ஒரே ஆண்டவன் உமர் கயாம்

இறைவா
உம்மைதேடலில்இந்தஉலகம்
தன்அறிவைஇழந்துவிட்டது
ஒருவனேதேவன்.
பத்துவிதிகள்
ஒன்பதுமேடைகள்
எட்டுசுவர்க்கங்கள்
எழதளங்கள்
ஆறுகாரணங்கள்
ஜந்துபுலன்கள்
நான்குகருத்துக்கள்
மூன்றுஆன்மாக்கன்
இரண்டுஉலகங்கன்
ஒரேஆண்டவன்

                  உமர் கயாம்.

ஷேக்ஸ்பியர்

இம்சைஇதயக் கால்களுக்கு கட்டு
    இசைஇறுக்க கட்டறுக்கும் கத்திரி
துக்கம்உள்ளத்தை கவ்வும்
   இசைவந்து அதை விடுவிக்கும்
               
மூடனோதன்னை ஞானி என்கிறான்
ஞானியோதன்னை மூடன் என்கிறான்
வாழ்வென்பதுஒரு ஆடை
 நீண்ட நூல்கள் நன்மை
குறுகோடும்நூல்கள் தீமை
சிலர்பெருமையுடன் பிறக்கின்றனர்
சிலர்பெருமையை அடைகின்றனர்
சிலர்பெருமையை தேடுகின்றனர்
  இரப்போர்குதிரை ஏறினால்
 குதிரை இறக்கும் வரை இறங்குவதில்லை

ஷேக்ஸ்பியர்

கீதாஞ்சலி

                                    
எங்கேஅஞ்சாதமனமுண்டு  ?
எங்கேவளையாததலையுண்டு?
எங்கேஅடங்காதஅறிவுண்டு?
அங்கேஎன்தாய்நாடுஉண்டு.
எங்கேசாதியில்லாஊருண்டு?
எங்கேமதமில்லாமனிதண்டு?
எங்கேஉறங்காதஉண்மையுண்டு?
அங்கேஎன்தந்தைநாடுஉண்டு.
எங்கேஅயராதமுயற்சியுண்டு?
எங்கேபழமையில்லாஎழிலறிவுண்டு?
எங்கேவரம்பில்லாதஇறையருளுண்டு?
அங்கேஎனதருமைநாடுஉண்டு.

கீதாஞ்சலி 
தாகூர்

தாகூர்

பாடவந்தபாட்டைஇன்னும்பாடவில்லை
    காலமின்னும் கனியவில்லை
வார்த்தையொன்று கச்சிதமாய்அமையவில்லை
     தாள மொன்றும் வரவில்லை
வற்றாததாகம்மட்டும்தீரவில்லை
   மலர் இன்னும் அரும்பவில்லை
   மனம் மட்டும் உறங்கவில்லை

       
தாகூர்

கவி ரவீந்தர நாத் தாகூர்

உன்தோளில்உன்னைநீயேசுமந்துதிரிகின்றாய்
நின்வாசல்முன்னேநீயேஇரந்துதிரிகின்றாய்
சுமைகளைஎண்ணிவீனேசோர்ந்துகிடக்கின்றாய்
சுமக்கின்றஆண்டவன்சுமக்கட்டும்விட்டுவிடுவாய்

           
கவி ரவீந்தரநாத்தாகூர்

ரமணர்

      நானென்பது மாயை
      நமதென்பது பேதமை
      தானென்பது மமதை
      தனதென்பது கற்பனை
      மன சிலந்தி மாட்டும் மாயவலை
     காதலேறிய காமுகனுக்கு விலைமாதரும் கற்புக் கரசியே
     ஆசை மீறிய மனிதனுக்கு அனைத்துலகம் உண்மையே.
     இதயத்தின் ஆழத்தில் தெளிந்து விடு
     தூய இறைபோல் துயரத்தை கடந்து விடு
     புறத்தில் மனிதனாகவும் அகத்தில் ஆண்டவனாகவும் இரு
   
     கயிறை பாம்பென திரிப்பது சிந்தையே
     காணாததை கண்டதென சிருப்பது விந்தையே
     உடலில்லாமல் உயிரில்லை,
     உயிரில்லாமல் உணர்வில்லை,

     உணர்வில்லாமல் உலகமில்லை.

மலர்

    
காதல்அழகிக்கும் பரிசானேன்
காதல்மனைவிக்கும் பரிசானேன்
தலைவருக்கும்மரியாதை செய்தேன்                    
அமரர்க்கும்மரியாதை செய்தேன்
சோகத்திற்க்கும்துணை நின்றேன்
போகத்திற்கும்துணைநின்றேன்
நிமிர்ந்துகண்டது ஒளியை மட்டுமே
குனிந்துகாணாதது நிழலை மட்டுமே
மலரின்ஞானம் மனிதரிடம்   மலரட்டுமே.

கலீல்கிப்ரன்