தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது

                            
 பாவம்

034b 

தேவைப்படும் போது சாத்தான் கூட 
வேதத்தின் வாசகத்தை சாதகமாக்கும்___சேக்ஸ்பியர்

இறுதியில் எல்லா தீமைகளும் மன்னிக்கப்படுகிறது___சொபக்ள்ஸ்

மனிதனின் தீமைகள் அவன் இறந்த பின்னும் தொடரும்___சேக்ஸ்பியர்

பொருளாசைதான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர்___பைபிள்

நன்மையை புறக்கணிப்பது 
தீமையை ஆதரிப்பதை விட தண்டிக்கபடவேண்டும்___புளூடார்ச்

தீமையும் பாவமும் புகழ் பெற 
சரியான பருவம் நல்லவர் ஊமையாகும்  காலம் __எட்மன்ட்பர்க்

நன்மையில்லாத வெற்றிடத்தில் 
தீமையெனும் நஞ்சு பரவும்___அயன்ரான்ட்

பாவத்தை எதிர்த்து தவிர்த்து நில் 
அது பயந்தோடி விலகிப்போகும்____பைபிள்

மதுவில் புறப்படும் நறுமணமே 
உனக்கு சைத்தான் என்ற பெயரே பொருத்தமானது ___சேக்ஸ்பியர்

பாவத்தோடு ஒத்துழையாமல் மறுப்பதே நமது முதல் நன்மை__‍மகாத்மா


தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது 
மரமான பின் அழியாது___அரிஸ்டாடில்



அறிவு உறங்கினால் ஆசைப் பேய்கள் குதியாட்டம் போடும்

                           
ஆசை

014 a

அடைய வேண்டுமென்ற ஆசை அழிக்கமுடியாதது___ஆல்பர்ட்கேம்ஸ்
அறிவு உறங்கினால் 
ஆசைப் பேய்கள் குதியாட்டம் போடும்___பிளோட்டோ
ஆசைப்படு தேடு கண்டுபிடி அனுபவி
ஆனால  அடி பணியாதே___டென்னிஸன்
பெரும்பாலானவர் அறிவால் சிந்திப்பதை விட 
ஆசையால் சிந்திக்கிறர்___வில்ட்யூரண்ட்
பகுத்தறிவு உறங்கும் போது 
கீழான இச்சை பேய்கள் குதியாட்டம் போடும்___பிளேட்டோ
ஆசையை தாங்க விடு ஆர்வத்தை விழிப்போடு வை___வால்டர்ஸ்காட்
அடிமைக்கு ஒரு முதலாளி 
ஆசைபட்டவனுக்கு ஊரெல்லாம் முதலாளி__லாபுரூயர்
நமது எண்ணம்  செயல் அனைத்துக்கும் 
ஆதாரமாய் உள்ள்து ஆசை___ஆர்தர்ஸ்கோப்னர்
சன்னல் இல்லாத கண்ணாடி சிறையில் மனம் சிதைகிறது__எமர்சன்

தேவைகளை கணக்கிடும் மனிதன் 
தன் திறமைகளைமறைக்கிறது___நெப்போலியன்

வறுமை என்பது குறைந்த செல்வம் என்பதை விட அதிக ஆசையே

                             பேராசை
 014 a

முதல் ஆசையை தவிர்ப்பதே சுலபம் தொடரும் ஆசைகளை தீர்ப்பது கடினம்___பிராங்களின்
உள்ளத்தில் ஆசையின் பாரம் இருக்கும் வரை கடவுள் வர முடியாது___ரஸ்கின்
வறுமை என்பது குறைந்த செல்வம் என்பதை விட அதிக ஆசையே___ஆவ்பரி
தேன் கிண்ணத்தில் சுற்றும் சிற்றெறும்பென உலகில் நாம் சுற்றுகிறோம்___உமர்கயாம்
மனிதமனம் பார்ப்பதை எல்லாம் தனக்கு சொந்தமாக்க ஆசைப்படுகிறது___பார்ஸ்டர்
குறைய இருப்பவனை விட நிறைய ஆசைப்படுபவனே ஏழை___செனீகா
ஆசைகள் வளர வளர தேவைகளும் வளரும்___பிளேட்டோ
நமது குணங்கள் பேராசைகளால் பாதிக்கப்படுகின்றன___ரூசோ
காலமும் எண்ணமும் பசித்த புலியை விட கட்டுக்கடந்தாது___சேக்ஸ்பியர்

விலை போகாமல் தன்னை தற்காத்து கொள்பவர் எவருமில்லை____ஞார்ஞ்பாஹிங்ஙடன்

கேள்விகள் பல?

ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம்
தமிழின,இந்திய,இந்து கலாசாரத்தில்
நிலையாமை தத்துவத்திற்க்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு
இதை போற்றி புகழ்ந்து படிப்பித்தது ஏன்?
ஒருபக்கம்   power of positive thinking பேசுகிறது
மறுபக்கம் வாழ்வே மாயமென ஒப்பாரி ஏனோ?
கேள்விகள் பல?
விடை கிடைத்தது இந்தக் கவிதையில்?
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி இதில்
வாழ்வதில்லை நீதி
“நிலை” மாறுகிறது.விலைவாசி போல விலைமாறமாற‌
நம் நிலைகளும் மாறுகிறது
பூமியே நிலை மாறி சுற்றுது
மனிதர் மட்டுமென்ன?
சொன்ன வாக்குறுதிகள் காற்றோடு போச்சு
உறுதி மொழிகள் எதிலும் உறுதியே இல்லை
நாவுக்கு கொள்கை  இல்லை
கொள்கைகள் மாறுகிறது
குணங்கள் மாறுகிறது
பச்சோந்தி போல நிறம் மாறுகிறது மனிதமனம்
எதுவுமே நிலையாக இல்லை
இதில் உயிரை மட்டும் நிலைக்க வைக்க முடியுமா என்ன?
பிறந்தவன் இறப்பது உறுதி
ஆனால் பிறப்புக்கு முன்பே இறப்புமுண்டு
பிரசவத்திலே இறந்து கூட பிறப்புமுண்டு
இப்படி ஏன் சோககீதம் பாடுகிறார்
இப்படி மரணம் என அமங்கலம் பாடினால்
மனிதனுக்கு எப்படி ஆர்வம் வரும்?
எப்படி உற்சாகம் வரும்?
எப்படி ஆசை வரும்
ஆர்வம்,உற்சாகத்தை குறைக்க அவர் இப்படி பாடவில்லை
ஆசையை அதனால் விளைந்த அநீதியை தடுக்கத்தான்
ஞானிகள் நிலையாமை தத்துவத்தை நிலைநிறுத்தினார்
‘நிலைக்கும்’என கனவு காண்கிறது மனம்
அழியும் உடலுக்காக
ஆவியாகும் உயிருக்காக‌
பேராசைப்பட்டு நீதியை மறக்கிறது
சமூக நீதியை மற‌ந்து
மானுடதர்மத்தை துறந்து
கொலை,கொள்ளை,ஊழல வன்முறை,காமம்,களவு
என அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணமாகிறது இந்த கனவு
கனவு காணாதே கலைந்து விடும் என எச்சரித்தார்
கலைந்தோடும் இந்த வாழ்வுக்காக,எரியும் இந்த உடலுக்காக‌
மனித சாதியே நீர் மானுட நீதியை மறவாதீர்,என எச்சரித்தார் நகைச்சுவையாக‌

மூன்றே வாக்யங்களில் மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்

பெண்ணாசை உடலோடு பிறந்தது
மண்ணாசை மனிதனோடு வளர்ந்தது
பொண்ணாசை இன்னும் வளர்கிறது
மூன்றே வாக்யங்களில்
மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
விஞ்ஞானம்,மெய்ஞ்ஞானம் என அத்தனை ஞானங்களை திரட்டிய‌சத்ய வேத வாக்குகள் இவை.
காமம் என்பது நம் உடல் சுரப்பி எனும் ஹார்மோன்களால்
ஒவ்வொரு அனுவுக்குள் புகுந்து பரந்துள்ளது
ஒருயிரிலிருந்து அது மனிதகுலம் வரை பாகுபாடின்றி பதிந்துள்ளது
பரிணாம வளர்ச்சியில் நம் மிருக இனத்தின் மீது அது.
அது மன்னிக்கப்பட கூடும்,
நம் உடலோடு ஒட்டிப்பிறந்த பாரம் அது,
ஆனால் அடுத்தது பதவியாசை,
கால் பதித்த தடங்கள்
கண் பார்த்த நிலங்களை வளைத்து போட்டது
பட்டா போட்டு பத்திரமாக பதிவு செய்தது
படையெடுத்து சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்தது
எத்த்னை போர்கள்
எத்தனை கொலைகள்
மனித வரலாறு அத்த்னையும்
உதிரம் நிரம்பிய பேனாவால் எழுதப்பட்டது
அது வளர்ந்தது என்றான்
இரண்டாம் உலகப் போருடன்
கொஞ்சம் ஓய்ந்து கிடக்கிறது என்று நம்பினான்.
மூன்றாவது பென்னாசை வளர்கிறது என்றான்
தங்கத்தின் விலை நிலவைத் தொட்டாலும்
நிற்கப் போவதில்லை என்று எதிர்காலத்தையும்
உணர்ந்திருந்தான் போலும்
மூன்று காலத்தையும் உணர்ந்தவன் அவன் ஞானி.
பெண்ணாசை வாலிபத்தில் தீரும்
மண்ணாசை ரோகத்தில் மாறும்
ஆனால் செல்வத்தின் மீதுள்ள ஆசை
உலகப் பொக்கிஷங்கள் யாவும் தந்தாலும் குறைவதில்லை
தள்ளாத வயதில்
தடியூன்றி நிற்க முடியாத போதும்
தளராது இந்த தங்கவெட்டை
உலகில் திகட்டாதது எதுவும் இல்லை
செல்வத்தை தவிர‌
போதும் என்று சொல்ல முடியதாதது
செல்வம் ஒன்றுதானே.
தங்கமும்,வைரமும்,செல்வமும்,
என பிரிந்தது அத்தனையும் அச்சடித்து காகிதம்
எனும் பணத்தால் இன்னும் பலமடங்கு ஆசையூட்டுகிறது
மனிதன் கண்டுபிடித்ததில் மகத்தானது பணம்
முதன்மையானது இந்த அச்சடித்த பச்சை நோட்டு
அதற்கு மயங்காதவர் யாருமில்லை
பனியாதவர் எவருமில்லை
அதன் ஆட்சி நிலையானது

அழியாதது உலகத்தை அழிக்கும் வரை 

பெரிய பெரிய ஆசைகள்


ஒன்றை மாற்றி ஒன்றை பிடிக்க முயன்றோம்

ஒன்றையும் பிடிக்காமல் இறுதியில் மடிந்தோம்

கட்டிய மணைவியின் தாலி மஞ்சள் ஈரம் காயும் முன்மே
அவள் தங்கையின் பின்னே போகுது கணவன் கண்கள்
நல்லதாகட்டும்
கெட்டதாகட்டும்
மாறுகிறது மனம்

புகையை மறக்கிறேன் என்று மது
காதலை மறக்கிறேன் என்று மது
ஆசைப்பட்டது கிடைக்கு முன்பே அடுத்த ஆகை
கிடைத்துவிட்டாலும் புதிய ஆசை
பெரிய பெரிய ஆசைகள்
முதல்வரானால் பிரதமராக ஆசை
கிளை தாவிகொண்டிருக்குது மனிதமும் அவர் மனமும்
மனிதமனம் ஒரு குரங்கு என்று பாடினார்
நிலை மாறினால் குணம் மாறுவான் என்றார்
எல்லா விலங்குகளும் ஒரே பாதையில் தொடரும்
மரம் ஏறினாலும் ஒரே மரத்தில் ஏறும்
அமைதியில்லாத திருப்தியில்லாத‌
மந்தி மட்டும் மரத்துக்குமரம் தாவும்
ஒரு கிளை விட்டு அந்தரத்தில் தாவி
அடுத்த மரத்தை பிடிக்கும்
மந்தி கூட தேவலை, இதை அழகாகச் செய்யும்
அதிலிருந்து வ்ந்தவனுக்கு
அதைக் கூட ஒழங்காகச் செய்யத் தெரியாது
அந்தரங்கத்தில் தாவி
ஆபாச ஆட்டம் ஆடி
கீழே விழந்து எலும்பு முறிந்து சாவும்
கண்ணை நிறத்த தெரியாது,
கையை முடக்க முடியாது,
கால் போன போக்கிலே
மனம் போன போக்கில்
மனிதன் போக,
மனித குலம் அரையடி முன்னேறினால்
ஒரடி சரிந்து வீழ்கிறது
நிலையான கொள்கைகள்
நிலையான குண்ங்கள்
நிலையான நட்புகள் இல்லவே இல்லை
இடம்,மாறி, தடம் மாறி, தமொறி தலை குப்புற விழ வைக்கிறது
இந்த ஊசலாடும் அஞ்சல் மனம்தான்.
எதை எதையோ தேடி
எந்த குறிக்கோளும் இல்லாது,
ஒன்றை விட்டு விட்டு
ஒன்றையும் பிடிக்க முடியாது,
இறுதியில் மடிந்து போகிறது இந்த மனிதமும் அவர் மனமும்.

 087