பயத்தை போக்குவது எப்படி ?

 பயத்தை போக்குவது எப்படி ?குழந்தை பருவத்திலிருந்து ஒரு கூட்டம் நம்மை அச்சுறுத்தும்
இன்னொரு கூட்டம் அஞ்சாதே என ஊக்குவிக்கும்.
மொத்தத்தில் நாம் குழப்பமடைகிறோம்.
சிலர் அஞ்சுவது தவறு என்றால்
பலர் அஞ்சாதது தவறு என்பார்.
எதை எடுத்துகொள்வது


அச்சம் பயம் என்றால் என்ன?

நாம் நினைத்தது நடக்காமல் போய்விடுமோ
என்ற எதிர்மறையான ஒரு எண்ணம்.

மற்றது நாம் எதிர்பாராத தீமை ஏதும் நடந்துவிடுமோ என்ற அச்சம்.

ஆனால் நடைமுறை வாழ்வில் நாம் எதிர்பார்த்தது பெரும்பாலும்
எதுவும் நடந்ததில்லை

மேலும் நாம் எதிர்பாராத தீமைகள்தான் நடக்கின்றன.

பகவானோ கடைமைகளை செய் பலன்களை எதிர் பாராதே
என்று சுலப‌மாக சொல்லி விட்டார்.

நாலு புறம் ஓட்டையுள்ள இதயமோ பலகீனமானது
ஊசல் போல் ஆடும் மனமோ பூப்போன்றது

அது தினம் தினம் நொடிக்கு நொடி அதிர்ச்சிகளை தாங்குவதில்லை.
அப்படியென்றால்  இப்படிபட்ட
தேவையற்ற உணர்ச்சியை ஏன் படைத்தான்.
தேவையற்றது என்று யார் சொன்னது?

அச்சம் என்பது அக்கறை,ஆர்வம்,எச்சரிக்கை,பாதுகாப்பு,குறிக்கோள் போன்ற உயர்ந்த நோக்கமுடைய மூதாதையர்களிடமிருந்ததுதானே?
அவர்களிடம் வளர்ந்தது தானே.

ஓரணு உயிரான அமீபா நீந்தும் நீரில் மின் உணர்வு கண்டால்
தான் புலடைக்கி தற்காத்து கொள்ளுமே.

துறவிகள் பெண் கண்டவுடன் அஞ்சி ஓடுவதும் பாவபழிக்கு அஞ்சிதானே.

எனவே அச்சம் பயம் என்ற உணர்வுக்கு மூலதாரமாக இருப்பது
சுய பாதுகாப்பு மேலும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பே

வெற்றி கை விட்டு போகுமே என்ற அச்சத்திற்குஆதாரமாகும்.
ஆகவே அச்சம் பயம் என்ற “பெற்றோர்’வழியாகவே ஆர்வம்,அக்கறை 

முனைப்பு உழைப்பு தவிப்பு முன் எச்சரிக்கை சுயபாதுகாப்பு லட்சியம் 

குறிக்கோள்கள் போன்ற பலபல நல்ல குழந்தைகள் பிறக்கிறார்கள்.

————————————————————————————————————

வழியஞ்சி பயணம் மறந்தோர்
பழியஞ்சி செயல் இழந்தார்

கண்துங்சி காலம் கழித்தார்
கைகெஞ்சி இரந்து வாழ்வார்

அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பார் வள்ளுவர்
அச்சம் என்பதொரு மடமை என்பார் கவிஞர்

தாயானவள் தன் குழந்தை வெற்றி பெற ஆசைப்படுகிறாள்.
உடனே தோற்று விடுமே என்று பயப்படுகிறாள்.

இந்த பயத்தை தன்னையறியாமல் மறுதலைமுறைக்கும்
பாரம்பர்ய சொத்தாக சீதனம் கொடுக்கிறாள்.

அடுத்தது தகப்பன்,உறவினர்,அயலார்,சமூகம்,நாடு,பத்திரிக்கை,ஊடகங்கள் என்று இந்த அச்சுறுத்தும் தொழிற்சாலைகள் நிறைய.
மேலோட்டமாக இவை யாவும் பலரை நல்வழிபடுத்துவது என்னவோ 
உண்மைதான்

ஆனால் அதே சமயம் பலகீனமான பலரை மேலும் மேலும் பல‌மிழ‌க்க செய்வதும் உண்மைதான்.

அச்சம் என்ற உணர்ச்சி அசாக்ரதை,அலட்சியம்,ஆர்வமின்மை,மந்தம்,சோம்பல் போன்ற பலநூறு மன நோய்களுக்கு அதிர்ச்சி தந்து மாற்றகூடிய மருந்தாகும்.
ஆனால் அதே மருந்து அளவுக்கதிகமாக மிஞ்சி போனால் மனதுக்கு நஞ்சாகிவிடுகிறது.

அவரது மன தைர்யம்,உற்சாகம்,உழைப்பு,தன்னம்பிக்கை போன்ற நல்ல குணாதிசியங்களுக்குவிசமாக மாறிவிடுகிறது.


தாழ்வு மனப்பான்மை,தோல்வி மனப்பான்மை,சோர்வு தற்கொலை எண்ணங்களில் கொண்டுபோய் விடுகிற்து.

இதன் விளைவுகள்தான் பயம் என்ற பயங்கரமானநோய்,

சிவனுடைய பக்தர் எல்லாம் சிவமயம் என்பது போல 
இவர்கள் வாழ்க்கை எல்லாம் பயமயம் என்று புலம்கிறார்கள்.

பயம் என்பது எதிர்மறை உணர்வு அது சொல்ல போனால் 
உணர்ச்சிஎன்பதை விட கோனலாகிப் போன சிந்தனைதான்.

நாம் பயப்படுவதற்கு இரண்டு மூலகாரணங்கள் உண்டு 


ஒன்று நாம் நினைப்பது அல்லது எதிர்பார்ப்பது நடைபெறாமல் போய்விடுமோ என்ற அச்சம் மற்றும் அதன் விளைவான தோல்வி அவமானம் இழப்பு போன்ற சங்கிலி  தொடர்களை மனமென்னும் ஆலையில் போட்டுமிகைபடுதி பெருக்கி கொண்டே போவது

மற்றது எதிர்பாராத ஒரு எதிர்மறையான நிகழ்வு பற்றி பயம்.

கவிஞர்கள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 

தெய்வம் எதுவுமில்லை என்பார்கள் 

நினைப்பதெல்லாம் நடக்காது நாம் எதிர் பாராதது நடந்தே தீரும் என்பது எல்லாம் அறிவுக்கு எட்டினாலும் நமது குழந்தை மனம் அதை ஏற்பதில்லை ஆசைபடுகிறது அச்சப்படுகிறது பின் அல்லல் படுகிறது.

———————————————————————————————————————


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பது சரிதான் 
ஆனால் அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே.

இரண்டு தராசு தட்டுகளுக்குமிடையே அசையாத முள் போல உறுதியோடு நின்று வாழ்வை சமாளிக்க வேண்டும்.

குழந்தை,இளமை பருவங்களில் இந்த சமநிலமைக்கு கற்பிக்கபடவேண்டும் மற்றும் பயிற்சியளிக்க பட வேண்டும் 

சுயமான சுத்ந்திரமான சிந்தனை உள்ள மனிதனாக வரை அனுமதிக்கபடவேண்டும்  

இதுதான் ஒரு மனிதன் சமநிலை உணர்வுள்ளவனாக வளர  வாய்பளிக்கும்.

நிறைய மனோ தத்துவ ஆராய்ச்சியாள்ர்கள் மனிதனது ந‌டத்தைகள் என்பது அனிச்சை செயல்களாக பதிவுசெய்யபட்டுள்ளது என நிரூபித்துள்ளனர்.

நிர்பந்தமான பழக்கப்படுத்தப்பட்ட 

அனிச்சை செயல்களை 
கன்டிசன்ட் ரிப்ளக்ஸ் என்பார்கள் 
அது போலவே சிறுவயதில் வளர்பருவத்தில் 
நமது நடத்தைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

கடுமையான அடுக்குமுறைகள் வழியாக மிருகங்களை போல குழந்தைகள் பயிற்றுவிக்கபடுகிறார்கள்.

அது தண்டிக்கபடுதலும் கண்டிக்கபடுதலும் குச்சி,நெருப்பு,சூடு வசை போன்றவை முக்ய பங்கு வகிக்கின்றன.

பாராட்டபடும் நடத்தைகள் வள்ர்கின்றன.தண்டிக்கப்படும் கண்டிக்கபடும் நடத்தைகள் தவிர்க்கப்படுகின்றன.


செயள்களை  தவிர்க்க உறுதியான எச்சரிக்கைகளை அச்சம் பயம் போன்ற உணர்ச்சிகள் காரணமாகின்றன.

தண்டனைகளை தவிர்க்க அச்சம் மூல முதற்காரணமாகிறது.

அளவுக்கதிகமான அநியாய‌மான,அநீதியான தண்டனைகள் குழ்ந்தைகளை மட்டுமல்ல குழுக்களை,இனங்களை,மக்களை,அச்சம் என்ற ஆறாத தீராத நோய்க்கு ஆட்படுத்திகிறது.


அதீத அடக்குமுறைகளை பயன்படுத்து பெற்றோர்களால்.
ஆசிரியர்களால் குழந்தைகளின் மனவளர்ச்சி குறிப்பாக 
ஆளுமை தன்மை அடக்கப்படுகிறது.

பயந்த சுபாவமும்,தாழ்வு மனப்பான்மையும் உள்ள தன்னம்பிக்கையில்லாத மனிதனாக அது வளர்கிறது.

அச்சம் பயம் என்ற பெற்றோர்கள் எதிர்மறை எண்ணங்களைபிரசிவிக்கிறார்கள்.


த்ண்டனைக்கு பயந்த மனம் தவித்து ஓடுகிறது.

தவிர்த்து பழகுகிறது.தோல்விகள் தொடர்கின்றன 

தோல்வி மனப்பான்மை,தாழ்வு மனப்பான்மை,தன்னம்பிக்கையின்மை,மனசோர்வு,தற்கொலை போன்ற பலபல பேரன் பேத்திகள் என்று தலைமுறை பெருகுகிறது.

எனவே அச்சத்தை விதைக்க வேண்டாம் 


அது ஆயிரமாயிரம் அவலங்களை பயிராக்கும் 

பின் அதை நாம் அறுவடை செய்து கொள்ள வேண்டிவரும்.
காரண காரியங்களோடு ந‌ன்மை,தீமைகளை தெளிவாக கற்பிப்போம்.

தீமைகளை தவிர்க்க முறையான பயிற்சி அளிப்போம்.

அதே நேரம் நன்மைகளை புரிந்துகொண்டு துணிவாக செயல்படும் தன்னம்பிக்கையை விதைப்போம்.

தனது செயல்களுக்கு தானே பொறுப்பேற்க்கும் தைர்யத்தையும் தெளிவையும் சுதந்தரத்தையும் கொடுப்போம்.


அதெல்லாம் சரி என்னை இப்படி அடக்கி ஒடுக்கி கோழையாகா வளர்த்து விட்டார்களே.இனி என்ன செய்வது எனது கைகள் கால்கள்,கண்கள் வாய் எல்லாவற்றையும் ஆக்டோபஸ் எட்டு கால் பூச்சிபோல இந்த அச்சம் என்ற நோய் கட்டி போட்டு விடுகிறதே 


நான் என்ன செய்வது எப்படி விடுதலையடைவது.

உடண் பிறந்தே கொல்லும் நோயாக உள்ளுக்குள் இருந்து வாட்டுகிறதே 


எத்தனை உறுதிமொழி வைராக்யம் குறிக்கோள் வைத்தாலும் குடிகாரணைப்போல மீண்டும் அச்சத்தில் வழக்குகிறதே.

—————————————————————————————————————–

அச்சத்தை தவிர்ப்பது எப்படி?


செயலை தொடங்குமுன் நிச்சயமாக வெற்றி  பெறுவோம்


நன்மையாக முடியும் என்கிற நன்னம்பிக்கையுடன் தன்னம்பிகையுடன் சிந்திக்க வேண்டும்.

ஆனால் பயம் என்ற பேய் பிடித்தவர்களுக்கு தீர்ப்பு வருமுன்னரே 
தானே முடிவு செய்து விடுவார்கள்.

நிச்சயமாக தோல்விதான் என புலம்புவர்கள் 

அது மட்டுமல்ல அதன் பிறகு ஏற்படும் அவமானம்,அசிங்கம்,தலைகுனிவு,விமர்சனம் போன்ற  பலவிதமான கற்பனைகளை பூதக்கண்னாடியில் போட்டு மிகைபடுத்தி கொள்வார்கள்.

பேனை பெருமாளாக்கி பெருக்கள் கணக்கு போட்டு அழுவார்கள்.


இந்த தோல்வி மனப்பான்மைதான் 

அவரது தோல்விக்கே காரணமாகிறது.

இதனால் எற்படும் அச்சமும்,சோர்வும்,பயமமும் பதட்டமும் செயல்திறனை பாதிக்கிறது.

அதீதமான பதட்டம் கை நடுக்கம்,குழப்பம்,மன ஒருமுகமின்மை தெளிவின்மை தீர்வானமின்மை போன்ற பலவிதமான இடையூறுகளை உற்பத்தி செய்கிறது.

உதாரணமாக ஒரு விளையாட்டு வீரனுக்கு இந்த பந்தை அடிக்கலாமா,அடித்தால் தோற்போமோ அடிக்காமல் விட்டு விடுவோமா என்பது போன்றகுழப்பம் ஏற்படும் விளைவு அரை மனதுடன் அடித்தால் நிச்சயம் தோல்விதான் 

இரண்டில் ஒரு முடிவு எடுப்பதை இது தடுத்துவிடுகிறது.

பலருக்கு பதட்டபட்டு பதட்டபட்டு காலப்போக்கில் தளர்ந்து போய் மனசோர்வு ஏற்படுகிறது.


தலைக்கு மேல் போனபின் காலென்ன முழமென்ன என்று தத்துவம் பாடத்தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் தலைக்கு மேலே வெள்ளம் போனால் தான் இருக்கும் போது கையை தூக்கி கூவினால் நிச்சயம் உதவி கிடைக்கும்தானே.

இன்னும் பலர் நான் ஒரு உபயோகிமில்லாத துர்திஸ்டசாலி என புலம்புவார்கள் 

நான் ஒரு அனாதை எனக்கு உதவ யாருமே இல்லை என அங்கலாய்ப்பார்கள் 
நான் ஒரு அதிட்ட கட்டை எனக்கெல்லாம் எதிர் காலமே கிடையாது என ஓய்ந்து போவார்கள்.
நான் உப்பு விற்க போனால் மழை வரும் 
நான் உமி விற்க வைக்க போனால் காற்றடிக்கும் என அழுவார்கள்.

இது மாதிரியான எதிர் மறையான எண்ணங்கள்,இருக்கும் கொஞ்சம் திற்மையையும் மழுங்கடிக்க செய்யும்.

தோற்கு முன்னே தோற்று விடுவார்கள்.
போராடும் குணம் போயே போய்விடும்.
மந்த புத்தி செயல் திறமையின்மை சோம்பல்தனம் உற்சாகமின்மை உருவாகும் தன்னைத்தானே தோற்கடித்து கொள்ளும் இந்த சுபாவம் ஆபத்தானது இது மாற்றபட வேண்டும்.

சுய தூண்டுதல் நல்லது தரும் சுய நம்பிக்கை பயிற்சிகள் எடுத்து கொள்ள வேண்டும்.


நன்னம்பிக்கை தரும் நன்பர்கள் உதவியை நாட வேண்டும் 


ஆன்மீக,கடவுள் நம்பிக்கையை பலருக்கு ஊக்க மருந்தாக பயன்படுகிறது 


ஆருடம் போன்ற கலைகள் பலருக்கு நல்ல நம்பிக்கையை விதைக்கிறது 

அன்பு,நட்பு,காதல் போன்ற பல பாலங்கள் உறவுகள் கரையேற்றி விடுகின்றன.

சுயமுன்னேற்ற கவிதைகள் எழுத்துகள் சுயசரிதைகள் பலருக்கு பக்க பழமாக இருந்துருக்கின்றன.

குடும்ப,சமூக,சமுதாய,தேச உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏதாவதுஒரு சிறிய வழியாவது பிறரை ஊக்கபடுத்தி உற்சாகபடுத்தி வாழ வைக்க முயற்சி செய்கிறார்கள் 


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

பயத்தை போக்குவது எப்படி


பயம் என்பதுஒரு கற்று கொண்ட நடத்தை அதை மறப்பது சுலபமல்ல எனவே அதற்கு எதிரான மாற்று செயலை கற்பதுதான் சிறந்த வழி துர்மணத்தை விரட்ட நறுமணத்தை நிரப்புவதே முதல்வழி.

எனவே பயத்தை வெல்ல துணிவை கற்பதே முறையான வழி எதற்கு பயமாக உள்ளதோ அதை மீண்டும் உத்வேகமாக செய்வதே சரியானது.இது பலருக்கும் பலன் தந்துள்ளது.

பல விளையாட்டு வீரர்கள் ஆக்ரோசமான தீவிரமாக செயல்படுவது இதற்கு  சிறந்த உதராணமாகும் 

விரைவில் நாம் வெளியேற்றபடுவோம் என அச்சமாக இருந்தால் சரி நடப்பது நடக்க‌ட்டும் என துணிவாக ஆக்ரோசமாக அடித்தால் பந்து எல்லை தாண்டி பறக்கும் எதிரிகள் கதி கலங்குவார்கள்.

இமயத்தை வெற்றி கண்ட டென்சிங் இளமையில் உயரமான கட்டிடம் என்றாலே பயந்ததாக கூறுவார்கள் அந்த பயத்தை போக்க முயற்சி செய்து இமயத்தை வென்றாக சொல்வார்கள். 

பயத்தை வெல்ல வழி பயத்தை கொல்லுவது தான்.

ஆனால் பலர் புகை,மது,போதை என திட திரவ வாயு முறைகளில் பயத்தை கொல்ல மயக்க மருந்துகளாகிறார்கள்.
இது ஆபத்தானது.

உண்மையில் இவை பயத்தை  வெல்வதுமில்லை கொல்வதுமில்லை 

ஆளையே கொன்றுவிடுகின்றன 
எலியை பிடிக்க வீட்டை கொளுத்திய கதையாக போய்விடும்.

முறையான மனநல பயிற்சிகள் தியான பயிற்சிகள் சுய முன்னேற்ற பயிற்சிகள் மனோதத்துவ ஆலோசனை,ஆளுமை பயிற்சிகள் வழியாக சுயமாக முயற்சி செய்தால் நிச்சயமாக  பயத்தை வெல்ல‌லாம் 

பயத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வெல்லலாம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX