இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டே வருக
புத்துணர்ச்சி தருக
காலக்குடுவையின்
மணல் துளிகளாக
கரைந்து போனது காலம்
கையில் அள்ளிய
நீர்த்துளிகளாக
விரலிடுக்கிலே
ஒழுகிப்போனது
ஒரு வருடம்
நாட்க் குறிப்பு ஏட்டிலே
நட்டு வைத்த திட்டங்களின்
சுமையை தாங்காது
ஏங்கும் பக்கங்கள். .
முடிக்காமல் விட்ட
கடமைகள்
முறைத்துப் பார்க்கின்றன
கனவுகளும் கற்பனைகளும்
காகிதத்தில் உறைகின்றன..
பொறுப்புள்ள மனிதர்களின்
தூக்கத்தால்
பல சாதனைகள்
தேங்கிக் கிடக்கின்றன
பாட வந்த பாடலை
இன்னும் பாடவில்லை
என்று மனம் ஏங்குகிறது. .
புத்தாண்டில் அணியும்
புதுச்சட்டை போல
புதிய நம்பிக்கை
அடையட்டும் மனம்
புதிய செடியில் பூத்த மலர்களை போல
புதிய சிந்தனைகள் மலரட்டும். .
அரவு உரித்த சட்டை போல
அவலங்களையும்
தோல்விகளையும்
துறந்து விட்டு
புதிய நொடியில்
புதிய நாளில்
புதிய மாதத்தில்
புதிய ஆண்டில்
அடியெடுத்து வைப்போம். .
கலாம்கள் கண்ட கனவுகளை
காலங்கள்
நிறைவேற்றட்டும்..
மானுடம்
மகுடம் சூடட்டும். .
மலர்கள் மலரட்டும் ..
நமது
அகங்களும்
மனங்களும் மகிழட்டும். .
அனைத்து
தோழர்களுக்கும்
அன்பான
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். .

Myself……….

;””’நான்””’

my facebook ” PAGE”

MY BLOG 1

https://arthamullainiyamanam.wordpress.com/

MY BLOG 2

http://dbs1205.blogspot.com/ 


MY FACEBOOK PAGE

https://www.facebook.com/ArthamullaIniyamanam

MY FACEBOOK ID

https://www.facebook.com/arthamullainiyamanam.drbalasubramanian

MY FACEBOOK DR ID

https://www.facebook.com/bala.manian.7509

MY FACEBOOK GROUP 

https://www.facebook.com/groups/arthamullainiyamanam/

MONTHLY JOURNAL

ARTHAMULLA INIYAMANAM
C/O SARANYA HOSPITAL
PALAYAM BAZAR
WORAIUR
TRICHY 3
TAMILNADU

PH 82207 29029

MY WEB SITE

PHOTOS