங்கியவன் முதுமையிலே ஏமாறுவான்.
——————————————————————–
               ஏமாற்றம்

பாத்திரம் சிறிதாக இருந்தால் அளப்பதும் குறைவாக இருக்கும்
எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால் ஏமாற்றமும் சிறிதாக இருக்கும்
சிறுபசி தாங்காத சிறுமையர் பலப்பலர் அவர்
அறவழி இதுவென அறியாத கயவரே
குறைந்த வயது நிறைந்த வயது என்று ஏளனம் கூடாது
குறைந்த விலை நிறைந்த அழகு என்று ஏமாறக் கூடாது
அன்பும் பொருளும் இலவசமாக வருகிறது என ஏமாறக் கூடாது
அன்பும் பொருளும் இலவசமாக வருகிறது என ஏமாறக் கூடாது
அலையின் மீது ஙரையாடுவது போல ஆசையிலாடுது உலகம்
கரையின் மீது அலையாடுது போல ஒசையிலாடுது இதயம்
வென்றவர்கள் அடக்கத்துக்காக சொல்வது எனக்கு அதிட்டம்
தோற்றவர்கள் ஆத்திரத்தில் சொல்வது அவறுக்கு அதிட்டம்
வறியவர்களுக்கு தகிப்பு வயிற்றிலே
வளமையர்களுக்கு தகிப்பு தலையிலே
எளியவர்களுக்கு உறங்க படுக்கையில்லை
இருப்பவருக்கு படுக்கையிலே உறக்கமில்லை
பணபலம் குறைய குறைய உடல் நலம் குறையும்
பணபலம் நிறைய மனநலம் குறையும்
நமக்கு பதவிகிடைத்தால் நம் தகுதிக்கு தாமதம் என்கிறோம்
பிறர்க்கு பதவி கிடைத்தால் அவர் தகுதிக்கு அதிகம் என்கிறோம‌
               
==========================================

அவமானம்


நகையென்ற அழகுமலர் அன்பென்ற விதையில் முளைக்கிறது
பகையென்ற ஆலமரம் அவமானமென்ற விதையில் விளைகிறது
அன்னை இறந்தால் குழந்தை அழும் தலைவன் இறந்தால் ஊரே அழும்
அன்னை விழுந்தால் குழந்தை சிரிக்கும்
தலைவன் விழுந்தால் ஊரே சிரிக்கும்
மார்பின் ஆடையெடுத்து முகம் மறைந்தவளென
பொருளுக்காக மானமிழப்பார் சிலர்
இருப்பின் ஆடையவிழ்த்து தலையில் முடிந்தவனாக 
பதவிக்காக கொள்கையிழப்பார் சிலர்
பழுதற்ற வருமானம் புகழ்பெற்ற வெகுமானம் தரும்
முறையற்ற வருமானம் அளவற்ற அவமானம் தரும்
அனுமானம் என்பது தெரியாத பகுதிகளை இட்டுநிரப்புவது
அவமானம் என்பது தெரியாத இடங்களில் மூக்கை நுழைப்பது
வெகுமானம் என்பது செய்த வேலைக்கு கிடைக்கும் பரிசு
அவமானம் என்பது செய்ய மறந்த வேலைக்கு கிடைக்கும் பரிசு
கற்பிழந்த பெண்ணை விட கரைபடிந்த நீதியின் கை இழிவானது
கொலை கையை விட ஊழல் செய்த தலைவன் கை இழிவானது
பொய் பேசியதால் உருவான பகைகள் குறைவு
உண்மை பேசியதால் உருவான எதிரிகள் அதிகம்
ஒரு வாழையின் அடியிலே அடுத்த வாழைக்கு குருத்திருக்கு
ஒரு போரின் முடிவலே அடுத்த போருக்கு கருத்திருக்கு
குப்பைகளை சேர்த்துக் கொண்டிருந்தால் துர்மணம் வீசும்
குற்றங்களை பார்த்துக் கொண்டிருந்தால் துயரமனம் அழும்

சோதனை இழப்பு கண்ணீர் சஞ்சலம்

       சோதனை
துரத்திடும் துயர் வெள்ளம் வருத்திடும் போதும்
மரித்தல் அல்ல அவை எல்லாம் சகித்தலே தகுதி

சுத்த நல் சுவர்ணமாக சோதித்து எடுக்க
வைத்த நல் அக்கினியெனவே நம் துயரை மதிப்போமே

காதலென்ற மலர் பறிக்கையில் எதிர்ப்பென்ற முள்  குத்தும்
வெற்றியென்ற மலர் பறிக்கையில் தோல்வியென்ற முள் குத்தும்

வளமையில் வாழ்பவர் ஒழுக்கம் காப்பது சுலபம்
தூரத்தில் நிற்பவர் துணிச்சல் பேசுவது சுலபம்

பணத்துக்காக மணம் செய்தவன்,அவன் மணைவி கையால் உதைபடுவான்
பணம் சேர்க்காமல் மணம் செய்தவன் மணைவி காலால் வதைபடுவான்

    ஆடை நனையாமல் அருவி குளிப்பதேது
    அல்லலடையாமல் அனுபவம் அடைவதேது
   
வேர்வை நனையாமல் வெற்றி காண்பதேது
    வீழ்ச்சியடையாமல் பாடம் கற்பதேது

வெற்றிகள் என்பது மைல்கல்லே பயணம் நிற்பதில்லையே

தோல்விகள் என்பது தடைக்கல்லே பயணம் தொடரட்டுமே

நமக்கு வருபவை வேதனைகளல்ல,அவை சோதனைகள்
நாம் சுமப்பது சிலுவைகளல்ல அவை புகழ்க்கு மகுடங்கள்

===========================================

   
துயரம்


ஆடுவதும் நாடகமே ஆளுக்கொரு பாத்திரமே இயக்குவபவன் இறைவனே
போடுவதும் வேடமே ஆளுக்கொரு துயரமே மயங்குபவன் மனிதனே

மகிழ்வு வரும் போது ஒற்றையாக வருகிறது
துயரம் வரும் போது மந்தையாக வருகிறது

அருகில் இருக்கும் ஆனையும் தூரம் போனால் சிறுத்துப் போகும்
மனதில் உறுத்தும் துயரமும் காலம் போனால் காணாமல் போகும்

அனுபவமே சிறந்த ஆசிரியன் ஆனால் சம்பளம் தான் அதிகம்
தோல்வியே  சிறந்த அனுபவம் ஆனால் துயரம் வாழ்வை கெடுக்கிறது

துக்கத்தில் நடப்பவன் கால்கள் கூட முன்னோக்கியே நடக்கும்
துக்கத்தில் கிடப்பவன் நினைவுகள் அது பின்னோக்கியே கிடக்கும்

வாழும் வரையிலே என்றென்றும் நீளும் நூல்களே துன்பங்கள்
வாழ்வு ஆடையிலே இடையிடையே ஓடும் நூல்களே இன்பங்கள்

மகிழ்ச்சிகளில் இனிய மகிழ்ச்சி மழலையின் சிரிப்பு
துயரங்களில் கொடிய துயரம் மணைவியின் சோரம்

ஒவ்வொரு சுவருக்கும் கதவு வைத்தே வீட்டை கட்டுவான்  மனிதன்
ஒவ்வொரு துயருக்கும் விடிவு வைத்தே உலகை படைத்தான் இறைவன்

துயரம் பகிரப்படும் போது ஒரு பாதி குறைகிறது
மகிழ்வு பகிரப்படும் போது இரண்டாக வளர்கிறது
                     

இழப்பு


சாலையில் வரும் திருப்பங்கள் ஊருக்கு வழி காட்டும்
வாழ்வில் வரும் திருப்ப்ங்கள் உணர்வுக்கு வழிகாட்டும்
சுட்டதோர் சட்டி கை விட்டிடல் என 
துறப்பது இவ்வுலகம் மற‌ப்பதற்குத்தானே
நேற்று என்பது இறந்து போன உடலின் துர்மணம் 
இன்று என்பது நாளை மலரும் மலரின் நறுமணம்
இறந்ததை புதைப்போம்
இருப்பதில் நிறைவு கொள்வோம்
நடந்ததை மறப்போம்
நடப்பதில் மகிழ்வு கொள்வோம்
ஒரு கதவு மூடினால் மறுகதவு திறப்பான்
ஒரு தீமை நடுவிலும் மறு நன்மை  வைப்பான்
இறப்புக்கு பின் வாழ்வு உண்டா அது தெரியாது
இழப்புக்கு பின் வாழ்வு உண்டு இது சத்தியம்
தோற்றவன் தன் நாட்டை இழக்கிறான்
வென்றவனோ தன் நிம்மதியை இழக்கிறான்
துக்கம் என்பது தூக்கம் கெடுக்கும்
துயரம் என்பது ஆக்கம் கெடுக்கும்
பயம் என்பது பயணத்தை தடுக்கும்
பதட்டம் என்பது பண்பை தடுக்கும்
அலை மீறும் போது மூழ்காத படகுகளே கரை சேர்கின்றன‌
துயர் மீறும் மூழ்காத மனிதர்களே கரை சேர்கின்றனர்
இறந்த கால்தையே சிந்திப்பவனுக்கு நிகழ்காலமில்லை
நிகழ் காலத்தில் சிந்திக்காதவனுக்கு எதிர்காலமேயில்லை
தன்னை மட்டுமே நேசிப்பவன் உள்ளம் நோய் வசப்படும்
தன்னை கூட நேசிக்காதவன் உயிரே நோய் வசப்படும்
நாற்புரம் நெருப்பு எரியில் தேளும் தன் வாற்புற நஞ்சால் மாய்ந்திடும்
தலைவன் நான் அந்த சுதந்திரமும் இல்லாத என் தலைவிதி கொடிதே
மூடர்களி வருந்துகிறார்
முயல்பவர்களோ தொடர்கிறார்
முரடர்கள் அழிக்கிறார்
முனைபவரோ திருத்துகிறார்
பொறாமை என்பது புற்று நோய் போல வளர்ந்து வளர்ந்து உயிரழிக்கும்
ஆற்றாமை என்பது காச நோய் கரைத்து கரைத்து உடலழிக்கும்
இருளின் இரவுக்கும் விடிவுண்டு கதிராலே
இதயத் துயருக்கும் முடிவுண்டு கடவுளாலே
நீ விழம் போது அழது வருந்தாதே
பிறர் விழம் போது சிரித்து மகிழாதே
நத்தை தன் வீட்டை முதுகில் சுமந்து திரிகிறது
மனிதன் தன் துயரை முதுகில் சுமந்து திரிகிறான்.
===========================================================            
கண்ணீர்

தண்ணீர் வீழ்ந்தால் அழகு கண்ணீர் வீழ்ந்தால் அழிவு 
நதி நடத்தால் கடலுக்கு விதி நடந்தால் மரணத்துக்கு
எத்தனை பெருமை வந்தாலும் இளமையை மறக்காதே
எத்தனை சுமைகள் வந்தாலும் இமையை நனைக்காதே
மழைவரும் போது தண்ணீரால் கரையாமல் நிற்பதுனே மலையாகும்
துயர் வரும் போது கண்ணீரால் கரையாமல் நிற்பவனே மனிதனாகும்
உறுப்பே இழந்தாலும் அழாதவர் இருக்க‌
செருப்பு அறுந்ததற்கே அழவது ஏன்
தாயே மறைந்தாலும் கலங்காதவர் இருக்க‌
நாய் இறந்த்தற்கே அழவது ஏன்
பாலுக்கு அழம் மழலை
பசித்து கூழக்கும் அழம் வறுமை  
மழைக்கு அழம் நிலம்
அனைக்கும் அன்புக்கு அழம் பெண்மை
வானத்தின் கண்ணீர் மழையினிலே
நிலத்தின் கண்ணீர் நதியினிலே
இதயத்தின் கண்ணீர் பிரிவினிலே
ஏழையின் கண்ணீர் ஏக்கத்தினிலே
மண்ணில் எப்படி தண்ணீர் வந்தது என்றான் மனிதன்
அது புதைத்த ஏழைகளின் கண்ணீர் என்றான் இறைவன்
மண்ணீல் எப்படி தங்கம் வந்தது என்றார் ஆசிரியர்
சென்ற மனிதன் மண்ணில் புதைத்தது என்றான் மாணவன்.
                                      
==========================================

 சஞ்சலம்


அறிவின் வழி சென்றவர் சிகரத்தை தொடுவார்
உணர்வின் வழி சென்றவர் துயரத்தை தொடுவார்
சலனம் என்பது காற்றிலாடும் உடையென காமத்திலாடும் மனம்
சஞ்சலம் என்ப்து காற்றிலாடும் தீபமென கவலையிலாடும் குணம்
சும்மா கிடந்த தூசியைகிளப்பி விட்டு பார்க்க முடியவில்லை என்று அழகிறோம்
சும்மா கிடந்த பிரச்னையை தூண்டி விட்டு தீர்க்க முடியவிலலை என்று அழகிறோம்
நாக்கு கதந்தவன் உணவைக் கசந்ததென்பான்
தலை சுற்றினால் பூமி சுற்றுகிறதென்பான்
வாழ்வு கசந்தவன் வையகம் கசந்ததென்பான்
கண் போனவன் உலகம் இருளென்பான்
ஆடுவார் கூடுவார் பாடுவார் ஒரு அர்த்த மின்றியே வாழ்வார்
தேடுவர் நாடுவார் ஒடுவார் ஒரு அமைதியின்றியே தாழவார்
பொல்லாத விலங்குகள் குலைப்பதனால் மழையும் நிற்பதில்லை
கல்லாத கயவர்கள் விமர்சனத்தால் நல்ல மனமும் மலைப்பதில்லை
சலசலவென்று ஒடிக்கொண்டிருக்கும் அருவியில் நீர் நிற்பதில்லை
கலகலவென்று ஆடிப்பாடி உழைக்கும் உள்ளத்திலே கண்ணீர் சுரப்பதில்லை
திட்டமில்லாத வாழ்க்கை திக்கு தெரியாத கப்பல்
கடன்பட்ட வாழ்க்கை ஒட்டை விழந்த கப்பல்
நமது சந்தேகங்களே நமது எதிரிகள்
நமது நம்பிக்கைளே நமது நன்பர்கள்.
காலம் என்பது காற்று போல சுழன்று மாற்றும்
மேலது கீழாக கீழது மேலாக மாற்றிடும் தோற்றம்
விழம் போது பாதை குறையென்பார் பக்கத்திலிருப்பவர் குற்றமென்பார்
வீழம் போது விதி நடந்ததென்பார் மற்றவர் சதி நடக்கிற தென்பார்
நதியை கடலிழக்கும் மதியை விதியிழக்கும்
விதியை விழியிக்கும் விழியை காமம் இழக்கும்
வாழ்வு என்பது ஆண்டவன் அருளால் வந்தது
தாழ்வு என்பது அவவைன் தவறால் வந்தது
இரவு நேர சாலை போல ஏழைத்தலைவன் தனிமை
இரவு நேர பூங்கா போல உலக அழகியின் தனிமை
கருவிலே சிதைந்த மழலையென கனவிலே அழிந்தது பலர் வாழ்வு
எருவிலும் இழிந்த உயிரென கற்பனையில் கலைந்தது பலர் வாழ்வு
சில வெற்றிகளின் விளைவுகள் தோல்வியை விட மோசமானைவ‌
சில அறிவுகளின் விளைவுகள் அறியானையை விட அழிவானைவ‌
இலைகள் மலர் களாவதில்லை
காமம் காதலாக மலர்வதில்லை
கற்கள் கனிகளாவதில்லை
கயவர் ஞானம் அடைவதில்லை
காலால் இடறி வீழ்ந்தவரை விட நாவால் இடறி விழந்தவர் அதிகம்
மதுவால் மதி இழந்தவரை விட காமத்தால் இழந்தவர் அதிகம்.
==================================================================                      
எதிர்பார்ப்பு

ஏமாற்றம் குறைய வேண்டுமானால் எதிர்பார்ப்பை குறைத்துகொள்
செலவு குறைய வேண்டுமானால் ஆசைகளை குறைத்துக்கொள்
தூங்குபவன் ஒரு பொழதும் எதிலும் வெல்வதில்லை
ஏங்குபவனும் ஒரு பொழதும் எதிலும் வெல்வதில்லை
எல்லார் தலைவலிகளுக்கும் காரணம் எதிர்பார்ப்பே
எல்லா இதயவலிகளுக்கும் காரணம் ஏமாற்றமே
சிறப்பான் வெற்றியை சத்திக்க செயல்படுவாம்
மோசமான தோல்விமையும் சமாளிக்க தயாரயிருப்போம்
சிலர் தமக்கு இருப்பதை மகிழ்ந்து ஒங்கி வாழ்கிறார்
சிலர் தம்மிடம் இல்லாததை நினைத்து ஏங்கி அழகிறார்
விதையை விதைக்கும் போது ஒருவரும் உதவுவதில்லையே
அறுவடை நடக்கும் போது ஒராயிரம் பேர் வருவாரே
நாம் விரும்பியது நமக்கு கிடைப்பது தற்காலிக வெற்றி
நம்க்கு தேவையானது மட்டுமே கிடைப்பது நிரந்தர வெற்றி
கண்மூடி மந்திரம் சொல்லி காலம் கழித்தால் வரமாட்டான்
நிலமிறங்கி உடல் வாட நாம் உழைத்தால் அவன் வருவானே
உலருக்கு ஒளி கொடுக்கும் விளக்கின் அடியிலே இருள் இருக்கும்
உலருக்கு வழி காட்டும் அறிஞரின் மனதிலேம் துயர் இருக்கும்
மேட்டிலே பயிர் செய்தவன் அறுவடையில் ஏமாறுவான்
மேனி யிலே மயங்கியவன் முதுமையிலே ஏமாறுவான்.

குற்ற உணர்வு சந்தேகம் மனநோய்

             

குற்ற உணர்வு


வருந்தாதார் வாழ்வு திருந்துவது இல்லை
திருந்தாதார் வாழ்வு அரும்புவதும் இல்லை
தோற்றவன் இன்று அழுகிறான் கொன்றவன் நாளை அழுவான்
ஏமாந்தவன் இன்று அழுகிறான் ஏமாற்றியவன் நாளை அழுவான்
கோபமும் காமமும் வெளிப்பட்ட பின் வெட்கமே தரும்
பாபமும் பழியும் வீழ்ந்து விட்ட பின் வேதனை தரும்
பொருந்தாத குணத்துக்கு மருந்தும் இல்லை
வருந்தாத மணத்துக்கு வாழ்வும் இல்லை
கற்பை விற்று வாங்கிய உடுக்கையில் மானமில்லை
நட்பை விற்று வாங்கிய படுக்கையில் உறக்கமில்லை
துணிவு உள்ளவர்க்கே பணிவு வரும்
துணி உடையவர்க்கே நாணம் வரும்
சட்டமும் நீதியும் குற்றம் செய்த பின் மனிதனை தண்டிக்கும்
குணமும் ஒழுக்கமும் குற்றம் செய்ய விடாது மனித கண்டிக்கும்
மன்றத்தில் நீதியை மறைத்தால் அது விட்டு விடும்
நெஞ்சுக்கு நீதியை மறைத்தால் அது சுட்டு விடும்
கரு உருவானதை ஊர் அறியும் முன்னே அதன் தாய் அறியுமே
தவறு செய்வதை உலகு அறியும் முன்பே உன் மனம் அறியுமே
நஞ்சை உண்ட பின்னே மருந்தை தேடும் பித்தர் மனமே
பாவம் செய்த பின்னே பரிகாரம் தேடும் பேதை மனமே
                
======================================================

சந்தேகம்


நம்பிக்கையில்லாத மனிதரிடம் நட்பு வைத்தால் நாளெல்லாம் துயரமாகும்
சந்தேகமுள்ள கணவனுடன் வாழ்ந்து வந்தால் தேகமெல்லாம் காயமாகும்
சிலந்தி போல சதி வலை பின்னி சாதிக்க வேண்டாம்
நாகம் போல எதிரியென எல்லோரையும் நிந்திக்க வேண்டாம்
ஆண்டவன் இல்லையென்று கூட வாதிக்கலாம்
அன்னையின் பாலை சந்தேகிக் கூடாது
ஆலயத்தின் கோபுரத்தை கூட சோதிக்கலாம்
அன்பரசியின் கற்பை சந்தேகிக்கக் கூடாது
நம்பக் கூடாதவர்களை நம்புவதால் பலர் வாழ்வில் விபத்து
நம்ப வேண்டியவர்களை நம்பாததால் பலர் வாழ்வில் பேராபத்து
அறிவாளி போல வேடம் போட்டால் நம்புகிறார் நன்பர்கள்
நோயாளி ஆகி அல்லல் பட்டால் நடிக்கிறேன் என்கிறார்கள்
நட்பிலே சந்தேகம் நாளெல்லாம் கடுங்கோபம் நோயைக்கொடுக்கும்
பார்வையிலே சலனம் பண்பிலே சஞ்சலம் வாழ்வைக் கெடுக்கும்
அளவுக்கதிகமான அமுது நம்தேகத்தில் நஞ்சாகிறது
அளவுக்கதிகமான அன்பு சந்தேகத்தில் வஞ்சமாகிறது
அழகான பெண்கள் தன்னை பிறர் நேசிப்பதாகச்சந்தேகப்படுகிறார்கள்
அவர்களின் கணவன்கள்
அவள் பிறரை நேசிப்பதாகச் சந்தேகப்படுகிறார்கள்
இதயங்களை இணைக்கும் பாலம் அன்பும் காதலும்
இணைந்தவர்களை பிரிக்கும் காலன் அகந்தையும் சந்தேகமும்
        
=======================================================
மனநோய்

காமம் என்ற கள்ள நோயும்
கவலை என்ற உள்ள நோயும் உயிர் அழிக்கும்
தேவையற்ற பொருள்கள் நிறைந்தால் வீடும் குப்பையாகும்
தேவையற்ற எண்ணங்கள் நிறைந்தால் மனமும் குப்பையாகும்
அரை நொடி அதற்குள்ளே நரகென நம் உள்ளம்
மாறிடும் நொடி தோறும் வரும் தீய நினைவாலே
நித்தம் நித்தமொரு புத்தியுடன் பித்தம் தடுமாற வேண்டாம்
புத்தம் புதியதொரு சக்தியுடன் சித்தம் உறுதிபெற வேண்டும்
எல்லா இடத்திலும் தானே இருக்க முடியாததால் தாயை படைத்தான்
எல்லாம் திருடரையும் தானே திருத்த முடியாததால் நோயைபடைத்தான்
நெருப்பு உடலை தீண்டும்
வெறுப்பு உள்ளத்தை தீய்க்கும்
கருப்பு கண்ணை மறைக்கும்
காமம் அறிவை மயக்கும்
விரும்பாது தரப்பட்ட பொருளுக்கு காசு கிடைக்காது
கேட்காது சொல்லப்பட்ட அறிவுக்கு காது கிடைக்காது
ஏன் என்ற கேள்வியில் ஞானம் பிறந்தது
எப்படி என்ற கேள்வியில் மானம் அழிந்தது
சக்கையையை விட்டு விட்டால் கரும்பு தித்திக்கும்
சலிப்பை விட்டு விட்டால் வாழ்வு தித்திக்கும்

தாமதம் அச்சம் பயம் தயக்கம்

                             
தாமதம்

தனித்து போடப்பட்ட இரும்பு துருபிடித்து அழிகிறது
தள்ளி போடப்பட்ட செயலும்   து ருபிடித்து உருமாறி அழிகிறது
நீ தூக்கிப் போடும்  குப்பைகள் உன் காலை வந்து இடறும்
நீ தள்ளிப் போடும் செயல்கள் உன் வாழ்வை வந்து இடறும் 
தாமதமாக உறங்கி விரைவாக எழுந்தால் சுறுசுறுப்பு வரும் 
தாமதமாக தொடங்கி விரைவாக செய்தால் பரபரப்பு வரும்
உண்மை புறப்பட்டு வாசல் வருவதற்குள்
கயமை வானத்தை சென்று விடும்
வாய்மை வாய் திறந்து பெசுவதற்குள்
வ்லிமை உலகத்தை விழுங்கி விடும்
உழைக்காமல் ஏய்த்து வாழ்வார் வாழ்வு வாலறுந்த நரி  போலாடுமே
உறங்கியே  ஏய்த்து வாழ்பவர் வாழ்வு வாலறுந்த நரி போலாடுமே
நாளை ஒன்று தருகிறேன் என்றவன் என்றும் தருவதில்லை
நாளை ஒன்று செய்கிறேன் என்றவன் ஒன்றும் செய்வதில்லை
கயிற்றில் தொங்கும் உயிர்கள் மூச்சடைத்து சாகும்
காலத்தால் தேங்கும் காரியங்கள் பெச்சழிந்து சாகும்
காலம் என்பது பல காரியங்களை ஆற்றும்
காலதாமதம் என்பது பல காயங்களை வளர்க்கும்
       

==========================================

அச்சம்


ஆத்திரமென்பது கருனை யென்ற கண்களுக்கு திரையாகும் 
அச்சமென்பது முயற்சியென்ற கால்களுக்கு விலங்காகும்
ஏழையாய் பிற‌ந்து நிச்சயம் உன் குற்றமல்ல 
கோழையாய் இருப்பது நிச்சயம் உன் குற்றமே  
கற்றவர் பழிக்கு அஞ்சுவார்
கல்லாதவர் சபைக்கு அஞ்சுவார்
சோம்பர்கள் உழைக்க அஞ்சுவார்
கயவர்கள் எதற்கு அஞ்சுவார்
மழைக்கு பயந்து குடை பிடித்தோம்
காற்றுக்கு பயந்து கதவு அடைத்தோம்
வழிக்கு பயந்து துணை சேர்த்தோம்
வாழ்வுக்கு பயந்து பொருள் சேர்த்தோம்
புத்தியில்லாதவன் கை பிடித்த  கத்தியும் பேரழிவே
மந்தியாணவன் கை பிடித்த தீக்குச்சியும் பேரழிவே
மின்சாரத்துக்கு கை பயப்படும்
சம்சாரத்துக்கு கணவர் பயப்படுவார் 
விபச்சாரத்திற்க்கு கற்பு பயப்படும்
கலாச்சாரத்திற்கு கயமை பயப்படும்
தற்காப்பும் முற்காப்பும் அறிவினால் வந்த சொந்த புத்தி
ஒதுங்குதலும் பதுங்குதலும் அச்சத்தினால் வந்த மந்த புத்தி

அச்சத்தால் இரத்தம் மட்டுமல்ல‌
நீதியின் பேனா மையும் உறைந்து விடும்
                   
=======================================================

பயம்


ஏழையர் அல்லவோ கலங்குவார் தினம் தினம்
கோழையர் எங்ஙனம் கூடுவார் வெற்றி இன்பம்
நிமிர்ந்து துணிந்து எழுந்து நடந்தவனுக்கு இயலாதது ஏதுமில்லை
பயந்து பதுங்கி ஒளிந்து கிடப்பவனுக்கு இயல்வது எதுவுமில்லை
புறப்படும் போது சிறுய நதி நடக்கும் போது வளர்கிறது
புறப்பட்ட போது சிறிய வதந்தி தீ கடக்கும் போது நீளகிறது
இளைவ‌ரைக் கேட்காதீர் அவருக்கு எல்லாம் தெரியும் 
முதியவரைக் கேட்காதீர் அவருக்கு எல்லாம் பயம்
நம்மைப் பார்த்து ஆச்சாயப்படுபவர்களால் நமக்கு ஆபத்து
நம்மைப் பார்த்து அச்சப்படுவர்களால் நமக்கு விபத்து
அச்சத்தால் வயிற்றில் அமிலம் சுரக்கிறது
அன்பால் இதயத்தில் தேன் அரக்கிறது
மிருகம் வரும் போது நடுங்கி நின்றால் உயிரே பலியாகும்
துயரம் வரும் போது கலங்கி நின்றால் வாழ்வே பலியாகும்
தயக்கம் என்பது தளரும் அச்சத்தின் பிறப்பிடம்
மயக்கம் என்பது மருறும் ஆற்றாமையின் இரும்பிடம்
நம்பிக்கையென்பது கற்பனை பெற்ற அழகான குழந்தை
அச்சமென்பது கற்பனை பெற்ற கற்பனை குழந்தை
மூடநம்பிக்கைகள் மூடரிடம் பிறந்து மூத்தவரால் வளர்கின்றன‌
அவநம்பிக்கைகள் தோல்வியிடம் பிறந்து துயரத்தால் வளர்கின்றன.
                                     
==================================================

தயக்கம்


நலம் வரில் கொள்வார் நலமிலாத அய்யம் எண்ணார்
துணிந்த பின் பண்ணார் தாமதம்
சாலையின் நடுவே தயங்கினால் வாகனம் வந்து கொல்லும்
வேலையின் நடுவே தயங்கினால் காலன் வந்து கொல்லுவான்
நன்மைகளை செய்ய நாள் பார்த்து தயங்காதே
உண்மைகளை சொல்ல கோள் பார்த்து மயங்காதே
காலம் காற்றினும் கடுகிய கடுநடை உடையதன்றோ
முந்துச் சென்றார் நின்றார் சிந்தித்து நிற்பார் பிற்பட்டொழிவார்
உடுத்த உடையில் தூசும்
கடுத்த முகத்தின் மாசும் பகையே தரும்
படுத்த பாயில் தூக்கமும்
எடுத்த சொல்லின் தயக்கமும் நகையே தரும்
கையை உயர்த்துபவர்களை விட காலைப்பிடிப்பவர் ஆபத்து
விவாதம் செய்பவரை விட தாமதம் செய்பவர் தொல்லை
தெரிந்தும் தெரியவில்லை என்பது பதட்டம்
தெரியாததை தெரியும் என்பது கர்வம்

செய்ததை செய்யவில்லை என்பது குற்றம்
செய்யாதை செய்தேன் என்பது பித்தம்
பதில் சொல்லாமல் சுற்றிவளைத்து பேசினால்
தெரியவில்லை என்று அர்த்தம்
செயல் செய்யாமல் தயங்கி செய்தால்
புரியவில்லை என்று அர்த்தம்.

அறியாமை———-மடமை ————–பழமை

                 
அறியாமை

சிந்திக்காதவன் சொல் குருடன் எறிந்த கல்லாகும் 
அறியாதவன் சொல் கழுதை பாடிய பாடலாகும் 
சிறு பங்கு அறியும் பெரும்பங்கு அச்சமுள்ள மனிதன் மிருகமே 
ஒரு பங்கு அன்பும் பெரும்பங்கு  ஆசையுமுள்ள மனிதனும் மிருகமே
ஆடியில் தெரிவது பிம்பம் அடியில் தொடர்வது நிழல்
காதில் கேட்பது பொய் கண்ணில் காண்பது மாயை
குருட்டு அரசனுக்கு கொளுத்தி விளக்கின் முன்னே
இருட்டு அறையிலிருந்து கண்சிமிட்டி என்ன பயன்
அழுக்கானவரிடையே அழகானவர் இருந்தாலும் அறுவெறுப்பாக இருக்கும்
ஆடையில்லத்வரிடையே ஆடையணிந்திருந்தாலும் கூச்சமாக இருக்கும்
புசிக்க புசிக்க என் பசிப்பிணி புரிந்து கொண்டேன் 
படிக்க படிக்க என் அறியாமை அறிந்து கொண்டேன்
ஞானம் இல்லாதவர் ஞானியை சோதிப்பது நன்றோ அது
வேளை இல்லாதவர் யாணைபல்லை சோதிப்பதும் ஒன்றே
கல்லாமையும் பொய் சொல்லாமையும் நீங்கினால்
இல்லாமை தீருமே உலகில்
கள்ளுண்ணாமையும்  காமமில்லாமையும் சிறந்தால்
தள்ளாமை சேருமோ உடலில்
ஆகாயத்தில் கோட்டை என்றாலும்
ஆவென்று ஏமாறும் வாக்காளர்கள்
ஆலிலையில் பெட்ரோல் என்றாலும்
ஆமென்று ஏமாறும் வாடிக்கையாள்ர்கள்
அறிந்தவனுக்கு அறவுரை சொல்லத் தெவையில்லை 
அறியாதவனுக்கு அறிவுரை சொல்லிப் பயனுமில்லை
=======================================================
மடமை 

மனிதனால் மட்டும்தான் மற்றவரை சிரிக்க வைக்க முடியும்
மனிதனால் மட்டும்தான் மற்றவர் சிரிக்கும்படி வாழ முடியும்
மூடர்கள் செயல்கள் அறிஞர்களுக்கு பைத்தியகாரத்தனமாக தோன்றும்  
அறிஞர்கள் செயல்கள் மூடர்களுக்கு அதைவிட அதிகமாகத் தோன்றும்
பிறவிக் குருடர்கள் கண் தெரியாமல் தடுமாறி விழுகிறார்கள்
அறிவுக் குருடர்கள் க்ண் தெரிந்தே தடுமாறி வீழ்கிறார்கள்
அழையாத வீட்டில் விரும்பாத விருந்தாளி கோமாளி
விளையாத நிலத்தில் அரும்பாத விதையே அறிவுரை
அறிஞரோ ஒரு முறை தவறுவார்
 கயவரோ தவறையே தொடருவார்
குருடரோ ஒரு முரை இடறுவார்
 மூடரோ வாழ்வெல்லாம் இடறுவார்
கண்டதெல்லாம் காட்சி
 உண்டதெல்லாம் உணவு என்று மயங்குவது மடைமை
கண்டறிந்து மாட்சி உணர்ந்து
 காலமெல்லாம் உழைத்து வாழ்வது கடமை
சிலர் விளையாடுகிறார் பலர் அதை பார்த்து கைதட்டி மகிழ்கிறார்கள்
சிலர் போதிக்கிறார் பலர் அதை கேட்டு கை கொட்டி சிரிக்கிறார்
நட்பில்லாதவனுக்கு பெரிய நகரமும் யாருமில்லாத காடே 
கல்வியொன்றில்லாதவனுக்கு சொன்ன சொல்லும்
பொருளில்லாத ஒளியே
நதியின் நீர்ப்ப்ருக்கிலே நாட்டின் வறுமை யெல்லாம் தீரும்
மதியின் சொற்பெருக்கிலே மக்களின் மடமையெல்லாம் மாறும்
அடைக்காத பலூனுக்குள் காற்று நிற்பதில்லை
அடையாத மூடனுக்குள் கள்வி நிலைப்பதில்லை
=======================================================                                

பழமை


வலையை அறுத்துக் கொண்டு வெளிவர கத்தி வேண்டும்
பழமையை அறுத்துக் கொண்டு வெளிவர புத்தி வேண்டும்
பழசாகி விட்டதனால் தங்குமும் வைரமும் பழுதாவதில்லை
பழமை என்பதற்காக உண்மையும் ஒழக்கமும் மதிப்பிழப்பதில்லை
பழமையும் பழங்கிழமையும் பேசி வீணே மகிழ்வார் அறிவில்லாதவர்
புதுமையும் புதிய வளமையும் சேர்த்து நாளும் மகிழ்வார் அறிவியலார்
முடமான கால்களும் மூடமான எண்ணங்களும் செயல்படுவதில்லை
சடமான உடல்களும் மடமான மனிதர்களும் முன்னேற்றமனடவதில்லை
பழமை என்பது மடமை
புதுமை என்பதே வளமை
கடமை என்பது நம் உடமை
அருமை என்பதே நமக்கு பெருமை
பலன் தராத பழைய பொருள்களால் வீடு தூசாகும்
பயன் படாத பாழைய கருத்துக்களால் நாடு நாசமாகும்
ஒட்டையுள்ள பாத்திரத்தில் நீரும் நிலைப்பதில்லை
ஒழக்கமில்லாத சாத்திரங்கள் ஊரில் விற்பதில்லை
பயனுள்ளது பழமை யாயிருந்தாலும் போதை தரும் கள் போல‌
பயனந்நது புதுமை யென்றாலும் போய் விழம் குப்பையிலே
கல்லாமை என்றொடு சாபம் தீர்க்கும் நாளே விடுதலை நாள்
இல்லாமை என்றொடு தாபம் தீரும் நாளே திருநாள்,

வறுமை

வறுமை

அரசன் மறைந்தால் அழுவதற்கு இங்கே ஆயிரம் பேர்
ஆண்டி இறந்தால் தோண்டவும் இங்கே ஆளில்லையே

செல்வத்தின் பலம் விருந்து வந்த போது புரியும்
வறுமையின் பலகீனம் விருந்து வந்த போது புரியும்
பக்கத்து வீட்டில் தீபிடிக்க உண்ணால் உறங்க முடியாது
பக்கத்து வயிற்றில் பசியிருக்க உண்ணால் உண்ணவும் முடியது
விதைக்கவும் இல்லை அறுக்கவும் இல்லை பட்டினியில்லை பறவைக்கே
விதைப்பு முண்டு அறுப்புண்டு பட்டிணியும் உண்டு உழவனுக்கே
அடிமை கொடுமையிலிருந்து விடுதலை பெற்றோம் அப்போது
வறுமை  கொடிமை யிலிருந்து விடுதலை பெறுவது எப்போது
நீரும் காற்றும் சுழன்று திரிந்தால்தான் வள‌மை வரும்
 சீரும் செல்வமும் சுழன்று திரிந்தால்தான் வறுமை தீரும்

இரவின் மழை போல கனவின் காதலும் ஊரறியாதே போய்விட்டது
மதியின் கிரகணம் போல
 ஏழையின் கண்ணீரும் உலகறியாதே உறங்கிகிவிட்டது

காற்றில் பறக்கும் காகிதம் போல அலைக்கழியும் ஏழையர் வாழ்வு
கடலில் மிதக்கும் தக்கைபோல அலைபாயும் ஏழையர் வாழ்வு
சித்தத்தில் தெளிவு இருந்தால் மாயப்பித்தமும் என்ன செய்யும்
நித்தமும் உழப்பிருந்தால்  வறுமைப்பிணிதான் என்ன செய்யும்
=======================================================

தாமதம்—சோம்பல்–உறக்கம்

                             
தாமதம்

தனித்து போடப்பட்ட இரும்பு துருபிடித்து அழிகிறது
தள்ளி போடப்பட்ட செயலும்   உருமாறி அழிகிறது
நீ தூக்கிப் போடும்  குப்பைகள் உன் காலை வந்து இடறும்
நீ தள்ளிப் போடும் செயல்கள் உன் வாழ்வை வந்து இடறும் 
தாமதமாக உறங்கி விரைவாக எழுந்தால் சுறுசுறுப்பு வரும் 
தாமதமாக தொடங்கி விரைவாக செய்தால் பரபரப்பு வரும்
உண்மை புறப்பட்டு வாசல் வருவதற்குள் கயமை வானத்தை சென்று விடும்
வாய்மை வாய் திறந்து பெசுவதற்குள் வ்லிமை உலகத்தை விழுங்கி விடும்
உழைக்காமல் ஏய்த்து வாழ்வார் வாழ்வு வாலறுந்த நரி  போலாடுமே
உறங்கியே  ஏய்த்து வாழ்பவர் வாழ்வு வாலறுந்த நரி போலாடுமே
நாளை ஒன்று தருகிறேன் என்றவன் என்றும் தருவதில்லை
நாளை ஒன்று செய்கிறேன் என்றவன் ஒன்றும் செய்வதில்லை
கயிற்றில் தொங்கும் உயிர்கள் மூச்சடைத்து சாகும்
காலத்தால் தேங்கும் காரியங்கள் பெச்சழிந்து சாகும்
காலம் என்பது பல காரியங்களை ஆற்றும்
காலதாமதம் என்பது பல காயங்களை வளர்க்கும்

====================================================

                             
சோம்பல்

கிடைக்காத பொருளுக்காக ஏங்கி அழபவர் குழந்தைகள்
கிடைத்ததையும் வீணாக்கி தூங்கி விழபவர் குற்றவாளிகள்
அச்சமும் சினமும் அதிக உறக்கமும் அறிவை மயக்கும் பகைகள்
மந்தமும் சோம்பல் தாமதமும் மனதை கெடுக்கும் பிணிகள்
பிச்சை எடுப்பவனுக்கு கூட நாளை பிச்சை போட ஆளிருக்கலாம்
கட்ன் வாங்குவபவனுக்கு நாளை கடன் கொடுக்க ஆளில்லை
உழைத்து வாழம் நேரமெல்லாம் உயர்வுக்கு கணக்காகும் 
உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்
சாய்ந்து கிடக்கும் இரும்பெல்லாம் துருப்பிடித்து போகும்
ஒய்ந்து கிடக்கும் உடம்பெல்லாம் உருப்படாமல் போகும்
உழைத்து உண்பவனே மனிதன் எனப்படுவான் 
உழைக்காது உண்பவன் திருடன் எனப்படுவான்
ஒரு நாள் த‌ங்க வந்தவன் விருந்தாளி
மறுநாள் தங்கி விட்டவன் பெருச்சாளி
இளமையில் உழைத்தவர் முதுமையில் ஒய்வு அடைகிறார்
இனிமையில் உறங்கியவர் ஏழ்மையில் தேய்வு அடைகிறார்
அம்மா என்ற சொல் அனைத்து உயிர்களின் முதல் வார்த்தை
அம்மா என்ற சொல் அனைத்து தோல்விகளின் முதல் வார்த்தை
வீட்டு வேலைக்கு ஆள் வைத்துவர் மருந்துக்கு செலவழிப்பார்
வெறும் பணத்துக்கு பெண் எடுத்தவர் மதுவுக்கு செலவழியார்.
=========================================================                          

உறக்கம்


உண்பதும் உறங்குவதும் மட்டுமே உள்ள மனிதனும் மிருகமே
கண்டதும்  காமுறும் உள்ளம்  உள்ள மனிதனும் மிருகமே
முயலாமையில் பெரிய தாழ்ச்சி உலகில் எதுவும் இல்லை
இயலாமையில் பெரிய வீழ்ச்சி உலகில் எதுவும் இல்லை

உழைத்து உறங்கியவர்களை எழப்பி விடலாம்

உழைக்காது உறங்கியவர்களை எழப்ப முடியாது
உழைத்தவன் வாழ்விலே கனவுகள் எல்லாம் நனவாகும்
உறங்கியவன் வாழ்விலே நனவுகள் எல்லாம் கனவாகும்
பொதுமையிலே புதுமை படைப்பவன் உழைப்பாளி
தனிமையிலே இனிமை காண்பவன் சீக்காளி
பசுமையான பூவின் படுக்கையென வாழ்க்கையை எண்ணி
உறங்கி மகிழ எத்தனம் செய்வார் ஏழையரே
தூக்காமென்பது துக்கமே ஊக்கத்தை கெடுக்கும் ஆக்கத்தை அழிக்கும்
ஏக்காமென்பது வெட்கமே துக்கத்தை கொடுக்கும் தூக்கத்தை சிதைக்கும்
தூண்டில் பிடித்தவன் தூங்கி விட்டால் மீன்கள் பிடிபடுவதில்லை
நாட்டை ஆள்பவன் தூங்கி விட்டால் நாடும் வளர்வதில்லை
நீருக்கு தவிக்குது பயிர்கள் நாட்டினிலே
தாலிக்குது தவிக்குது தளிர்கள் வீட்டினிலே
பசித்து தவிக்குது உயிர்கள் நாட்டினிலே
புசித்து உறங்குதே பதர்கள் வீட்டினிலே.


===================================================