மனசோர்வு கையேடு ….
மனசோர்வு  கையேடு 

—————————————————————————————–

மனசோர்வு என்றால் என்ன?
001

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா என்று கேட்டு வைத்தார்கவிஞர் இந்த உணர்வை மனிதராக பிறந்த நாம் அனைவரும்ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில நாள் அல்லது சில வாரங்கள்நிச்சயமாக அனுபவிக்க வாய்ப்புள்ள‌து ஆனால் தெளிந்த சுய உணர்வும் மனம் பற்றிய விழிப்புணர்வும் இல்லாத பலர் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர்உண்மையில் இரண்டுமே பாதிக்கப்படுகிறது.மனசோர்வு என்பது ஒரு உணர்ச்சியே அதை எதிர்மறையான‌
உணர்ச்சி என்று சொல்லலாம் பரிணாம உயிர் வளர்ச்சியில்உயிர்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது.விளைவாக ஒருஅல்லதுபோராடுஎன்றசெயல்வெளிப்படுகிறது.ஆனால்வினோதமாக மனிதகுல சமூக பரிணாம வளர்ச்சியில் மனச்சோர்வுஎன்ற எதிர்மறை உணர்வு ஏற்படுகிறது
தலைக்கு மேல் வெள்ளம் போனபின் சானென்ன‌முழமென்ன என்ற சலிப்பும்,சோர்வும்,ஆற்றாமையும் ஏன்ஏற்படுகிறது?இதன் பலன் என்ன?இடையூறு ஏற்படும் போதுஇயக்கமின்மை ஏற்ப்பட்டால் அழிவைத் தவிர பயன் என்ன?ஒன்று புயலடித்து ஓய்ந்த பூமிபோல மனத்தின்சக்தியெல்லாம் செலவழிந்து போன பின் ஏற்படும் வறட்சியும்,இயக்கமின்மையுமே மனசோர்வுக்கு காரணமென நம்பப்படுகிறதுஅதுமட்டுமல்லசிலர்போரிலிருந்துபின்வாங்கிபோராடாமலிருப்பதுவாரிசுகள்எழுச்சியுற்று இடையூறை முறியடிக்கும் வரைஒருபாதுகாக்கும்முறையெனவும்சொல்லப்படுகிறதுஎப்படியிருந்தாலும்மனச்சோர்வு நீடிக்கும் வரைபாதிக்கபட்டவரது பலவித செயல் திறன்பாடுகள் நிச்சயமாக‌தாக்கமடைகிறது அதன் விளைவாக பல உடல்னல,குடும்ப‌ந‌ல‌சமூக நல பாதிப்புகள் ஏற்படுகிறது.மனசோர்வு என்பதை விசை,மின்சார ஏற்றம்குறைந்த பேட்டரியின் விளைவாக அந்தபொம்மையோ,உபகரணமோஎப்படிசெயல்குறைந்துசெயல்படுகிறதோஅதனுடன்ஒப்பிட்டுபுரிந்துகொள்ளலாம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மன சோர்வின் அறிகுறிகள்
002

மனசோர்வின் அறிகுறிகளை இரண்டாக பிரிக்கலாம் ஒன்றுமனநல பாதிப்புக்கள் மற்றது உடல்ந்ல அறிகுறிகள்பெரும்பாலும் மத்ய வயது,விபரம் புரிந்த,கல்வி அறிவுள்ள,நகர்புறஆண்களுக்கு மட்டுமே மனம் பாதிக்கபட்டுள்ளது என்பதைதெளிவாக தெரிவிக்கிறார்க்ள்.
மனம் உற்சாகமாக இருக்க அடிப்படையாக மூன்று விதமானநம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. இதை மூன்று பாதுகாப்பாகதொங்க விடப்பட்டிருக்கும் கொக்கிகளாக கற்பனை செய்து பார்ப்போம்இவற்றை முறையே தான் என்ற தன்னம்பிக்கைஅன்பு என்ற உறவுப்பிடிப்புஎதிர்காலம என்ற நம்பிக்கை என்று பிரிக்கலாம்நமது வாழ்க்கை மேல் உள்ள ஈடுபாடு,ஆர்வம் இந்த மூன்றில் தொங்குகிறதுமுதலில் நான்,தான் என்ற கடந்தகாலம்,சாதனைகள் இனிய நினைவுகள்நம்மை உற்சாகப்படுத்துகின்றன.ஆனால் மனசோர்வு ஏற்படும் போது நான் எதையும்சாதிக்கவில்லை,நான் உபயோகமில்லாத நான் தாழ்வானவன்எனது இறந்த காலம் துயரமானது என்ற தாழ்வு மனப்பான்மையும்அவனம்பிக்கையும் ஏற்படுகிறது முதல் கொகயிலிருந்து தளர்கிறதுஇரண்டாவதாக பெற்றோர்,உறவினர்,குழந்தைகள்,நண்பர்கள்சமூகத்தினர்,அரசினர் யாராவது நம்மிடம் அன்பு பாராட்டி உதவிகள்செய்வார்கள் என்ற நிகழ்கால நம்பிக்கை நம்மை வாழ வைக்கிறதுஇதிலும் நான் ஆதரவற்ரவன் எனக்கு யாருமில்லை என்ற‌
அவ நம்பிக்கை இரண்டாவது கொக்கியிலிருந்தும் விடுபடுகிறதுமூன்றாவது எனக்கும் ஒரு எதிர்காலம் உண்டு நான் வாழ்வேன்என்ற எண்ணமும்,இறை நம்பிக்கையும் நம்மை தளராமல் உழைக்க‌தூண்டுகிறது.ஆனால் நாளை நமக்கில்லை என்ற மனத்தளர்வுமூன்றாவது பாதுகாப்பிலிருந்தும் நழுவி வீழ்த்துகிறதுஇதனால்குழப்பம்,மயக்கம்,கலக்கம்,சஞ்சலம்,துக்கம்,சோகம்சளிப்பு,களைப்பு,தவிப்பு,தனிமை,விரக்தி,வேதனை,அழுகை,ஆங்காரம்போன்றபல எதிர்மறைஉணர்ச்சிகள்உருவாகின்றன.விளைவாகபலருக்குஇயக்கமின்மை,கவனமின்மை,உற்சாகமின்மை,தெம்பின்மை,சிந்தனையின்மைதெளிவின்மை,தீர்மானமின்மை,தன்னம்பிக்கையின்மை,ஆர்வமின்மைஉணர்ச்சியின்மை,பாசமின்மை,மகிழ்ச்சியின்மை,பொழுதுபோக்கின்மை ஏற்படுகிறதுஇதனால் குற்ற உணர்வுகள் சுயவெறுப்பு மற்றவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.
———————————————————————————-

           மனசோர்வின் உடல் அறிகுறிகுறிகள் என்ன
003
      பொதுவாக குழந்தைகளும்,வயோதிகர்களும்,பெண்களும்
கிராமப்புற மற்றும்கல்வி அறிவு குறைந்தவர்களும் மனபாதிப்பை உடல்
அறிகுறிகளாகவே உணர்கின்றனர்.அதற்க்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்
மனசோர்வை உணரவோ வெளிப்படுத்தவோ அவர்களுக்கு மொழியாற்றல்இருப்பதில்லை மேலும் உண்மையாகவும் உடல் கூறு இயங்கியல்இரசாயன மாற்றங்களும் தீவிரமான தொடர்ச்சியான துன்பம் தரும்உடல் உபாதைகள் மனசோர்வின் விளைவாக உருவாகிறது.
       தலை முதல் கால் வரை உள்ள அத்தனை உடலுறுப்புகளிலும்
மனசோர்வின் தாக்கங்கள் உருவாகின்றன பெரும்பாலும் மனபதட்டம்
மற்றும் மனசோர்வின் அறிகுறிகளும் ஒருங்கினைந்தே காணப்படும்
       ஒரேயொரு உடல் நல அறிகுறி மட்டும் தீராது தொடர்ச்சியாக‌
தீவிரமாக காணப்படலாம் பாதிக்கபட்டவர் மன சோர்வை உண்ராது
வெளிப்படுத்தாது இருந்தால் அதை முகமூடி போட்ட மனசோர்வு என்பார்கள்
               அநேகமானவர்களுக்கு அடிக்கடி காணப்படுவது தீராத‌
வேதனையான தலைவலி,தலைபாரம்,தலைகனம் போன்ற தலைக்குள்
ஏற்படுவதாக உணர்வது. பல நேரங்களில் தொடர்ச்சியாகவோ அல்லது
மன அழுத்தம் ஏற்படும் பொழுது ம்ட்டுமோ கூட இவை வரலாம்
           அதற்கடுத்ததாக பலர் சொல்வது கழுத்துவலி,
கழுத்து பாரம் மற்றும் பின் முதுகுவலி,பின்முதுகு பாரம் போன்றவை
          இது போன்ற தலை,கழுத்து,முதுகு,இடுப்பு பகுதிகளில்
ஏற்படும் உபாதைகள் பலபல மருத்துவர்களால் பல முறை
எகஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு உடல்நல‌
பாதிப்பு ஒன்றும் இல்லையென்று நிரூபிக்கபட்டாலும்
பாதிக்கபட்டவர்களுக்கு திருப்தி தருவதில்லை.
          பொதுவாக உடல் முழுவதும் உள்ள தசைகளில் வலி
உணரப்படும் விரைவில் சோர்வும்,களைப்பும் ஏற்படும்.உறக்கமின்மை
இந்த பிரச்சனைகளை மேலும் அதிகரிக்க செய்கிறது.இது மட்டுமல்லாது
ருசின்மை,பசின்மை உணவில் வெறுப்பு ஏற்படுத்தும்.இதனால்
உணவு கொள்வது குறைந்து பலவீனம் மேலும் அதிகரிக்கும்
பலருக்கு உடலுறவில் ஆர்வமின்மையும்,ஆணஉடலுறுப்பு விரைப்பின்மையும்
உருவாகிறது.மொத்தத்தில் எல்லா உறுப்புகளும் பேட்டரி தீர்ந்த‌
பொம்மை போல மெதுவாக இயங்குகிறது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

              மனசோர்வினால் உருவாகும்
                ஆபத்தான அறிகுறிகள் என்ன?
004
        
மனசோர்வு ஒரு மனிதனின் மன நலத்தை மட்டும்
பாதிப்பதில்லை அவனது கல்வி,கலவி,‍பொருளாதாரம்,உழைப்பு,
குடும்ப நலம்,நட்பு,முன்னேற்றம் போன்ற பலவித
பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
        ஆனால் இவை எல்லாவற்றையும் விட உடனடியாக
அவசரமாக தீவிரமாக கவனிக்கப்படவேண்டிய அறிகுறி
தற்கொலை எண்ணங்களாகும்.
        சாதரணமாக எல்லோர்க்கும் சலிப்பிலும்,
ஏமாற்றத்திலும் கோபத்திலும் தற்கொலை எண்ணங்கள்
ஏற்படுவது இயல்பு எனவே நாம் மற்றவர் தற்கொலை
எண்ணங்களை வெளிப்படுத்தும் போது அதை பொருட்படுத்துவதில்
அல்லது ஏளனம் செய்கிறோம்,உதாசீன படுத்துகிறோம்
பல நேரங்களில் எதிர் மறையாக தூண்டி விடுகிறோம் சிலர்
உற்சாக படுத்துவது கூட உண்டு.
        ஆனால் மனசோர்வினால் ஏற்படும் தற்கொலை
அறிகுறிகளை சுலபமாக எடுத்து கொள்வது ஆபத்தானதாகும்
         பெரும்பாலும் இவர்கள் நான் வாழ்ந்து என்ன பயன்?
நான் எதற்க்கும் உபயோகமில்லாதவன்?னான் வாழ விரும்பவில்லை
மரணம் வந்தால் எனக்கு விடுதலை யாராவது என்னை
கொன்று விடுங்கள்,நான் தற்கொலை செய்து கொள்ள்
போகின்றேன்,இறைவா எனக்கு மரணம் கொடு என
நேரடியாகவோ,இறந்தவர்கள் தன்னை அழைக்கிறார்கள்,
என்னை தற்கொலை செய்து கொள்ல தூண்டுகிறார்கள்
கட்டளையிடுகிறார்கள்.இறைவன் கட்டாயப்படுத்துகிறான்
என்பது போன்று மறைமுகமாகவோ தனது தற்கொலை
எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள் பலமுறை சிறிதாகவோ
தீவிரமாகவோ தற்கொலை முயற்சிகளில் இறங்குகிறார்கள்
          சிலர் உணவை மறப்பது,மறுப்பது போன்ற‌
மறைமுக செயல்களும் மற்றும் தீவிர மது,விபத்து போன்ற‌
எதிர்மறையான செயல்களும் தற்கொலை முயற்சியே.பல நேரங்களில்
இவை மரணத்திலும் முடியும்.  
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
           மனசோர்வு அதிகமாக யாரை பாதிக்கிறது?
005
        
மன சோர்வு யாரை வேண்டுமானாலும் ஆட்கொள்ளும்
சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி
ஆண் பெண் என்ற வித்யாசமின்றி
ஏழை பணக்காரர் என்ற பேதமின்றி
படிக்காதவர் படித்தவர் என்று விட்டு விடாமல் எல்லா நாட்டினருக்கும்
எப்போது வேண்டுமானாலும் மனச்சோர்வு ஏற்படலாம்.
        ஆனால் அறிகுறிகளும் ஆபத்துக்களும் வேறுபடும்
வயது என்று எடுத்து கொண்டால் மதிய வயதினருக்கு
அதிகமாக மனசோர்வுஏற்படுகிறது.ஆனால் உண்மையில்
மதிய வயதில் மனசோர்வு நேரடியாக வெளிப்படுகிறது.மற்ற வயதில்
நடத்தைகளால் மறைமுகமாக வெளிப்படுகிறது.
        குழந்தை பருவத்தில் சோம்பல்,விளையாட்டு
படிப்பு மற்றும் 8உணர்வு,உடைகளில் ஆர்வமின்மை,
யாருடன் இயல்பாக பழகாதது,கூச்ச சுபாவம்,தனிமையை
நாடுதல் போன்ற வித்யாசமான நடத்தைகளை வைத்தே
நாம் மனசோர்வுக்கு அவர்கள் ஆட்பட்டுள்ளதை கண்டறீய‌
முடியும்.னேரடியாக தங்களது மன நிலையை மனகவலையை
மனசோர்வை உணர்வதற்கோ வெளிப்படுத்துவதற்கான
திறமையோ மொழியோ அவர்களுக்கு இருப்பதில்லை
         அதே போல் வயோதிகர்களுக்கு வரும்
மனசோர்வு பெரும்பாலும் உடல் நல அறிகுறிகளாகவே
வெளிபடுத்தபடுகிறது உதாரணமாக தலைவலி,உடல்வலி,
அசதி போன்ற அறிகுறிகளாக கண்ணுக்கு தெரிகிறது.அவர்கள்
பெரும்பாலும் தங்களது மனசோர்வை திறந்து வெளிக்காட்டுவதில்லை
         ஆண்களை விட பெண்களுக்கு கட்டுப்படுத்துவதாலும்
ஒடுக்கபடுவதாலும் மிக அதிகமாக மனசோர்வு அதிகமாகலாம்
ஆனால் ஆண்களுக்கு மது,போதை போன்ற வடிகால்கள்
வாயிலாக மனசோர்வு தெரிகிறது.
         படித்தவரானாலும்,பாமரரானும்,ஏழையானாலும்,செல்வந்தரானாலும்
துயர் என்றாலும் பிரச்சனையானாலும் அவரவர்களுக்கு அவரவர்
துன்பம் பெரிது பெரிதாக தெரிவதால் மனசோர்வு என்பது பொதுவாகும்.    

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
              மன சோர்வு ஏற்பட காரணங்கள் என்ன?
007
     இளம் வயதினர் பெரும்பாலோர் காதல் தோல்வி என்பார்
மதிய வயதில் பலர் பண இழப்பு கடன் தொல்லை என்பார்
முதிய வயதில் பெற்ற பிளைகளால் வந்தது என்பர்
     ஆனால் பொதுவாக மக்கள் புற சூழ்னிலைகளையும்
துயரமான நெருக்கடியான மன துயர்களையும் சம்பவ களையும்
காரணமாக சொன்னாலும் உண்மையில் மூளை நரம்பியல்
இராசாயண பொருள்களின் குறைபாடுகளே மனசோர்வை
ஏற்படுத்துகிறது என்பது அறிவியல் கூறும் முடிவு

     சர்க்கரை நோய்க்கு எப்படி சர்க்கரை ஒரு
தூண்டுகோலாகஇருக்கிறது,அது போல மனசோர்வுக்கு
மற்ற துயரங்களும் துக்கங்களும் தூண்டி விடும்
காரணங்களாக அமைகிறது என்பதுதான் உண்மை.
     அடிப்படையில் பாரம்பர்யமாக தொடர்ந்து வரும்
சில மரபணு குறைபாடுகள் முக்ய காரணங்களாக‌
சொல்லபடுகிறது
      இவை மூளையின் உற்சாகம் தரும் வேதிநரம்பியல்
சுரப்புகளை குறைபடுத்துவதால் இயல்பாகவே இவர்கள்
துயரை,துக்கத்தை, விரக்தியை தாங்கும் ம்னப்பான்மை
குறைந்தவராக மனதளவில் பலவீனமான உணர்ச்சி
வயம்மடும் அமாவத்துடன் காணப்படுகிறார்கள்
     எவ்வளவுதான் சிறிய வைக்கோல் புல்லாக இருந்தாலும்
கட்டுகட்டுகாக அளவுக்கு மீறி ஏற்றினால் பார வண்டியின்
அச்சு முறியும் என்பார்கள் அது போல குழந்தை
பருவ இழப்புகள், விடலை பருவ விரக்திகள்,மதிய பருவ‌
துயரங்கள் என்று வேதனைகள் சோதனைகளாக‌
அடுக்கடுக்காக் வரும் போது உடையாத உள்ளமும் உடையும்
    அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்
அடுக்கடுக்கான துயரங்கள் மனசோர்வில் தள்ளிவிடும்.   
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 

மன சோர்வு மூளை இராசாயன‌
   மாற்றங்களால்வருமா?
008
  நமது மனம் என்பது ஒரு உறுப்பல்ல அது ஒரு
செயல்திறனே சிந்தனை செயல‌ உணர்ச்சிகள் என்ற‌
முக்கோண சுழற்சியே மனம். இதை திறம்பட இயக்கும்
ஒரு நல்ல இயக்குனரே மூளை
   மூளை என்பது ஒரு கம்ப்யூட்டரை போல,அதன்
மென் பொருள் மனம்.அதன் வன்பொருள் எனப்படும்
எந்திர ஹார்ட்வேர் அதன் நரம்பு மண்டலமே.அந்த‌
நரம்பியல் மண்டலம்,மின்சார,காந்த,இராசயண சக்திகளின்
கலவைகளால் இயக்கப்படுகிறது
    ஒரு பேட்டரியால் இயக்கப்படும் கம்யூட்டர் மாதிரியே
மூளையும் மனமும் இயங்குகிறது என்று சொல்லலாம்
   குறிப்பாக மூளை மன நரம்பியல் வேதி இயக்குனர்கள்
என்று சொல்லபடும் செய்திதூதர்கள் மிகச் சில முக்யமான‌
வேதிப் பொருள்களே
     இவை மூளை நரம்பியல் செய்தி பரிமாற்றத்தில்
தூதர்களாக செயல்பட்டு, நாம் சிந்திப்பது, செயல்படுவது
சிரிப்பது,அழவது போன்ற மன திறன்களை இயக்குகிறது
என்பது தெளிவாக நிரூபிக்கப்படுகிறது.
        இன்சுலின் எப்படி குறைந்தால் சர்க்கரை நோய்
உருவாகிரதோ அதே போல உற்சாகம் தரும் அட்ரீனலின்
போன்ற மனநரம்பியல் இயக்குனர்கள் குறைபாட்டால் மனசோர்வு ஏற்படும்.
இவை குறைபடுவதற்கு பாரம்பர்ய மரபணு குளருபடிகள் குழந்தை வளர்பருவ சம்பவங்கள் தீய

பொருள் விளைவுகள் சுற்றுபுர சூழல் வெட்ப தட்ப மாற்றங்கள் போன்ற பல நூறு காரணங்கள் கண்டறியபட்டுள்ளன
————————————————————————————————————

              மனசோர்வு பாரம்பர்யமாக வருமா?

009

    மனசோர்வு என்பதில் பல வகைகள் உண்டு அதில் சில‌
வகை தீவிர மனசோர்வு என்பது பாரம்பர்ய மரபணு
கூறுகள் வாயிலாக தொடர்வது கண்டரியப்பட்டுள்ளது
       உதாரணமாக மனஎழுச்சியுடன் மாறி மாறி
வரும் மன சோர்வு வகைகள் பாரம்பர்ய கார‌ணங்கள்
என்பது தெளிவாகிறது.
      மன கற்பனைகள் மன பிரம்மைகளுடன்
கூடிய தீவிர வகை மனசோர்வுகளும் இதில் சில வகை
மன சோர்வு வகைகளும் இதில் உட்படும்.
       எப்படி உணவில் உள்ள சர்க்கரையை
எடுக்கும் போது உதிரத்தில் அதன் அளவு ஏறாமல்
கட்டுப்படுத்தும் சக்தி குறைகிறதோ அது போலவே மனசோர்வும்
        சாதரணமாக மனிதரின் வாழ்வியல் துயர‌
சம்பவங்கள் நிச்சயமாக யாவருக்கும் மன அயர்வு,
மனதளர்வு கொடுக்கும்.
       ஆனால் பெரும்பாலோனோர் அதிலிருந்து விரைவில்
சமூகமாக சுலபமாக விடுபட்டு வெளியேறுகின்றனர்.
இது மூளை நரம்பு மண்டல வேதி இயக்குனர்களின்
திறம்பட்ட முயற்சியால் நடைபெறுகிறது.
       ஆனால் இந்த மனதை உற்சாகபடுத்தும் இரசாயன‌
இயக்குனர்கள் குறைபட்டால் மனசோர்வின் ஆழமும்
அகலமும்,நிளமும் அதிகரிக்கிறது.
        சாதாரண சம்பவங்கள் தேவைக்கதிகமான‌
மன அயர்வும்,மன தளர்வும் கொடுக்கிறது.இந்த
வேதியியல் உற்சாகப்படுத்தும் பொருள்கள் குறைபாடு
ஏற்படுவது சில பாரம்பர்ய மரபணு கூறுகளின்

குறைபாட்டினால் என்பதும் கண்டரியபட்டுள்ளது.
—————————————————————————————————–
—————————————————————————————————–

         
மன சோர்வு தீய பழக்கங்களால் வருமா?
011
     கோழி முன்னால் வந்ததா முட்டை முன்னால்
வந்ததா என்று புரியாத புதிரை காலம் காலமாக
கேட்டு வருகிறார்கள் அது போல மக்கள் தீய
பாக்கு,ஓபியம் போதை ஊசி மருந்துகள் போன்ற பல
காரணங்கள் மனசோர்வும் மனனோயும் உருவாக
ஆதாரமாக அமைந்தன என நம்புகிறார்கள் இதில்
ஓரளவு உண்மை உள்ளது என ஏற்றுக் கொள்ளலாம்
      ஆனால் நடைமுறை உண்மையில்
பெரும்பாலனவருக்கு மன்றலம் பாதிக்கப்பட்ட பின்னரே
பலவித தீமையான போதை பழக்கங்களுக்கு
ஆளாகிறார்கள்.அதிலும் இளமையில் மன நல
குறைபாடுகள் உள்ளவரே விரைவில் தீய பழக்கங்களுக்கு
அடிமையாக வாய்ப்புண்டு.
          எனவே மிதமாக இருக்கும் மனசோர்வு
தீய பழக்கங்களால் மேலும் வலுவடைந்து தீராத
தீவிரமான மனச்சோர்வாக மாறுவதே உண்மை.
           வாலிபத்தின் அறியாமையும் நண்பர்
கூட்டணியும் நாகரீக சீரழிவும் கவலையை
மறக்க போதையை சிபாரிசு செய்கிறது.
          தேர்வில் தோல்வியா காதல் தோல்வியா
வீரம் வேண்டுமா விறு விறுப்பு வேண்டுமா
ஆண்மை வேண்டுமா அனைத்துக்கும் சர்வ ரோக‌
நிவாரணிகளாக கரை கண்ட அனுபவமுள்ள
அஞ்ஞானிகள் இந்த மருந்துகளை சிபாரிசு செய்கிறார்
        விளைவு பல ஒன்று இந்த இரசாயன‌
நஞ்சுகளால் மூளை நரம்பு மண்டலம் மற்றும் உடல்
   இரத்த அணுக்களின் பாதிப்பால் மனசோர்வு வருகிறது
மற்றொன்று போதையின் பாதையால்கல்வி,காதல்
வேலை,தொழில் தோல்விகளும் நன்பரால் உறவினறால்
ஒதுக்கபட்டும் சமூக காரணங்களால் வரும்
மனச்சோர்வு மூன்று மனம் பாதிக்கப்பட்டு வரும் மனசோர்வு       
=============================================================== 

           
மன சோர்வு எல்லோர்க்கும் ஒரே மாதிரி வருமா?
012
     நிச்சயமாக மனசோர்வின் அறிகுறிகள்
பல விதமாக வேறுபடுகின்றன குழந்தை பருவம்,
விடலை பருவம்,வாலிப பருவம்,மதிய வயது
முதிய வயது என பல வயதினருக்கும் மாறுபட்ட‌
அறிகுறிகள் ஏற்படும்.
     அதே போல ஆண்களுக்கும் பெண்களுக்கும்
மனசோர்வின் வெளிப்பாடுகள் வேறுபடும் கிராமப்புற‌
நக்ர்புற மக்களுக்கும் பாமரர்களுக்கும் படித்தவ்ர்களுக்கும்
கூட மனசோர்வின் அறிகுறிகள் மாறுபடும்.
       பொதுவாக மனசோர்வு என்பது
மன இயக்கங்கள் குறைந்து தேய்ந்து கொண்டே
போவதால் ஏற்படுகிறது.எனவே அதன் வெளிப்பாடு
என்பது அந்தந்த தனி மனிதரின் சமூக அந்தஸ்து
கடமைகளை பொறுத்து வேறுபடுவதில் வியப்பில்லை
      மனன் என்பதன் மூன்று மிக
அத்யாவசமான வேலைகள் எனப்படுவது சிந்தனை,
செயல்,உணர்வுகள்.இது நடைமுறையில்
உணவு,உறவு,உறக்கம்,உடை,உற்சாகம் என
வெளிப்படுகிறது.மனம் பாதிக்கப்படும் போது
இவை யாவும் நிலவு வளர்பிறையில் தேய்வது போல
மெல்ல மெல்ல குறைய தொடங்குகிறது.
       இதை உடலின் அறிகுறிகள்
மனிதனின் அறிகுறிகள் என வகை பிரிக்கலாம்.
       நேரடியான மனதின் அறிகுறிகளான சோகம்
கவலை,விரக்தி,வேதனை தன்னம்பிக்கை இன்மை
போன்றவை வார்த்தைகளில் வெளிப்படும்.இது மதிய வயதில்
படித்த ஆண்கள் இடையே காணப்படும்
உடல் நல அறிகுறிகளாக மனசோர்வு முகமூடி போட்டு
கொள்ளும் இது குழந்தைகளுக்கு பெண்களுக்கு
கிராமப்புற மக்களுக்கு,படிக்காதவர்களுக்கு அசதி,
பல வலிகள் உடல் உபாதைகள் வடிவத்தில் வெளிப்படும்
முதியவர்களுக்கு இருவகையிலும் தீவிரமாக வெளிப்படும்
வாலிப பருவ இளைஞர்களுக்கு நடத்தை கோளாறுகளாக
காணப்படும். 

================================================================== 

          
மனசோர்வின் வகைகள் என்ன?
013
    
மனசோர்வை பல விதமாக வகைபடுத்துகிறது
ஒன்று அறிகுறிகளை காரணமாக கொண்டது
ஒன்று பாதிப்பின் அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டது
ஒன்று வயதைப் பொறுத்து வகைபடுத்தப்பட்டது
ஒன்று சூழ் நிலைகளை காரணமாகக் கொண்டது
ஒன்று மற்ற பிற மனநல பாதிப்புக்களையும் பொறுத்தது
பாதிப்பின் தாக்கங்களை பொறுத்து
மிதமானது மத்யமானது,தீவிரமானது என்று
கண்டறியப் படுகிறது.சிலருக்கு பருவ கால சூழ்நிலை
மாற்றங்களால் வரும் அடுத்தது மனகற்பனைகள் மனபிரமைகளுடன்
சிலருக்கு புரிந்து கொள்ள முடியாத காரணமற்ற
தீவிர மனசோர்வு காணப்படும்.இது மன நோயுடன்
கூடிய மன சோர்வு எனப்படும்.சிலருக்கு மீண்டும் மீண்டும்
விட்டு விட்டு வரலாம் புரிந்து கொள்ள கூடிய அறிகுறிகளுடன்
கூடியது நீயூரோடிக் மனசோர்வு எனப்படும்
வாழ்வின் துயரங்களின் விளைவாக வருவதை
ரியாக்டிமன சோர்வு என்கிறோம்.காரணமில்லாமல்
தீவிர அறிகுறிகளுடன் வருவதை என்டோஜீனஸ்
உள்ளார்ந்த மனசோர்வு என்கிறோம்.மனஎழுச்சியுடன்
மாறி மாறி வரலாம் எந்த வித அக,புற காரணம் இல்லாது
வெளிபடுவதை பிரைமரி மனச்சோர்வு என்றும்
பிற மனநல,உடல் நல,குடும்ப காரணங்களால்
வருவதை இரண்டாம் எனப்படுகிறது இந்த‌
இரண்டாம் வகை என்பது வேறு ஒரு மூல காரணத்தின்
விளைவு எனப்படும்.
       
இவற்றில் கற்பனைகள் பிரமைகளுடன்
கூடிய வகையை மன நோய் போன்ற மனச்சோர்வு
என்பது வயதின் அடிப்படையில் குழந்தைகள் மனச்சோர்வு
வாலிப மனச்சோர்வு வயோதிகத்தில் மனச்சோர்வு என
வகைப்படுத்துவார்கள்.பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்
மனசோர்வும்,பெண் முதிர் பருவத்தில் மனசோர்வும் ஏற்படும்
விபத்துக்கு பின் அல்லது துயரம் அல்லது இழப்புக்கும்
பின் மனச்சோர்வுகள் என பல வகைப்படுத்தப்படும்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
           
மன சோர்வு உடல் நல பாதிப்பா?
மனநல பாதிப்பா?
015

       
மனமும் உடலும் ஏதோ இந்தியா
பாகிஸ்தான் போல கோடு போட்டு பிரித்த எல்லை
போல இருப்பதாக நாம் நினைக்கிறோம்
உண்மையில் மனமும் உடலும் பிரிக்க முடியாத
இரண்டு கலவைகள்.
     
எப்படி இருதயம் இரத்த ஓட்டம் ஒரு
மண்டலமாக உடலோடு ஒட்டி பினைந்துள்ளதோ
அது போல மனமும் அதன் சிந்தனை ஓட்டமும்
உடலோடு நீரில் கரைந்த உப்பு போல
பரந்துள்ளது.
      
உடல் நல பாதிப்புகள் மனதையும்
மன நல பாதிப்புகள் உடல் நலத்தையும் மாற்றும்லான
ஓரே நேரத்தில் இரண்டையும் தாக்க கூடிய
பல குறைபாடுகளும் உள்ளது.பலர் மனநல‌
குறைகளை உடல் அறிகுறிகளாகத்தான் சொல்லத்
தெரியும் எனவே பிரித்து தெளிவாக சொல்ல
முடியாது ஆனால் மொத்தத்தில் மன சோர்வு
என்பது உடல் நலம் மற்றும் மன நலம்
இரண்டையுமே பாதிக்க கூடியது என்றே
சொல்லலாம்.
       
எந்த ஒரு உடல் நோயும் சாதாரண‌
வைரஸ் காய்ச்சலாகட்டும் தீவிர புற்று நோயாகட்டும்
பரவலாக காணப்படும் ஆஸ்த்மா சர்க்கரை
நோயாகட்டும் ஏதாவது ஒரு சிறிதாகவாவது மனதை
பாதிக்காது இருக்காது.
     
அதே போல பெரும்பாலான மனநல‌பிரச்சனைகள் ஏதாவது ஒரு உடல் நல அறிகுறி இல்லாது
இருக்காது.ஆனால் மனச்சோர்வு போல இரண்டையும்
சம அளவில் பாதிக்க கூடியது,குழப்ப கூடியது வேறு
எதுவும் இல்லை ஆனால் முழுக்க முழுக்க மனசோர்வு
மாற்றும் மன உற்சாகம் தரும் மருத்துவ சிகிச்சைகளால்
மட்டுமே மனசோர்வு குணமாவதால் அதை மனநல பாதிப்பு
என்று சொல்வதே பொருத்தமாகும்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
          உடல் நல பாதிப்பிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
016

       மனசோர்வின் அறிகுறிகள் பெரும்பாலும்
உடல் நல பாதிப்புகள் போலவே தோன்றும் அது போல
பல வித உடல் நோயின் அறிகுறிகளும் அது பற்றிய
மன வேதனைகளும் மனசோர்வு என என தவறாக
புரிந்து கொள்ளப்படும்.
       ஒவ்வொரு வயதிலும் கால கட்டத்திலும்
சில நோய்கள் மனசோர்வு போல தோன்றும்
உதாரணமாக இரத்த அணுக்கள் குறைவாகும்
இரத்த சோகை இரத்த புற்று நோய் போன்றவை
உற்சாகமின்மை,பலகீனம்,பசியின்மை,உடல் வலிகள்
மயக்கம்,போன்றவை ஏற்படும் அப்போது இயல்பாகவே அவ‌ரது வாழ்வில் இதற்கு தொடர்பில்லாத 
துயர சம்பவங்கள் ஏற்பட்டால் அவரது அறிகுறிகளை மனசோர்வு என புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது.
       இரண்டாவதாக உடலில் எங்கேனும் கண்டுபிடிக்க முடியாதபடி புற்றுநோய் மறைந்திருந்து இது
போன்று மனசோர்வு போல அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு.காலப்போக்கில் உண்மையான காரணம் 
வெளிப்படும் வரை அவர் மனச்சோர்வினால் பாதிக்கபடுகிறார் என சிகிச்சை அளிக்கபடுவதுண்டு.
   அடுத்தாக பலவித நாளாமில்லா சுரப்பிகளின் ஹார்மோன்கள் குறைவுகளிலும் சோர்வும் களைப்பும்
ஏற்பட்டு மனசோர்வு போல தோற்றமளிப்பதுண்டு குறிப்பாக தைராய்டு சுரப்பு குறைவு மனசோர்வு போல‌
பல அறிகுறிகளை  ஏற்படுத்தும்.
 வயதானவர்களுக்கு பல மூளை, ந‌ரம்பு மண்டல தாக்கங்கள் மனசோர்வு போல முகத்தை
 காட்டுவதுண்டு பார்க்கின்சோனிசம்,டிமென்சியா,மூளை கட்டிகள்,மற்றும் மூளை நரம்பு தேய்மானம்
போன்றவையும் மனசோர்வு போல முகமூடி போட்டு கொண்டு ஏமாற்றுவதுண்டு.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
            மன சிதைவிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
017
        மனசிதைவின் இரண்டு வகை உண்டு
ஒன்று ஆர்ப்பாட்டமும் வன்முறையுடன் கூடிய பரபரப்பானது
மற்றது அமைதியாக புற உலகுக்கு தெரியாத ஆழமானது
       அதே போல மனசோர்விலும் இரண்டு விளைவுகளுண்டு
ஒன்று பரபரப்பு,படபடப்பு,ஆங்காரமும்,அவசரமும்
பிதற்றலும் உடையது வெளிப்பாடானது மற்றது மெளனமாக
துயர நிலையில் தூண்டபடுவது
       அமைதியான மனசோர்வையும் ஆர்பாட்டமான‌
மனசிதைவும் சுலபமாக பாடுபடுத்தப்படும்
      அதே போல எதிர் மறை அறிகுறிகளுள்ள‌
மனசிதைவும் பரபரப்பான மனசோர்வும் சுலபமாக‌
ஒப்பிடப்படும்.
       ஆனால் செயல்களின் ஒரே மாதிரியானவர்
இருவரை ஒருவரிடமிருந்து பாகுபடுத்து சுலபாமானதல்ல‌
மந்தமாக சாப்பிடாது குளிக்காது வேலைக்கு போகாது
ஒரே குடத்தில் எந்த சலனமுமில்லாத போது
அவருக்கு மன சோர்வா மன சிதைவா என கண்டறிவது
கடினம் ஆனால் மன சோர்வு உள்ளவர்கள்
முகம் வேதனை துயரத்தை காட்டும்.மனசிதைவுள்ள‌
முகம் எந்தவித உணர்ச்சியும‌ற்று தானே
பேசுவது சிரிப்பது போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்
       அதே போல் அதீத நடவடிக்கை மாறுபாடுள்ள‌
பேச்சிலிருந்து வேறுபடுத்தலாம்.பெரும்பாலும்
மனசோர்வு உள்ளவரின் பேச்சும் கவலைகளும்
மற்றவர்களால் புரிந்து கொள்ள கூடியதாகவே இருக்கும்
      ஆனால் கற்பனைகளுடன் பிரமைகளுடன்
கலந்த தீவிர வகை ம்னசோர்வு கிட்ட தட்ட,
மனசிதைவு நோய் போலவே தோன்றும் இரண்டு
வகையையும் அனுபவமுள்ளவரே புரிந்து கொள்ள‌ முடியும். 
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
            மன சிதைவிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
018
        மனசிதைவின் இரண்டு வகை உண்டு
ஒன்று ஆர்ப்பாட்டமும் வன்முறையுடன் கூடிய பரபரப்பானது
மற்றது அமைதியாக புற உலகுக்கு தெரியாத ஆழமானது
       அதே போல மனசோர்விலும் இரண்டு விளைவுகளுண்டு
ஒன்று பரபரப்பு,படபடப்பு,ஆங்காரமும்,அவசரமும்
பிதற்றலும் உடையது வெளிப்பாடானது மற்றது மெளனமாக
துயர நிலையில் தூண்டபடுவது
       அமைதியான மனசோர்வையும் ஆர்பாட்டமான‌
மனசிதைவும் சுலபமாக பாடுபடுத்தப்படும்
      அதே போல எதிர் மறை அறிகுறிகளுள்ள‌
மனசிதைவும் பரபரப்பான மனசோர்வும் சுலபமாக‌
ஒப்பிடப்படும்.
       ஆனால் செயல்களின் ஒரே மாதிரியானவர்
இருவரை ஒருவரிடமிருந்து பாகுபடுத்து சுலபாமானதல்ல‌
மந்தமாக சாப்பிடாது குளிக்காது வேலைக்கு போகாது
ஒரே குடத்தில் எந்த சலனமுமில்லாத போது
அவருக்கு மன சோர்வா மன சிதைவா என கண்டறிவது
கடினம் ஆனால் மன சோர்வு உள்ளவர்கள்
முகம் வேதனை துயரத்தை காட்டும்.மனசிதைவுள்ள‌
முகம் எந்தவித உணர்ச்சியும‌ற்று தானே
பேசுவது சிரிப்பது போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்
       அதே போல் அதீத நடவடிக்கை மாறுபாடுள்ள‌
பேச்சிலிருந்து வேறுபடுத்தலாம்.பெரும்பாலும்
மனசோர்வு உள்ளவரின் பேச்சும் கவலைகளும்
மற்றவர்களால் புரிந்து கொள்ள கூடியதாகவே இருக்கும்
      ஆனால் கற்பனைகளுடன் பிரமைகளுடன்
கலந்த தீவிர வகை ம்னசோர்வு கிட்ட தட்ட,
மனசிதைவு நோய் போலவே தோன்றும் இரண்டு
வகையையும் அனுபவமுள்ளவரே புரிந்து கொள்ள‌ முடியும். 
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
          மன பதட்டத்தினால் மனசோர்வு வருமா?
019
      புயலுக்கு பின் அமைதி,ஓட்டத்திற்க்கு பின் சோர்வு
நிச்சயம் அது போல அளவுக்கதிகமான மனபதட்டத்தின்
காரணமாக மனசோர்வு ஏற்படுகிறதது.பல சந்தர்ப்பங்களில்
இரண்டும் ஒட்டி உடன் பிறந்த சகோதரர்கள் போல‌
ஒன்றாகவே வளர்கிறது.
        நடைமுறையில் பலர் இரண்டும் கலந்த
வகையான மனநல தாக்கங்களால் பாதிக்கப்படுகிறார்கள்
எது கூடுதல் பதட்டம்ம் சோர்வு மட்டுமா என‌
தராசிலிட்டு நிறுத்தாலும் முடியாத அளவிற்க்கு பலர்
இரு வகையான உபாதைகளாலும் நீண்ட‌
காலம் துயர் படுவதை காண்கிறோம்.
         மனநல மருத்துவ மருந்துசிகிச்சைகள்
கூட இரண்டையும் ஒரே நேரத்தில் சரி செய்ய
கூடியவையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.சிலருக்கு
மன பதட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால்
மனசோர்வு என்பது முகமூடி போட்டு உறங்கி
கொண்டிருக்கும்
         முகமூடி போட்டு மறைந்து கிடக்கும்
இந்த மனசோர்வை கண்டறிய வேண்டும் பெரும்பாலும்
அசதி,களைப்பு,சோர்வு,வலிகள்,பசியின்மை,
ஞாபக மறதி,போன்ற உடன் நல உபாதைகள் என்ற‌
போர்வைக்குள்ளே மனசோர்வு ஒளிந்து கிடக்கும்
        இன்னும் சொல்ல போனால் இந்த
முகமூடி போட்ட உபாதைகளால் அது தீவிரமான உடல்
நோய்களின் அறிகுறிகள் என்ற கற்பனைகளால்,
எதிர்காலமின்மை என்ற அச்சங்கள் பெருகுகின்றன.
          தீவிரமான நோய் என்ற கற்பனை பயங்களும்
மரண பயங்களும் முடிவில்லாத ஒரு தொடர் வட்டம்
போல சுற்றி சுழலும் இந்த சுழல்
சிந்தனைகளால் மனபதட்டமும் மனசோர்வும் மாறி மாறி
ஒன்றையொன்று தானே அதிகரிக்கும் காரண காரணிகளாக
மாறுகின்றன.இரண்டையும் ஒரே நேரத்தில்
கவனிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமாகிறது.  
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
          மனபீதியினால் மனசோர்வு வருமா?
020
      பயம் என்பது ஒரு நெருப்புத்துளி என்றால்,பீதி என்பது
ஒரு காட்டுத்தீ என்று சொல்லலாம்.அதீதமான திவிரமான சில நொடி
அச்சம் என்பது பீதி என்று உணரப்படுகிறது.
       மனபீதியின் போது அச்சம் என்ற உணர்வு கூட‌
உரைப்படாமல் அதையும் தாண்டி மனிதமனம் அதீதமான அவஸ்தை
அடைகிறது.
        மனபீதியின் போது உடல் நல கொந்த்ளிப்பு அதிகம்
அட்ரீனலின் மருந்தை இரததக் குழாய்களில் பாய்ச்சியது போல
திடீர்,தீவிர,அதீதமான உடல் மாற்றங்கள் அவஸ்தை தருகின்ற‌ன‌
முக்கியமாக தானியங்கி அனிச்சை நரம்பு மண்டலங்களில்
புயலடித்தது பூகம்பம் வந்தது போல பிரனயமே நிகழ்கிறது
       உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இது உணரப்படுகிறது
இருதயம் என்பது புல்லட் ரயில் வேகத்தில் ஓடுவது போல
உணரப்படுகிறது.காற்றில்லாத ஆகாயத்தில் தூக்கி போடப்பட்ட
மீன் போல சுவாசம் திணறுகிறது வேர்த்து கொட்டுகிறது.
நாக்கு உலர்கிறது தலை சுற்றுகிறது.
       இந்த பீதியினால் உடலுக்கு ஒரு ஆபத்தும் இல்லை,ஆனால்
மரண பயத்தை விதைக்கிறது.
        மறுபடியும் எப்போது வரும் எப்படி வரும் என்பது தெரியாது
எப்படி வேண்டுமானாலும் வரும் எப்போது வேண்டுமானாலும் வரும்
இந்த எதிர்பார்ப்பு பயம்,தலைக்கு மேலே கத்தி தொங்குவது
போல ஒரு அவஸ்தை தருகிறது.
       இந்த அச்சமும்,பயமும்,அதீத பீதியும்,எதிர்ப்பார்ப்பு பயமும்
மரண பயமும்,நோய் பயங்களும்ன் உடலையும் உள்ளத்தையும்
எந்நேரமும் எண்ணெய் சட்டியில் வருத்தெடுக்கிறது.
இதன் விளைவாக அவனது உடல் பொருள் ஆவி அனைத்தயும்
இந்த எதிர்மறையான எண்ணங்கள் ஆக்ரமித்து அரக்கர் போல
ஆட்சி செய்கிறது.
        அவரது அத்தனை செயல் திறனும்,நம்பிக்கைகளும் பாதிப்படைகிறது
வாழ்வு சலிப்பும் வெறுப்பும் அடைகிறது உடலும் உள்ளமும் சேர்ந்து
மனச்சோர்வு என்ற அதன் பாதாளத்தில் வீழ்கிறது.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
            கல்வி பிரச்சனைகளால் 
மனச்சோர்வு வருமா?
021
    கல்வி எப்போதும் மனிதனுக்கு சுமையில்லை
    ஆனால் பிரச்சனை என்பது கற்பித்தலில் தானே?
இயல்பாக மனித மனம் சுதந்திரமாக செயல்படவே விரும்புகிறது
நடைமுறையில் ஒரு குழந்தையை மனிதனாக்க வேண்டி
ஆண்டாண்டு காலமாக கல்வி முறைகள் மேம்படுத்தப்பட்டு
வருகின்றன.
     மனிதரின் கற்ப்பிக்கும் முறைகள் பல நூறு வேறுபாடுகள்
உடையவை.அது கூட பிரச்சனையில்லை.
     ஒவ்வொரு மனிதனின் கற்க்கும் திறனைகள் என்பது
பல ஆயிரம் வகைபாடுகள் உள்ளவை.
gq     என்று சொல்லும் அறிவுத்திறன் என்பது
பல பரிமாணங்கள் உள்ளது
      ஆனால் க‌ல்வியாளர்களும் சரி,
             பெற்றோர்களும் சரி,
இதை யாரும் கண்டு கொள்வதேயில்லை.
மொத்தமாக எல்லா அழுக்கு மூட்டைகளையும்
வெள்ளாவியில் வைத்து வெளுக்கிறார்கள்
       Lkg முதல் phd வரை இந்த கற்பிப்பவருக்கும்
                         கற்பவருக்கும்
ஏற்படும் போராட்டங்கள் பல விதமானவை
இதனால் எல்லோர்க்கும் மனபதட்டம்,மன அழுத்தம் இறுதியில்
மனசோர்வு ஏற்படுகிறது.
    குறிப்பாக 13 முதல் 18 வயது வரை உள்ள வாலிப பையன்க‌ளுக்கும்,
      அவரது பெற்றோர் அதிலும் குறிப்பாக அவரது
அம்மாக்களுக்கும்,அளவு கடந்த எதிர்பார்ப்புகளும்,
ஏமாற்றங்களும் பலருக்கும் மனசோர்வை அதிகமாக்குகின்றன .
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
             மனசோர்வு குழந்தைகளை பாதிக்குமா?
022
      குழந்தைகளில் மனச்சோர்வின் அறிகுறிகள் முழுமையாக
மற்றவரது மனச்சோர்விலிருந்து மாறுபடுகிறது
          வயது,அனுபவம்,அறிவு உணர்வுள் முற்றிலும் வேறுபடுதல்
அதை உணர்வது கடினம்.
        சாதரணமாக பசியின்மை என்பது,சரியாக சாப்பிட மறுக்கிறது
என்று,வயிற்றில் பூச்சி,சோகை, tb என்று,அனுமானம்
செய்து அதற்கான மருந்துகள் முயற்சி செய்யப்படும்
        ஆனால் பசியின்மை,சரியாக படிக்க முடியவில்லை,
சரியாக விளையாட மறுக்கிறது,யாருடனும் பழகுவதில்லை
மந்தமாக இருக்கிறது.
       இது போன்ற பல அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்படும்
மனசோர்வின் போது காணப்படுகிறது
       மனவளர்ச்சி,மந்தமான குழந்தைகளுக்கு பிறவியிலிருந்து
இப்படி இருக்கும் ஆனால் இய்ல்பான துருசுருப்பனவை
திடீரென சில வாரங்கள்,சில மாதங்கள் இப்படி மாறினால்
அதுமனசோர்வின் மாற்றமாகைருக்ககூடும்
           ஆனால் அறியாதவர் இது பேய் பிசாசு கிரககோளாறு
என ஏமாந்து விடுகிறார்கள்
             வசதியுள்ளவர்கள் உடல்நோயோ,ந்ரம்பு’மூளைபாதிப்போ
என பல பரிசோதனைகள் செய்து குழப்புகிறார்கள்.
         தாய்,தந்தையர் மன முறிவு,விவாகரத்து,பெற்றோரிடையே
உள் நாட்டுபோர் தந்தையிடையே மதுபழக்கம்,தாயின் மனன்நோய்,
மனஸ்தாபம்,கேலி கின்டலால் பாதிப்பு,ஆசிரியருடைய வன்முறைகள்
இன்னும் இது போன்ற பல காரணங்கள் குழந்தைகள்
மனச்சோர்வில் காணப்படுகின்றன.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
    மனசோர்வு எப்படி மாணவர்களை பாதிக்கிறது?
         ஒரு குருடர் பள்ளியில் கண் பார்வையிழந்த மாணவிகளுடன்
பேசிக்கொண்டிருந்தோம்.
      அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக,பயனின்றி,தடையின்றி
ஓடி ஆடி விளையாடுவதை பார்க்க மனநிறைவாக இருந்தது
     தயக்கத்துடன் உங்களுக்கு பார்வையில்லை யென்று
வருத்தமாக இல்லையாஎன்று கேட்டோம்.
       அதற்க்கு அவர்கள் தந்த பதில் புதிதாக நம்மை சிந்திக்க‌
வைத்தது.எங்களுக்கு பயமில்லை,கவலையில்லை
      ஆனால் அம்மாவும் அப்பாவும்
            எப்படி பிழைக்க போகிறாயோ?
      ஆண்டவன் உன்னை இப்படி படைத்தானோ?
           என அழுவதைப்பார்த்து எங்களுக்கு அழுகை வருகிறது
கண்ணில்லையே என்பதை விட
சமூகம் கொடுக்கும் மன அழுத்தமே ஆபத்தானது
இது போல மாணவர்கள்
      அறியாத பருவத்தில் விளையாட்டாக வாழ்கிறார்கள்
கல்வி என்பதும் கண் போலத்தானே
கல்லாதவர் வழியிரண்டும் புண்தானே
    ஆகவே ஆசிரியரும் பெற்றோரும்,சமூகமும்
கொடுக்கும் அழுத்தம் மாணவர்களால் தாங்க முடிவதில்லை
நமது கல்வி முறை என்பது முழுக்க முழுக்க தேர்வுகளை
பிரதானமாகக் கொண்டது,இது மேலும் தேவையானது
தலையில் தொங்கும் கத்தி போல‌
      கரணம் தவறினால் மரணம் என்று
கம்பியில் நடப்பது போல கல்வி மாணவர்களுக்கு
துயர் தருகிறது.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx