துன்பம் துன்பம் துன்பம்

அடக்கமுடையவன் கர்வம் துன்பம்
அடக்குமுறை ஆட்சியொரு துன்பம்
அடைக்கலம்வந்தபொருள்அனுபவிப்பதுதுன்பம்
அலைபாயும் மனமொரு துன்பம்
அறிவுடையாரை இகழ்வதொரு துன்பம்
அன்னையை காக்காத மகனொரு துன்பம்
ஆத்திரகாரருடன் வாழ்வதொரு துன்பம்
ஆத்திரகாரர் வார்த்தையொரு துன்ப‌ம்
ஆயுதமிருந்தும் தோற்பதொரு துன்பம்
ஆராயமல் செய்த செயல்கள் துன்பம்
ஆராயாதவனின் துணிச்சலொரு துன்பம்
ஆழ்கடல் நீந்துவதொரு துன்பம்
இருட்டு வழி தனியே போவது துன்பம்
இளமையில் முதுமை தோற்றம் துன்பம்
உடன்படாத மனைவியுறவு துன்பம்
உதவதெரியாதவர் செல்வமொரு துன்பம்
உபயோகிக்காத பொருளது துனப்ம்
உருப்படாத நண்பர்களுறவு துன்பம்
உறவுகளில்லாத வீட்டின் வளம் துன்பம்
எதிரிகளின் செருகொரு துன்பம்
ஒட்டதெரியாதவன் குதிரை மீது துன்பம்
ஒழுகும் ஓட்டை வீடொரு துன்பம்
ஒழுக்கமில்லாதவர் உறவுமொரு துன்பம்
கடன் கொடுத்தவன் காணவும் துன்பம்
கடிவாளமில்லா குதிரைம்தொரு துன்பம்
கட்டுபாடில்லாதவர் விரதமொரு துன்பம்
கணவனைபிரிந்த மாதரொரு துன்பம்
க‌ண்ணமில்லாத முகத்தினழகு  துன்பம்
கர்வம் கொண்டவர் நட்பொரு துன்பம்
கல்லாதவனைருவன் கற்பிப்பது துன்பம்
கள்வர்கள் தொடர்பொரு துன்பம்  
கள்ளுண்டவன் அறிவுரையொடு துன்பம்
கற்றவருடைய சோம்பலொரு துன்பம்
கற்றவர் நடுவில் கல்லாதவன் துன்பம்
காக்கத்தெரியாதவனது ரகசியம் துன்பம்
காக்க்த்தெரியாதவனது குழந்தை துனபம்
காவலில்லாத கரும்பை காப்பது துன்பம்
குழந்தைகள் கொண்டநோயுபொடு துன்பம்
கோபங் கொண்ட யானையொரு தும்பம்
சத்தமாக பேசுபவன் உறவொரு துன்பம்
சுவரில்லா வீட்டை காப்பது துன்பம்
செல்வர்கள் வறுமை கொண்டது துன்பம்
சென்ற பின் புறங்கூறும் நிட்பொரு துன்பம்
திருப்தியில்லாதவர்க்கு கொடுத்தல் துன்பம்
திறமையில்லாதவன் தலைமை துன்பம்
துணிவில்லாதவரின் பேச்சு வீரம் துன்பம்
துணைபிரிந்து தனிவாழ்வு துன்பம்
நட்பில்லாதவர் பழக்கமொரு துன்பம்
நண்பர்களின் துன்பமொரு துன்பம்   
நல்லவர் வீழ் காண்பது துனபம்
நன்பரிகளில்லா வாழ்வொடு துன்பம்
நாகரிகமில்லாதவர் பழக்கமொரு துன்பம்
நீதிகளற்ற ஆட்சியொரு துன்பம்
பணிவில்லாதவர் வீடுமொடு துன்பம்
பண்பில்லாதவர் பழக்கமொரு துன்பம்
பாம்பு கொண்ட வீடுமொடூ துன்பம்
பாலை வழி தனிபயணம் துன்பம்
பிறன் மணைவியை பின்னோக்குபவன் துன்பம்
புரியாதவர் முன் திறமை காட்டுவது துன்பம்
புளித்த தேனும் , நெய்யுமொரு துன்பம்
பெரியவரது தகாத செயல் துன்பம்
பெரியோரது கடுமொழி துன்பம்
பேசத்தெரியாதவர் பேச்சொரு துன்பம்
பேதையின் அழகுமொரு  துன்பம்
மக்களின் நனமை நினைக்காத அரசன் துன்பம்
மணமில்லாத பெரிய மலருமொடு துன்பம்
மணமில்லாத மலருமொரு துன்பம்
மதுவுண்டவன் காணவும் துன்பம்
மரம்பிரிந்த மாங்கனியுன்பது துன்பம்
மழை பெய்யாத காலமொரு துன்பம்
மழை பெய்யாத மேகமொடு துன்பம்
முதுமையிலே நோயுண்டவர் துன்பம்
முள்ளின் வழிபயணம் துன்பம்
வறுமையாளர் வழங்குவது துன்பம்
வறுமையில் பொய் பகட்டொரு  துன்பம்
விதைத்த விதை விளையாதது துன்பம்
வீரர்களது சோம்பலொரு துன்பம்
வெள்ளத்தின் வீழ்ந்த விலங்கொரு துன்பம்

கவி ரவீந்தர நாத் தாகூர்

உன் தோளில் உன்னை நீயே சுமந்து திரிகின்றாய்
நின் வாசல் முன்னே நீயே இரந்து திரிகின்றாய்
சுமைகளை எண்ணி வீணே  சோர்ந்து கிடக்கின்றாய்
சுமக்கின்ற ஆண்டவன் சுமக்கட்டும் விட்டு விடுவாய்
     
கண்மூடி கொட்டைகளை உருட்டி காலத்தை கழிக்காதே
வாய்மூடி வார்த்தைகளை உருட்டி மந்திரத்தை ஜபிக்காதே

நிலம் இறங்கி உடல் வாட உழைத்திடுக‌

மலர் பற்றி கலீல் கிப்ரன்

                              
    மலர்

காதல் அழகிக்கும் பரிசானேன்
காதல் மனைவிக்கும் பரிசானேன்
தலைவருக்கும் மரியாதை செய்தேன்                     
அமரர்க்கும் மரியாதை செய்தேன்
சோகத்திற்கும் துணை நின்றேன்
போகத்திற்கும் துணைநின்றேன்
நிமிர்ந்து கண்டது ஒளியை மட்டுமே
குனிந்து காணாதது நிழலை மட்டுமே

மலரின் ஞானம் மனிதரிடம்   மலரட்டுமே

ரூசோ பற்றி சாமிநாத சர்மா


அறியாமைச் சேற்றிலே உழன்று கொண்டிருக்கிற ஜனங்களை
தூக்கிவிட எவன் கையைக் கொடுக்கிறானோ,
அவனையே அந்த அறியாமை இழுத்துக் கொண்டுவிடுகிறது
ஆனாலும் அவன் துணிந்து கையைக் கொடுக்கிறார்,ஏன்?
அவர்களோடு விழுந்து
அவர்களோடு உழன்று
அப்படியாவது அந்த அறியாமைக் குட்டையைக் கலக்கி விடுவோம்
கலக்கல் ஏற்பட்டால் தெளிவு உண்டாகுமல்லவா?
வலியக்கை கொடுக்கிறவன்
நிகழ்காலத்தில் இற‌ந்து விடுகிறான்..ஆனால்
எதிர்காலத்திலே வாழ்கிறான்..
நிகழ்காலம் அவனைத் தூற்றுகிற‌து
கல்லாலும் கழியாலும் அடிக்கிறது
சிறையிலே கொண்டு போய்த்தள்ளுகிறது
தூக்கு மேடையிலே ஏற்றிவிடுகிறது
நிகழ் காலமே நீ தீர்க்கதரிசிகளுக்கு துரோகி,பாபி, நன்றிகெட்டவன்
ஆனால் எதிர்காலம் அந்த மகான்களை அன்புடன் வரவேற்கிறது
இந்த எதிர்கால சாந்தியை எதிர்பார்த்துத்தான்
அந்த மகான்கள்
இந்த நிகழ்காலத் துன்பங்களைப்

    புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்…….