மனசிதைவு SCIZOPHRENIA Myths and Facts .

வாலிப வயதில் ஏற்படும் மனசிதைவு   
பாரம்பர்ய நோயா? 
இவர்கள் ஆபத்தானவர்களா?
மனசிதைவு ஏன் வருகிறது?
எவ்வளவு காலம் மருந்து எடுக்க வேண்டும்?
மனநல மருத்துவ சிகிச்சை தேவையா ?
மின் அதிர்வு சிகிச்சை எப்போது தேவை?
பாரம்பர்ய நோயா? மனசிதைவு?

001

 பாரம்பர்யமாக பலவிதமான நோய்கள் வருகின்றன மிகச் சிறந்த உதாரணம் சர்க்கரை நோய் இதற்குபலர்நினைப்பதுபோலசர்க்கரைகாரணமல்லசர்க்கரையானதுநமதுஇரத்தத்தில்
குறிப்பிட்டஅளவைஎடையைத்தாண்டாமல்இன்சுலின்என்றஇராசயணபொருள்கட்டுபடுத்திவைக்கிறது.
இதை சுரக்க வைக்கும் மரபு வழி அணுக்கூறுகள் ஏற்படுத்தும் குறைபாடுகளால் இன்சுலின் சுரப்பு தடுமாறி அவரது இரத்த சர்க்கரை கட்டுபாட்டை கெடுத்து குழப்பி விடுகிறது.
இந்த செய்திகள் யாவரும் அறிந்ததே.
இதே போல மூளையில் டோபமின் போன்ற இராசயணபொருள்களைகுழப்பிவிடும்சிலகுறைபட்ட மரபு வழி அணுக்கூறுகள் மனச்சிதைவு நோய் வருவதற்கு காரணங்கள் எனகண்டறியபட்டுள்ளது.
இதன் விளைவாக குழப்பமான கற்பனைகள் பல மனிதமூளையில் ஆழமாக அழிக்க முடியாமல் எழுதி வைக்கபடுகிறது.இதனால் பாதிக்கபட்ட மனமுடைய மனிதனின் 
வெளிநடவடிக்கைளும்திசைதிரும்பியஇயந்திரமனிதனைப்போலபைத்யகாரதன்மையுடையதாகநமக்குதோன்றுகின்றது.
உதாரணமாக புரியாத வயதில் நம் கண்ணால் கண்ட அல்லது காதால் கேட்ட ஒழுக்க நடத்தை தவறிய  பெண் நினைவு நம் ஆழ்மனதில் அழுத்தமாக பதிகிறது.ஆனால் மனச்சிதைவு நோய் உள்ள மனதில் இது பரவி  வளர்ந்து எதிர்காலத்தில் தன் மனைவியையும் அது போன்றவள் என்று சந்தேகப்படும் அவல நிலைக்கு கொண்டு போகிறது.
இது ஒரு உதாரணம் தான்.
ஆனால் இது போன்ற பல நூறு விதமான மனகுழப்பங்களும் கற்பனைகளும் பிரம்மைகளும் பாதிக்கப்பட்டவரது மனதை பாழ்படுத்தி மனச்சிதைவு என்ற நோயை கருவாக்கிஉருவாக்குகிறது.   
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு,
002
   இதற்கு மேல் தெளிவாக உங்களை குழப்ப எங்களுக்கு தெரியவில்லை, காரணம் இதை நுட்பமாக புரிந்து கொள்வது என்பது மருத்துவர்களுக்கே கடினம் .எனவே புரிந்து கொள்ள முடியாவிட்டால் பரவாயில்லை மனசிதைவு என்பது மரபுவழி நரம்பு மண்டல இராசயணப் பொருள்களின் சிக்கல்களால் மூளையின் சிந்தனை,செயல்,உணர்வுகள் பாதிக்கப்பட்டு மனநிலையும் நடத்தைகளும் மாறுபடுவது என்பதை ஏற்றுக் கொண்டாலே போதுமானது.
     ஏற்றுக்கொள்ளாமல் இன்றும் பெரும்பாலானோர் பல விதமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடப்பது வேதனைக்குரியது.எத்தனை விதமான மூட நம்பிக்கைகள் அதை பட்டியல்  இடுவது கடினம்.பேய்,பிசாசு,பில்லி,சூன்யம் முற்பிறவி ஞாபகம் என்று பரவலாக மக்கள் ஏமாற்றபடுகிறார்கள்.சாமி பேசுகிறது,ஆவிபேசுகிறது,பாவ தண்டனை,ரேடியோ,வயர்லெஸ் பதித்து விட்டார்கள்.என்று இன்னும் இன்றும் இது போன்ற பலநுறூ கண்மூடித்தனமான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. படிக்காத பாமர மக்கள் நம்பினால் மன்னித்து விடலாம். ஆனால் படித்த பகுத்தறிவுள்ளவர்களும் விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் மறுப்பது வருத்தம் தான்.
    மனித குலத்தின் எல்லா திசைகளின் இலக்கியங்களிலும் வரலாற்று பதிவுகளிலும் மனநல மாறுபாடுகள் சிறப்பாக தெளிவாக வர்ணனை செய்யபட்டுள்ளது.ஆனால் பெரும்பாலான தேசங்களில் இவர்கள் புறக்கணிக்கப்படும் ஒதுக்கப்படும் அல்லது தண்டிக்கப்பட்டும் இருந்துள்ளனர்.மேலும் மூட நம்பிக்கைகளின் அடிப்படையிலான சித்ரவதைகளையும் கொடூரங்களையும் காலங்காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.
  இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னும் மனசிதைவு நோய் பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.படித்தவர்கள் மத்தியில் கூட இதைப்பற்றிய தெளிவான அறிவு இன்னும் உருவாகவில்லை.    
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மனசிதைவு-
003
   மனிதன் உணர்வுகள் உணர்ச்சிகள்,சிந்தனைகள் செயல்கள், நடத்தை,நடவடிக்கைகள், குணாதிசயம் போன்ற அனைத்தும் பாதிக்கபடுகிறது.அவரது தனிப்பட்ட இயல்பான சுபாவத்திலும் பெரும்மாற்றங்கள் ஏற்படுகிறது.அதை விட அதிமுக்யமாக உலகின் பெரும்பான்மையான மனிதரது மன இயல்பிற்கு முற்றிலும் புறம்பான மாறுபட்ட வினோதமான சுய அனுபங்களும் அதன் வெளிப்பாடுகளும், நடவடிக்கைகளும் உருவாகிறது  இப்படிபட்ட மனிதர்களை ஒரு தொகுப்பாக மனசிதைவு என்று பெயரிடப்பட்டு சிகிச்சை அளிக்கபடுகிறது.கடந்த 50 வருடங்களில் நவீன மனநல மருத்துவம் மனசிதைவு நோயை ஒரு சவாலாக எடுத்து கொண்டு அதை புரிந்து கொள்ளவும் காரணங்களை அறிந்து கொள்ளவும் சிகிச்சைகளால் முழுமையாக குணப்படுத்தவும் பெரிய முயற்சி எடுத்து வருகிறது.
    மனம் என்பதை ஒரு இரதம்,தேர் என்று கற்பனை செய்து பார்த்தால் அதை மூன்று குதிரைகள் இழுத்துச் செல்கின்றன அவை” உணர்வுகள், சிந்தனைகள், செயல்கள்” என்று தொகுத்து கூறலாம்.
    உணர்வுகள் இரண்டு வகையானவை ஒன்று இன்பமும், மகிழ்வும் விருப்பமும் தரக்கூடிய உற்சாகம்,சந்தோசம்,சிரிப்பு,மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் அதற்கு நேர் மாறாக வலி வேதனை தவிர்ப்பு தரக்கூடிய எதிர்மறையான துயரம் சோகம் விரக்தி கோபம் அச்சம் போன்ற பக்குவமில்லாத உணர்ச்சிகள் மற்றொரு வகை. சிந்தனைகள் என்ணங்கள் என்பது எல்லாம் கடந்த கால அனுபவங்களின் பதிவுகள்.அந்த பதிவுகளின் நினைவுகளின் துணைகொண்டு நிகழ்கால நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்யும் அலசல்கள்.அதன் முடிவாக தெளிவான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை எதிர்கால செயல்களுக்கு கட்டளைகளாக வழிகாட்டிகளாக அமைகிறது.                      
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மனசிதைவு,
004
       எனவே உணர்ச்சிகள் என்ற கையே சிந்தனை எனும் சாட்டையால் செயல் எனும் குதிரையை ஓட்டுகின்றன. இதுவே மனித மனமெனும் இரத்தின பயணம்.ஆனால் இவை ஒன்றுக்கொன்று தொடர்புமற்று,குளருபடிகளும் ஏற்பட்டு ஒருங்கினைந்த ஒத்துழைப்பு சிதைந்து போகிறது.சிலருக்கு இதையே மனசிதைவு என்று பெயரிட்டனர்.மன நல மருத்துவ நிபுணர்கள்.
      இப்படி முரண்பட்டு கட்டவிழ்ந்து தாறுமாறாக ஒடும் மனம் செய்யும் மாயங்கள் பல பல விதமானவை முதலில் அவர்களது சிந்தனைகள் சிதைபட்டு விடுகின்றன. கற்பனைகள் வினோதமாக வளர்கின்றன.பிரம்மைகள் அவர்களது உணர்ச்சிகளை அலைக்கழிக்கின்றன. முடிவில் செயல்கள் முரண்படுகின்றன.அவரது சுபாவம் நடத்தைகள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாற்றங்களடைகின்றன. பல நேரங்களில் வினோதமாக வேதனையாக இருக்கின்றன. சில நேரங்களில் ஆபத்தாக அழிவாக முடிகின்றன.
   ஒரு மனிதனின் வாழ்வை இந்த நோய் முழுமையாக பாதிக்கும்.அமைதியாக இருந்தவரை அறிவினராக மாற்றும் சுறுசுறுப்பாக இருந்தவரை சோம்பராக மாற்றும் சுத்தமாக வாழ்ந்தவரை அசுத்தமாக அழுக்காக மாற்றும் தீய பழக்கங்களும் உருவாகும்.வன்முறை,வேலையின்மை, உபயோகமின்மை, தற்கொலை,கொலை,திருமணமின்மை பிரிவு,தனிமைபடுத்தபடுதல் போன்ற பல விதமான தீமைகளை உற்பத்தி செய்யும்.
   சில நேரங்களில் மன நல காப்பகங்களில் பாதுகாப்பாக பராமரிக்கபடும் நிலைகள் ஏற்படுகின்றன.சிலருக்கு தெருவில் சுற்றி திரியும் அவலமான மன நோயாளிகளின் நிலைமை ஏற்படுகிறது.இன்னும் பல விதமான எண்ணிலடங்காத எதிர்பாராத அவலமான விளைவுகள் மனச்சிதைவினால் ஏற்படுகிறது.ஆனால் ஆரம்ப காலங்களில் உணர்ந்து கொள்வதும்,மற்றவர் புரிந்து கொள்வதும் கடினம்.     
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXமனசிதைவு,
005
     பல நூறு ஆண்டுகளாக மன நோயைப் பற்றிய செய்திப் பதிவுகள் இருந்தாலும்,அறிவியல் ஆதாரங்களும்,மருத்துவ ரீதியாகவும்,தெளிவாக விளக்கப்படாமல் இருந்து  வந்தது.
     ஆனால் கடந்த இரு நுறூ ஆண்டுகளாக மன நடத்தையில் ஏற்படும் மாறுபாடுகளை ஒரு நோயாக உடல் நல மூளை நரம்பு மண்டல குறைபாடுகளாக ஏற்று கொள்ளபட்டுள்ளது. முறையான ஆராய்ச்சிகள் பலவற்றின் விளைவாக தெளிவான சிகிச்சை முறைகள் உருவாகின.அது ஒரு நீண்ட துணிவான புரட்சிகரமான வரலாறாகும்.
  ஆரம்பத்தில் நோய் என்ற கருத்துகளுக்கு பரவலான எதிர் வாதமும் போராட்டமும் இருந்தது.
ஒரு பக்கம் ஆன்மீக வாதிகள் பழமையாளர்கள் மூட நம்பிக்கையாளர்கள் எதிர்த்தனர். பின் அறிஞர்கள் சமத்துவ வாதிகள் சட்டம் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்கள் மனசிதைவு நோயை சமூக விளைவு என்றனர். பேதலித்த உலகின் நியாயமான செயல் என பிடிவாதம் செய்தனர்.
     ஆனால் காலப்போக்கில் உலகம் முழுவதும் நடத்தை குளறுபடி மன நோய் என்று ஏற்றுகொள்ளும் பக்குவமும் வந்துள்ளது.அதற்கான சிகிச்சைகளையும் மருந்துகளையும் பற்றிய விழிப்புணர்வும் வளர்ந்து வருகிறது.
     1919ல் மன நோயில் இளம் வயதிலேயே தொடங்கி காலம் முழுதும் வளரும் நோய் தெளிவாக ஒரு வகை பட்டது.பிறகு அது உடைந்து போன மனம் என்பதை குறிக்கும். அர்த்தமுள்ள ”சிசோபிரண்யா” என உலகம் முழுவதும் ,இது தமிழில் மனசிதைவு என்றும் மொழி பெயர்க்கப்பட்டு பெயரிடப்பட்டது.இதைப்பற்றிய விழிப்புணர்வும் முறையான தெளிவான அறிவியல் ரீதியான சிகிச்சை முறைகளும் வளர்ந்து வருகிறது.       
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
வாலிப வயதில் ஏற்படும் மனசிதைவு       
006
மனசிதைவு நோய் என்பது உலகின் எல்லா தேசங்களிலும் இனங்களிடையேயும் கண்டறியபட்டு உள்ளது. பெரும்பாலும் இந்த நோயின் துவக்கம் 15வயது முதல் 25 வயது வரைகாணப்படுகிறது.ஆண்,பெண் பாகுபாடின்றி தாக்குகிறது.
        வாலிப வயதில் தொடங்குவதால் மன பேதலிப்பின் அறிகுறிகள் அதிகமாக பாலுணர்வு,உடலுணர்வு,காதல்,ச்ந்தேகம் போன்ற செய்திகளையும், கற்பனைகளையும், பிரம்மைகளையும் வெளிப்படுத்துகிறது.அதனால் தான் திருமண ஏக்கத்தினால் இந்த நோய் வருகிறது. என்ற மூட நம்பிக்கை பரவி விட்டது.
       திருமணம் செய்தால் சரியாகி விடும் என்ற தவறான நம்பிக்கையினால்திருமண தோல்விகளும் முறிவுகளும் ஏற்படுகிறது. நோய் முற்றிவிட காரணமாகவும் அமைந்து விடுகிறது.வாலிப பெண்களுக்கு நோய் தாக்கும் போது பெற்றோர் எல்லா அதிர்ச்சிக்கும் அவமான உணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள். வெளியில் சொல்ல கூட அச்சமும் கூச்சமும் ஏற்பட்டு கூனிக் குறுகுகிறார்கள். வாலிப பையன்களுக்கு நோயின் அறிகுறிகள் ஏற்பட்டால் பெற்றோர் ஆத்திரமும் சந்தேகமும் உருவாகி நோயால் பாதிக்கபட்டவர்களை வார்த்தைகளால்,செயல்களால் அவமானபடுத்துகிறார்கள், காயபடுத்துகிறார்கள், ஒதுக்குகிறார்கள்.
        மன நல செயல்பாடு, நடத்தைகளை உடல் நலபாதிப்புகள் என தெளிவாக புரிந்துகொள்ளாமல் போகிறார்கள்.அதிர்ச்சி,அவமானம், ஆத்திரம் போன்ற குழப்பங்களால் குடும்பங்களுக்குள் ஒருவரைஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டும் புதிது,புதிதாக காரணங்களை கற்பித்துக் கொண்டும் காலத்தை விரயம்செய்து சிகிச்சையை தாமதமாக்குகிறார்கள். 
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மனசிதைவு,
007                                                                                                                                  
     பாதிக்கபட்டவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே ஒரு மாபெரும் பொது நல சுகாதார பிரச்சனையாக சவாலாக இந்த மன சிதைவு நோய் அமைந்துள்ளது.
     கிட்டதட்ட ஏறக்குறைய ஒரு சதவீத மக்கள் தொகையினர் மனசிதைவால் பாதிக்கபடுகிறார்கள் என்று கணக்கெடுக்கபட்டுள்ளது.அப்படியானால் நமது நாட்டிலே ஒரு கோடிப் பேருக்கு மக்களுக்கு மேல் இந்த மனசிதைவு நோயால் துயரடைகிறார்கள் என்பது மட்டுமல்ல இது தொடர் நோய் என்பதும் வேதனையான செய்தியாகும்.
      இந்த நோய் மன நலத்தையும் அவர் மனவளத்தையும் பாதிப்பதால் இவர்களை கட்டுபடுத்த பராமரிக்க குணபடுத்த சமாளிக்க என்று பல்வேறு சவால்கள் உருவாகின்றன.இதனால் அவரது குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் பொருளாதார சுகாதார மற்றும் பல்வேறு விதமான தேவைகளும் உதவிகளும் எல்லோருக்கும் ஒரு சவால் என்பதில் சந்தேகமில்லை.
     அதிகமான பாதிப்புக்குள்ளானவர் நகரத்திலும் வறுமையிலும் உள்ளவர்கள்.இதை வறுமையினால் மனசிதைவு வந்தது என்பதை  விட மன நோயினால் மனவளம் குறைந்தது வேலையின்மையும் பொருளாதார சீரழிவும் நோயாளியையும் அவரைச் சார்ந்தவரையும் வறுமைக்கு இழுத்து வந்து விடுகிறது என்பதுவே உண்மை நிலவரம்.
     மனித நேய அடிப்படையில் புரட்சியால் காப்பகம் என்ற சிறையிலிருந்து பலர் மீட்கபட்டார்கள்.ஆனால் குடும்பங்களும் மன நல மருத்துவமனைகளும் இவர்களை பராமரிக்கும் பெரிய சவாலுக்கு தயாராக இருக்கவில்லை. எனவே இவர்கள் பல நேரங்களில் ஆபத்தான பாதுகாப்பில்லாத கொட்டடிகளில் விடப்பட நேர்ந்துள்ளது மிகப் பெரிய அவல நிலையாகும்.            
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மனசிதைவு
008
அடிக்கடி கேக்கபடும் கேள்விகள்?
   1)   மனசிதைவு என்றால் என்ன ?
   2)   இதன் அறிகுறிகள் என்ன ?
   3)   ஆபத்தான அறிகுறிகள் என்ன ?
   4)   இவர்கள் ஆபத்தானவர்களா ?
   5)   யார் யார் பாதிக்கபடுகிறார்கள் ?
   6)   இளம் வயதில் மனசிதைவு வருமா ?
   7)   ஏன் நிறைய வேறுபாடுகள் உள்ளது ?
   8)   மன சிதைவு ஏன் வருகிறது ?
   9)   குடும்ப சூழல்களால் பாதிப்பு ஏற்படுமா ?
   10)  பாரம்பரியமாக வர வாய்ப்புள்ளதா ?
   11)  மனசிதைவினால் மூளை பாதிக்க்படுமா?
   12)  எப்படி மூட நம்பிக்கைகள் ஏற்பட்டது ?
   13)  மக்கள் ஏன் மருத்துவத்தை நாடுவதில்லை ?
   14)  மனநல மருத்துவ சிகிச்சை தேவையா ?
   15)  மருந்துகளால் எப்படி பலன் கிடைகிறது ?
   16)  எவ்வளவு காலம் மருந்து எடுக்க வேண்டும் ?
   17)  மின் அதிர்வு சிகிச்சை எப்போது தேவை ?
   18)  மருத்துவமில்லாது வேறு வழிகள் உண்டா?
   19)  மன சிதைவினால் அவரது குடும்பம் பாதிக்கபடுமா?
   20)  தற்கொலையை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
   21)  மனசிதைவினால் என்ன தீய விளைவுகள் ஏற்படும் ?
   22)  தீய விளைவுகளை எப்படி தடுப்பது ?
   23)  பரிபூரணமாக மனசிதைவை குணப்படுத்த முடியுமா?
   24)  மீண்டும் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா ?
   25)  வேறு என்ன  என்ன சிறப்பான உதவிகள் தேவை ?
   26)  உறவினர்கள் இவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
   27)  யார் யார் மனசிதைவிற்கு உதவி செய்வார்கள்?
   28)  சமூகத்தின் கடமைகள் என்ன?
   29)  சட்டம் அரசு இவர்களது பங்கு என்ன ?
   30)  மனநல காப்பகங்களால் நன்மையா தீமையா ? 
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மனசிதைவு 009
 1) மனசிதைவு என்றால் என்ன ?
                 இது ஒரு வகையான தீவிர மனநோய் சாதி, மத, இன, மொழி,தேச வேறுபாடின்றி உலகம் முழுவதும் பரவலாக காணப்படும். ஒரு வித மனநல குறைபாடு வரலாறு தெரிந்த காலம் தொடங்கிஅறியபட்டு வந்துள்ளது.
       திறமையான மனநலம்,சிறப்பான குணநலம் என்பது அடிப்படையாக சிந்தனைகள், செயல்கள்,உணர்ச்சிகள்,நடத்தைகள்,என்ற முக்கியமான திறன்களை ஆதாரமாக கொண்டது.
       மனசிதைவு என்ற குறைபாடு இவை அனைத்திலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.அவரது தனிப்பட்ட மகிழ்ச்சி,மனநலம், கல்வி, வேலை,நட்பு போன்ற திறமைகள்,தொழில்,நட்புறவு,குடும்ப சமூகஉறவுகள் போன்ற அனைத்திலும் அதிக தாக்கங்களை உண்டாக்குகிறது.அவரை மட்டுமல்லாது அவரது உறவினர்,நண்பர்,குடும்பம்,தொழில்,என்று அவரை சுற்றியுள்ளவரின்
நலத்தையும்,முன்னேற்றத்தையும் பாதிக்கவும், தடை செய்யவும் காரணமாக அமைந்துவிடுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மூளை நரம்பியல் பாதிப்பில் புற உலக மனிதர்களை பகுத்துஅறியும் உணர்வு குறைபட்டு, தவறான குழப்பமான எண்ணங்கள் ஏற்பட்டு,அதன் விளைவாக வித்தியாசமானவினோதமான செயல்களும்,நடத்தைகளும் வெளிப்படுத்துகிறது என்று சொல்லலாம்.  
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
          மனசிதைவு 010  
2)   இதன் அறிகுறிகள் என்ன?
       பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கு ஒரு தனிப்பட்ட விதமான அறிகுறிகள் காணப்படும்.
நூற்றுக்கணக்கான வகை மாறுபாடுகள் தென்பட்டாலும் சில பரவலான,அடிப்படையான அறிகுறிகள் மனசிதைவு ஏற்பட்டதினை கண்டுபிடிக்க ஆதாரமாக உள்ளது.மிகமுக்கியமானவை ஐம்புலன்களில் ஏற்படும் பிரமைகள் மற்றும் ஆழ்மனதில் அழிக்க முடியாமல் ஏற்படும் பிரமைகள் மற்றும் ஆழ்மனதில் அழிக்க முடியாமல் ஏற்படும் கற்பபனை கருத்துகள்.
              இந்த கற்பனைகள் மற்றும் பிரமைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை,ஒன்று மற்றது உருவாக காரணமாக அமையும். இதன் விளைவாக பாதிக்கப்பட்டவரது சிந்தனை,செயல்கள்,உணர்வுகள், உணர்ச்சிகள்,நடத்தைகள்,நட்புகள்,உறவுகள் போன்ற பலவிதத்திலும் புரிந்து கொள்ள முடியாத வினோதமான வேதனையான மாற்றங்கள் ஏற்படும் இவற்றை இரண்டு தொகுப்பாக பிரிக்கலாம்.
           சிலருக்கு வெளிப்படையாக,ஆக்ரோசமாக,தீவிர நடத்தை மாற்றமாக கற்பனை கருத்துகளும்,மன பிரமைகளும் வெளிபடுத்தும்.உதாரணமாக,காதில் யாரோ பேசுகிறார்கள்,திட்டுகிறார்கள்,கடவுள் பேசுகிறார்,எதிரிகள் மிரட்டுகிறார்கள்,ஊரார் கேவலமாக பேசுகிறார்கள் என்ற மனபிரமைகள் பரவலாக காணப்படுகிறது.அடுத்து ஊரார் சதி செய்கிறார்கள்,கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்,கணவன்,மனைவி, நடத்தையால் கள்ள தொடர்பால் துரோகம் செய்கிறார்கள் என்ற இது போன்ற பல கற்பனை கருத்துகள் அடிக்கடி காணப்படுகிறது.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx                   மனசிதைவு 011
           3-ஆபத்தான அறிகுறிகள் என்ன?
          மனசிதைவு நோயின் மிக ஆபத்தான அறிகுறிகள் கட்டுக்கடங்காத தீவிர ஆக்ரோசம்,வன்முறை,இதன் விளைவாக பொருட்களுக்கு,மற்றவர்க்கு அவரது உடலுக்கு,உயிருக்கு சேதங்கள்,ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மிக முக்கியமான சந்தேகம்,குறிப்பாக தன்னை யாரோ கொள்ள வருகிறார்கள் என்றதீவிர அச்சம் திரும்பி தாக்க வேண்டுமென்ற பாதுகாப்பு உணர்வு வன்முறையாக மாறலாம்.அப்போது தன்னை சுற்றியுள்ள பொருட்களைடைப்பதும்,மனிதர்களைஎதிரியென்றும்கற்பனையில்தாக்கவும்,அழிக்கவும்,வாய்ப்புஉள்ளது,சாதாரணமாக மனைவி கற்பொழுக்க நடத்தையின் மீது உண்டாகும் கற்பனை சந்தேகங்கள்,பிரமைகள் தீவிரமாகும் போது அவளை தாக்கவும் அழிக்கவும் வாய்ப்புள்ளது.
              ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் அதிலும் குறிப்பாகபெண்களிடம் மற்றவற்றை,மற்றவரை தாக்குவதை விட தன் மீதே கோபம் திரும்புவதே அதிகமாக காணப்படுகிறது.அச்சம்,பயம்,சந்தேகம்,இவை மனசோர்வு,சுய பச்சாதாபம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
          இவை தானே சூடு போட்டு கொள்வது, கீறி கொள்வது,நெருப்பு வைத்து கொள்வது,இரயில்,தூக்கு போன்ற வன்முறையான தற்கொலைகள் போன்றவை ஆபத்தான தீய விளைவுகளும்,அறிகுறிகளுமாகும்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx      
மனசிதைவு 
012

 4) இவர்கள் ஆபத்தானவர்களா?
             நிச்சயமாக இல்லை. இவர்களை பார்த்து பயப்பட்டு வன்முறையானவர்கள்,ஆபத்தனவர்வர்கள் என்று தவறான ஆதாரமற்ற கற்பனை வதந்திகள்,கதைகள் பரப்பப்படுகின்றன. உண்மையில் இவர்களுக்கு எதிராகத்தான் தீமைகள் சமூகத்தால் குறிப்பாக மருத்துவமற்ற மனநல காப்பகங்களில் நடக்கிறது.அவமானபடுத்துவது,அடிப்பது,கட்டி போடபடுவது,துன்புறுத்துவது போன்ற மனித நேயமற்ற செயல்கள் இவர்கள் மீது சுமத்தபடுகிறது.  மிக அபூர்வமாக சில சந்தேக நோயாளிகள் நோயின் உச்சகட்டத்தில் ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடலாம். அதுவும் அவர்கள் அவமானபடுத்தபடும் போதோ,அடக்கப்படும் போதோ தான் தற்காலிகமாக ஏற்படுகிறது.
           மற்றவரை காயப்படுத்தவோ,கொலை செய்வதோ மிக மிக அபூர்வமானது. சாதாரண
மனிதர்களிடம் “நல்ல”நிலையில் உள்ளவர்களோடு ஒப்பிடலாம். உண்மையில் மிக மிக குறைவு.
      ஆனால் இவர்களுடைய உணர்ச்சிகளையும்,தன்மானத்தையும்,பாதுகாப்பு உணர்வுகளையும்
மனிதத்துவ மரியாதைகளையும்,பாதுகாக்க வேண்டியது மற்றவரது பொறுப்பு.               அவர்களை சீண்டி பார்த்து,ஆத்திர உணர்வுகளை தூண்டி பார்த்து,ஆத்திர உணர்வுகளை தூண்டி விடுவது அவருக்கும்,இவருக்கும்,எவருக்கும் தீய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

5-யார் யார் பதிக்கபடுகிறார்கள்? 
013
    குழந்தை பருவத்தினருக்கும் வர வாய்ப்புள்ளது ஆனால் மிக மிக அபூர்வமானது.
சாதாரணமாக நோயின் முதல் தொடக்கம் இளம் வாலிப வயதில் 15முதல்25வயது வரையுள்ள
கால கட்டத்தில் காணப்படுகிற்து.பெண்களுக்கு 20வயதுமுதல்30வயது வரை காணப்படுகிறது.
         சந்தேக வகை மனசிதைவு அதிகமாக 35வயதுமுதல்45வயது வரையுள்ள காலகட்டதில்
 பரவலாக தீவிரமாக பாதிக்கிறது. முதன் முதல் துவக்கம் வயோதிககாலத்தில் அபூர்வமாகவே காணப்படுகிறது.நடு வயது பாதிப்பின் தொடர்ச்சி தான் அதிகம் உள்ளது.சில குடும்பங்களில் அதிகமாக இந்த குறைபாடு தொடர்ந்து வருகிறது.எனவே பாரம்பரிய காரணங்கள் மரபணு குறைபாடுகள் இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுஆராய்ச்சிகளின் சில உண்மைகளும் நிரூபிக்கபட்டு வருகிறது.யாரேனும் ஒரு பெற்றொருக்கு பாதிப்புஇருந்தால் குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது.வரவேண்டும் வரும் என்று பயப்பட வேண்டியதில்லை.
10ல் ஒருவருக்கு பெற்றோருக்கு உள்ள குறை வரலாம்.சமூகத்தில் 100ல் ஒருவருக்கு இந்த மனசிதைவுபாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
6.இளம் வயதில் மனசிதைவு வருமா? 014
     18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் வரலாம்.ஆனால் மிக மிக அபூர்வமாகவே உள்ளது.
மற்ற வகை அறிகுறிகள் காண்லாம். பிரமைகளும் கற்பனைகளும் தெளிவில்லாத குழந்தைதனமாக இருக்கலாம்.
           பாரம்பரியத்தில் மனசிதைவு தாக்கம் இருந்தால் 10வயதில் வர வாய்ப்புள்ளது.
பிற்காலத்தில்,வாலிபத்தில்,மனசிதைவு வந்தவர்களின் குழந்தை பருவ வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது ,அவர்களது நடவடிக்கைகள் அந்தந்த வயது குழந்தைகளின் குணத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசமாகவும்,வேறுபாட்டாகவும் இருந்தது தெரிய வருகிறது.
           அதீத மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்,ஆடிசம்(சுய கற்பனை உலக வாழ்க்கை)
போன்ற சில நோயுள்ள குழந்தைகள்,மனசிதைவு நோய் போல தோற்றமளித்தாலும் அவை
முற்றிலும் வேறுபட்டவை.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
015
7) ஏன் நிறைய வேறுபாடுகள் உள்ளது ?
        மன சிதைவு குறைபாடு என்பது சில முக்கியமான மனநல பாதிப்பின் அறிகுறிகளின் தொகுப்பை வைத்து ஒரு பொது நோயாக கண்டறியப்படுகிறது. நாம் புறதோற்றத்தை வைத்தே தற்போது பார்ப்பதால் பலவித மூல காரணங்களுடைய பலவித வேறுபாடான தனிப்பட்ட குறைகளின் பொது வெளிப்பாடே இது என நம்பப்படுகிறது.
        எனவே நோயின் வெளிபடும் வயதும், வகைகளும்,அறிகுறிகளும்,போக்கும், தீர்மானமாக தெளிவாக அனுமானம் செய்ய முடியாமல்,பலநூறு விதமாக இருக்கிறது.
        இதுவே பலவித ஆராய்ச்சிகளின் முடிவுகளும்,பல்வேறு வகையான குழப்பங்களை அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது,எது எப்படி இருந்தாலும் கற்பனைகள், பிரம்மைகள்,நடத்தை மாறுதல்கள் ஒரு பொது அம்சமாக தொகுக்கபடுவது நடைமுறையில் மருத்துவ சிகிச்சைக்கு மிகமிக உபயோகமான ஒன்றாக உள்ளது.குறிப்பாக டோபமின் மற்றும் சொரோட்டனின் போன்ற நரம்பியல் இராசயன பொருட்களின்
சமன்பாட்டை நடைமுறை படுத்தும் மருந்துகள் கடந்த 50 ஆண்டுகளில் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவையாவும் மிக சிறப்பான முறையில் பலவகை மனசிதைவு குறைபாடுகளுக்கும் பலவித போக்குள்ள மனசிதைவு நோய்பாடுகளுக்கும் பலவித போக்குள்ள மனசிதைவு நோய்களுக்கும் பொதுவாக நல்ல பலன்களை கொடுத்து,தீய விளைவுகளை தடுத்து, புதிய நம்பிக்கைகளை கொண்டு வநதுள்ளது.   
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு 
016
  8) மனசிதைவு ஏன் வருகிறது?
    
         மனசிதைவு என்பதை ஒரு தனிப்பட்ட நோய் என்று சொல்வதை விட சர்க்கரை நோய் போல பலவித மூல காரணங்களால் ஏற்பட்ட பலவித விளைவுகள் இறுதியில் ஒரே தோற்றத்தில் வெளிப்படுகிறது.என்றே மனநல ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.பாரம்பர்யமாக வருவது ஒரளவிற்கு பல ஆராய்வுகளில் நிருபிக்கப்பட்டிருக்கிறது.பொது மக்கள் தொகையால் 100 ல் ஒருவர் என்றால் மன சிதைவு நோயாளியின் உறவினர்களில் 100 ல் பத்து பேருக்கு இந்த குறைபாடு காணப்படுவதே ஒரு முக்கிய ஆதாரமாகும்.
சர்க்கரை நோயில் இன்சுலின் என்ற இராசயான பொருள் குறைபாடும்,அதன் விளைவாக சர்க்கரை அளவு கூடுதலாகி வேதியியல் விசப் பொருட்கள் உடலின் பல பாகங்களை பாதிக்கிறது.
        இதே போல் டோபமின் என்ற நரம்பியல் இராசயன பொருள் மனசிதைவின் அடிப்படை காரணமாக நம்பபடுகிறது.பாரம்பர்ய மரபனுக்களின் குறைபாடு வழியாக இந்த டோபமின் விகித சமன்பாடு ஏற்ற இரக்கங்களால் மூளையின் தகவல் தொடர்பு சாதனங்கள் பழுதுபடுகிறது.
       கணிணியின் வைரஸ் பரவுவது போல மூளையின் மனம் என்ற பகுத்தறியும் கணிணியின்
கட்டமைப்பையும்,இயக்கத்தையும் குளறுபடி செய்கிறது.மரபணு பலகீனம்,டோபமின் மிகுதி, போன்றவை கர்ப்ப கால குழந்தை மூளை வளரும் போது சில தாக்கங்கள் குறிப்பாக வைரஸ் போன்ற பருவ கால கிருமி வியாதிகளால் மனசிதைவு நோய்க்கான வரைபடங்களை தோற்றுவிக்கிறது என ஆராயப்படுகிறது.
     வளர் பருவ குழந்தை வாழ்வில் எதிர்மறையான சம்பவங்கள்,இளம் பிராய வாழ்க்கை நெருக்கடிகள் சோதனைகள் இந்த நோயின் கதவுகளை திறந்துவிட வாய்ப்பளிக்கிறது.
     கஞ்சா,மது ஆம்பிடமின்,கொகய்ன்,பிசிடா போன்ற மூளையை தூண்டும் கெட்ட பழக்கங்கள் சில இந்தமனசிதைவிற்கு தூபம் போடுகின்றன.
     எனவே எந்த ஒரு தனிப்பட்ட,குறிப்பிட்ட காரணத்தையும்,கண்டுபிடிக்க இயலாமல் இன்னும் ஒரு புரியாத புதிராக இருந்தாலும் பல நூல்களின் முனைகள், நம்பிக்கையூட்டும் கண்டுபிடிப்புகள்       
கிடைத்துள்ளன.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு 019
9.குடும்ப சூழல்களால் பாதிப்பு ஏற்படுமா?
 
         மனசிதைவு நோய் உருவாக நிச்சயம் புற சூழல்களோ,குடும்ப சூழல்களோ,வாழ்க்கை நிகழ்வுகளோ காரணமில்லை என்பது உறுதிபடுத்துள்ளது.ஆனாலும் பல சமயங்களில் இவை மனசிதைவு குறைபாடு உள்ளவர்களின் அறிகுறிகளை வெளி கொண்டு வரும் நெருக்கடிகளாக அமையலாம்.
         சில நேரங்களில் இந்த தீய சூழல்கள் மனசிதைவை அதிகபடுத்தவும்,தொடர்ந்து நீடிக்கவும் குணமடைவதை தடைசெய்யும் காரணங்களாகவும் இருக்கிறது என்பது தெளிவாக உள்ளது.
        இன்னும் பலருக்கு குணமடைந்த மனசிதைவு உள்ளவர்களுக்கு மீண்டும் நோயின் பாதிப்புக்களும் அறிகுறிகளும் ஏற்பட காரணமாகிறது. இந்த சூழல்கள்,இந்த குடும்ப,சமூக,பொருளாதார சூழல்கள் வாழ்க்கை சம்பவங்களில் முக்கியமான சில தாய்,தந்தை,குழந்தை,கணவன்,மனைவி,மரணம்,இழப்பு,விவாகரத்து பிரிந்து வாழ்தல் பெற்றோர் அல்லது கணவன் மனைவி,தொழில் நுட்பங்கள்,இழப்புகள்,கல்வி தேர்வு,தோல்வி,சண்டைகள்,வழக்குகள்,பாலியல் பலாத்காரம், நகரத்திற்கு,வெளி நாட்டிற்கு,இடமாற்றம் தீ, பூகம்பம்,வெள்ளம்,பஞ்சம்,போர் போன்ற பேரழிவுகள்,விபத்து,தீவிர காயம்,திருமணம்,கர்ப்பம்.
        வன்முறை, உடல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டது, மனநெருக்கடி, துயரம், சோகம், சோர்வு, மனபதட்டம் ,போன்ற விளைவுகளையும்,உறக்கமின்மை,சிந்தனை குழப்பங்கள்,போன்ற குறைகளையும் ஏற்படுத்தும் இதன் விளைவாக மனசிதைவு அதிகமாகலாம்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு 
020
10) பாரம்பர்யமாக வர வாய்ப்புள்ளதா?
          உறுதியாக பாரம்பர்யமாக வரும் என்று அச்சப்பட தேவையில்லை.வர வாய்ப்புள்ளது என்று உணர வேண்டும். மனசிதைவு நோயின் பாரம்பர்ய வேர்களை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன, முடிவுகள் இதை நிரூபிக்கும் ஆதாரங்களாக உள்ளன. மக்கள் தொகையில் நோயின் கணக்கெடுப்பின் பொதுவாக 100 ல் ஒருவருக்கு காணப்படுகிறது.உறவினரிடையே 100ல்பத்து பேருக்கு அதிகமாக உள்ளது.
          இரண்டாவதாக இரட்டையரின் வாழ்க்கையை கவனித்தால் ஒரே கருவின் ஒரே உயிரனுவில் வந்த இரட்டையருக்கு இருவரிடமும் அதிகமாக மனசிதைவு தென்பட்டது. ஒருவருக்கு இல்லையென்றாலே மற்றவருக்கும் வர வாய்ப்பில்லாதது உறுதியானது. ஆனால் இரு உயிரனுவில் ஒரே கர்ப்பத்தில் பிறந்த இரட்டையரில் ஒருவர் மனசிதைவு ஏற்பட்டாலும் மற்றவர்க்கு வந்ததில்லை. ஒரே உயிரனுவில் பிறந்த இரட்டையரின் ஒருவருக்கு மனசிதைவு கண்டுபிடிக்கப்பட்டால் மற்றவர் அவரையோ,குடும்பத்தினரையோ சாராமல் தொடர்பில்லாமல் எங்கோ ஒருவரிடம் தத்தெடுத்து வளர்க்கப்பட்டாலும்,மற்றவர்க்கும் மனசிதைவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.எனவே சுற்று சூழ்நிலையின் தாக்கத்தை விட பாரம்பர்ய காரணங்களின்
முக்கியத்துவம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தபட்டது.
          இறுதியாக பாதிக்கப்பட்டவரின் தலைமுறை மற்றும் முன்தலை முறையினரின் வாழ்க்கை
வரலாறுகளை கவனித்த போது உறவினர்களிடையே இதே போன்ற மனசிதைவு நோயின் அறிகுறிகளின்  தாக்கம் அதிகமாக இருந்தது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு :
021
மனசிதைவினால் 
மூளை பாதிக்கப்படுமா?

      அதி நவீன மூளை ஸ்கேன் படங்கள் மீண்டும் மீண்டும் மனசிதைவில் மூளையின் அமைப்பு மாற்றங்களை நிரூபித்து வருகின்றன.
      டெம்பரல் பகுதி,அமக்டிலா ஈ,கிப்போகேம்ஸ்,மூளையின் முக்கியமான கிரீம் மேல் பகுதி இவைகளின் தேய்மானம், இதன் விளைவாக மூளையின் நடுவில் உள்ள குணம் போன்ற நீருடைய வெண்டிரிகல் அறை பகுதியின் விரிவடைந்த நிலை இது போன்ற பல முக்கியமான கண்டுபிடிப்புகள் வளர்பருவ மூளை பாதிப்புகள் மனசிதைவு உருவாக்குகிறது என்பதை ஆதாரபூர்வமாக விளக்குகிறது.
       சில இரசாயண பொருட்களின் உதவியால் மூளை நரம்பியல் மண்டலத்தின் நரம்பனுக்கள்,
கணிணியின் வயர் போல் செயல்படுகிறது.இவை இரசாயன மின்சார மாற்றங்களினால் நிகழ்கிறது.முக்கியமாக புற உலக தகவல் சேகரிப்பது,அப்படி சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒன்றோடுடொன்று ஒப்பிட்டு ஆராய்வது, ஆராய்ந்த முடிவுகளை சேகரிப்பது மீண்டும் தேவைபடும் போது சேகரித்த தகவல்களை வெளியிட்டு உதவுவது இது போன்ற சில அடிப்படை மனித நேய உரிமைகள்,உணர்வுகள் உடையவர் யாவும் இவர்களது துன்பங்களை காணாது கண்மூடி கொள்வது முடியாத காரியம்.கடந்த நூற்றாண்டிலிருந்து இவர்கள் கைவிலங்கு காப்பகங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.இந்த 50 ஆண்டுகளின் சிறப்பான மருத்துவத்தால் மனசிதைவு நோயின் தீவிர பாதிப்பு கட்டுபடுத்தப்பட்டுள்ளது.
மனநல காப்பகங்களில் கட்டி போடும் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக 10 ஆண்டுகளில் புதிய புதிய மருந்துகள் மனசிதைவை கட்டுபடுத்த மிக சிறப்பாக செயல்படுகிறது.    
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு 
022
12) எப்படி மூட நம்பிக்கைகள் ஏற்பட்டது ?

               பொதுவாக மூட நம்பிக்கைகள் பலவகைகள் பெரும்பாலானவை மனசிதைவு குறை
உள்ளவர்களால் உருவானது என்றே சொல்லலாம். குறிப்பாக சந்தேக நோயுள்ளவர்கள் நிறைய பேரை எதிரிகளாக கற்பனை செய்து கொள்கிறார்கள். இதன் விளைவாக அவர்கள் தன்னை இழிவாக பேசுவது போல, திட்டுவது,சதி திட்டமிடுவது போல பல விதமான பிரமை குரல்கள் காதில் கேட்கும்.
               மொத்தத்தில் இந்த கற்பனைகள் பிரம்மைகள் யாவும் எப்படி உருவாகிறது என்று நோயாளி மற்றும் உறவினர்களால் அறிவு பூர்வமாக விளக்க முடியாததால் எதிரிகள் “என்னமோ” ஏதோ” செய்திருக்கலாம் என்ற அனுமானம் பிறக்கிறது. இதற்கு காலங்காலமாக பில்லி, சூன்யம், வசியம், செய்வினை ,மை,மருந்துவீடு ,பிளாக் மேஜிக் என்று பலவாறு பெயர்கள் சூட்டப்பட்டு நோயாளி,உறவினம், சமூகம் முக்கியமாக இதை வைத்து “பிழைப்பு” நடத்துபவர்களின் கட்டு கதைகளின் உதவியால் இந்த மூட நம்பிக்கைகள் செழித்து வளர்கிறது.
              கனவு நிலையில் இயங்கும் மனம் அதற்கு அன்னியமானது போல தோன்றும், காட்சிகளும் எண்ணங்களும், கற்பனைகளும் பிரம்மைகளும் நிறைந்துள்ளது.இதை நாம் மூளையில் ஏற்படும் பிம்பங்கள் என உணரும் போது மனசிதைவின் குறைகளும் பகலில் தோன்றும் கற்பனை கனவு நிலைதான் என்பதை எளிதாக புரிந்து கொள்ள தயங்ககூடாது.
             தேவையில்லாத அர்த்தமில்லாத ஆயிரமாயிரம் மூடநம்பிக்கைகளின் விளைவாக மனச்சிதைவு குறைபாடுள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய முறையான அறிவியல் பூர்வமான மருத்துவத்தை தவிர்ப்பதோ,தாமதிப்பதோ, மறுப்பதோ மிக ஆபத்தானது.    
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு  
023
மக்கள் 
ஏன் மருத்துவத்தை நாடுவதில்லை?

         மிகமிக முக்கியமான காரணம் அறியாமை மனச்சிதைவு என்பது மூளை நரம்பியல்
தொடர்புள்ள ஒரு இயக்க குறைபாடு என்ற உண்மை பெரும்பான்மையான மக்கள் அறியவில்லை,மனம் என்பது மூளையின் இயக்கம் என்பதே பலருக்கு புரிவதில்லை.பாரம்பர்யமாக மூட நம்பிக்கைகள் இந்த மனச்சிதைவு நோயாளிகளை சுற்றி ஒரு மாபெரும் வலையை பிண்ணி வைத்துள்ளது.அதிலிருந்து சமூக மக்கள் இன்னும் வெளிவர முடியவில்லை.
          இதற்கு தொடர் வைத்தியம் செய்ய போதுமான அளவிற்கு மருத்துவர்களும், பொருளாதார,
சுகாதார வசதிகளும் இன்னும் பெருக வில்லை,நோயாளியின் குறையால் தனது நோயின் தன்மையை உணர முடிவதில்லை.நோய் என்று அவர்கள் ஒருபோதும் ஒத்து கொள்வதில்லை இதன்  விளைவாக   தொடர் சிகிச்சை பல பல விதம் காணப்படுகிறது.
         நோயின் தன்மை,மருத்துவ குறைகள் உறவினர்,நோயாளி ஒத்துழைப்பின்மை,வறுமை போன்றவை மனசிதைவுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதற்கு பலவிதத்தில் இடையூறுகளாக உள்ளது. நல்ல பலன்கள் சிகிச்சையில் உடன் கிடைப்பதில்லை.மனசிதைவு போலவே தோன்றினாலும் உண்மையின் பலவித மன அறிகுறிகள் தற்காலிகமானவை.இவை மந்திர தந்திரத்தால் தான் குணமானது என்று நம்பி கொண்டு உண்மையான மனச்சிதைவு நோய்க்கும் இந்த சிகிச்சை செய்து வீணாக கால விரயம், தாமதம் செய்கிறார்கள். 
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு:
024
மனநல மருத்துவ சிகிச்சை தேவையா ?

                 சர்க்கரை வியாதியை போல மனசிதைவும் ஒரு தொடர்மறாய் அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் வளர்பிறை போல அதிகமாக கூடியது அதை விட முக்கியமாக மேலும் மேலும் புதிய புதிய தீய விளைவுகளை ஏற்படுத்தகூடியது.இறுதியாக மனதின் ஒவ்வொரு செயல் திறனையும்  பல முகங்களில் பாதிக்க கூடியது மொத்தத்தில் உபயோக மற்று மற்றவரை சார்ந்துள்ள நிலையை உண்டாக்கும் அதுமட்டுமல்லாமல் அவரது பெற்றோர்,  சகோதரர்,கணவன், மனைவி, குழந்தைகள், போன்ற உறவினர்களது மன அமைதியை குறைக்க வாய்ப்புள்ளது.அவர்களது தனிப்பட்ட உடல்நல,மனநல, சமூக அரசின் கடமைகளும் தேவைகளும் மனசிதைவு நோய்க்காக  அதிகரிக்கிறது.
            எனவே இதை chronic progressive multisystemic debilitating disorder                                                                                                                
  என்று குறிப்பிடுகிறார்கள்.மனிதநேய உரிமைகள்,உணர்வுகள்,உடையவர் யாவும் இவர்களது துன்பங்களை காணாது கண்மூடி கொள்வது முடியாத காரியம் கடந்த நூற்றாண்டிலிருந்து இவர்கள் கைவிலங்கு காப்பகங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.இந்த 50ஆண்டுகளின் சிறப்பான மருத்துவத்தால் மனசிதைவு நோயின் தீவிர பாதிப்பு கட்டுபடுத்தப்பட்டுள்ளது.மனநல காப்பகங்களில் கட்டிபோடும் தேவை குறைந்துள்ளது.குறிப்பாக10 ஆண்டுகளில் புதிய மருந்துகள் மனச்சிதைவை கட்டுபடுத்த மிக சிறப்பாக செயல்படுகிறது.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
025
             மருந்துகளால் எப்படி பலன் கிடைக்கின்றது?
        கடந்த 60 வருடங்களாக மனசிதைவை சில நல்ல மருந்துகள் கட்டுப்படுத்தி வருகின்றன கடந்த 10 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட அது நவீன மருந்துகள் தேவையில்லாத விளைவுகள் ஏற்படுத்தாத சிறப்பு குணம் அளித்து வருகிறது. மனசிதைவின் அடிப்படை குறையாக கருதப்படும் டோபமின் என்ற நரம்பியல் வேதி  பொருளைசமன்படுத்தி,கற்பனைகள்,பயம்,பதட்டம்,சோர்வு,உறக்கமின்மை போன்ற விளைவிகளை மாற்றுகின்றது. கோபம்,ஆக்ரோசம்,சந்தேகம்,வன்முறை,பரபரப்பு போன்ற நடவடிக்கைகளை கட்டுபடுத்துகின்றன.
         சுயபராமரிப்பு,நட்புறவுகள்,வேலை,கல்வியில் ஆர்வம் போன்ற இழந்த அடிப்படை உணர்வுகள் மீண்டும் உருவாக்க உதவுகின்றன.  இந்த செயல் திறன்கள் யாவும்குறைந்ததற்கு மூலகாரணமான மூளை நரம்பியல் வேதி பொருட்களை இந்த மருந்துகள் சமன்படுத்தி சீர் செய்கின்றன.
           மிக முக்கியமான ஒரு நரம்பணுவும் மற்றொரு நரம்பணுவும் தொடர்பு கொள்ளும் சந்திக்கும்
இடம் இதை சந்தி அல்லது சந்திப்பு என்று சொல்லலாம். இங்குதான் அடிப்படை வேலையான
தகவல் பரிமாற்றங்கள் செய்வதின் வழியாக பழுதடைந்த தகவல் தொடர்பு சாதனங்களை மீண்டும்
சீர் செய்து ஒழுங்கு படுத்தி மூளை நரம்பு மண்டல மன நல இயக்கத்தை நெறிபடுத்தி மனநலம்
குணமடைய உதவி செய்கிறது. 
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

026

எவ்வளவு காலம் மருந்து எடுக்க வேண்டும்?
                    சிகிச்சையின் துவக்க காலத்தில் துல்லியமாக இதை தீர்மானிப்பது கடினம்,ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை நோயின் அறிகுறிகளை கணக்கெடுத்து அதன் போக்கை தீர்மானித்து முடிவெடுக்கப்படுகிறது. தோராயமாக சொன்னால் சர்க்கரை நோய் போல தொடர் மருத்துவ கண்காணிப்பு மிக மிக அவசியம். நோய் பாதிப்பின் தீவிர உச்ச கட்டத்தில் மிக அதிகமான சக்தியுள்ள மருந்துகளும் பல மருந்துகளில் கலவையும் தேவைப்படும்.2அல்லது 3 மாதத்திற்குள் கற்பனைகள்,பிரமைகள் இவற்றின் நம்பகத்தன்மையும் உண்மை தோற்றமும்,தீவிரமும் குறைய ஆரம்பிக்கும்,ஓரளவிற்க்கு முற்றிலும் மறைந்த பின்னர் மாத்திரை அளவுகளையும் எண்ணிக்கையையும் மருத்துவரின் ஆலோசனையுடன் குறைத்து கொண்டு வர முயற்சி செய்யலாம.பிறகு மிக குறைந்த அளவு நோய் தடுப்பு,திரும்பி வராமல் பாதுகாப்பு கொடுக்கும் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் வழ்க்கை சம்பவங்களோ,நெருக்கடிகளோ,சூழ்நிலை,கால நிலை மாற்றங்களோ ஏற்படும் போது நோயின் அறிகுறிகள் லேசாக தலை தூக்கினால் உடன் மருத்துவரை ஆலோசித்து மருந்துகளை மாற்றவோ,கூட்டவோ செய்யலாம்.
           பெரும்பாலும் குறந்த அளவு தொடர் மருந்துகள் பராமரிப்புமருந்துகள்,பாதுகாப்பு மருந்துகள், நோய் தடுப்பு மருந்துகள் இவற்றை எடுத்து வருவது நல்லது அறிகுறிகள் மீண்டும் வராமலும் வந்தாலும் தீவிர பாதிப்பு இல்லாமல் நோயை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
027
            மின் அதிர்வு சிகிச்சை எப்போது தேவை?
        வன்முறை,கொலை,தற்கொலை கட்டுக்கடங்காத தீவிர ஆக்ரோசம்,போன்ற நெருக்கடியான
நேரங்கள் நோயாளியை உடனடியாக பாதுகாக்க வேண்டிய அவசியமுள்ளது. அந்த நேரத்தில் அவர் ஆலோசனைக்கோ,மருந்து உட்கொள்ளும் சிகிச்சைக்கோ,ஊசி போட்டு கொள்ள ஒத்துழைப்போ தருவதில்லை.தன் சுய உணர்வில் இருப்பதில்லை. தீவிர கற்பனைகள் பிரமைகள்
குறிப்பாக பீதி,பயம்,அச்சம்,சந்தேகம்,போன்றபிரமைகள் அவரை கனவுலக நிகழ்வுகள் போல வழிநடத்தும். எனவே உடனடியாக பலன்,பயன்,பெற பலசமயங்களில் நடைமுறை நினைவுலகுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. இதற்கு உடனடியாக மின்னதிர்வு சிகிச்சையை தாமதிக்காமல் செய்வது அவரையும்,மற்றவரையும் பாதுகாக்க உதவும் உடன் தன்னுணர்வு ஏற்பட்டுகற்பனைகள்,பிரமைகள், நீங்க உணவு,சுய பராமரிப்பு உறவினருடன் நட்டுபுறவு போன்ற அடிப்படை செயல் திறன்கள் ஏற்பட மின் அதிர்வு மருத்துவம் தேவை.catatonia பிடிநிலைஎன்ற மயக்க நிலையில் பேச்சற்ற,புற உலக தொடர்பற்றபிரக்ஞை இழந்த நிலையை உடனடியாக மாற்றி உயிர் காத்துஉதவும் மின்னதிர்வு சிகிச்சை மிக சிறப்பாக செயல்படுகிறது.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
028
                மருத்துவமில்லாது வேறு வழிகள் உண்டா?
            நிச்சயமாக மனசிதைவு நோய்க்கு மருந்து தேவை மற்ற வழிகளால் எந்த பயனும் இல்லை.
பலருடைய தவறான கருத்துகளாலும் மூட நம்பிக்கைகளாலும் சிகிச்சையை தாமதிப்பதோ, தவிர்ப்பதோமனச்சிதைவை அதிகரிக்கும். அறிகுறிகள் துவங்கி ஆறுமாத காலத்திற்க்குள் சரியான முறையான மருத்துவ சிகிச்சைநல்ல பலன்களை தந்துள்ளது.வெட்கப்பட்டு கொண்டுசமுதாயத்தின் பார்வைக்கு பயந்து கொண்டு,மன நோய்என்று அவப்பெயர்,அவமானம் ஏற்படும் என்றுதயக்கப்பட்டு கொண்டு பலர் பாதிக்கப்பட்டவரைசிகிச்சைக்கு அழைத்து வர தாமதம் செய்கிறார்கள்.
         மருத்துவரல்லாத பலரின் அறியாமையிலும் பழங்காலமூட நம்பிக்கையிலும் ஏற்பட்ட கருத்தை நம்பிபலவிதமான பயன் தராத மருந்தில்லாத முறைகளைவைத்தியம் என்று நம்பி பல காலத்தை விரயம்செய்கிறார்கள். பல ஆராய்ச்சிகளில் ஆறுமாதத்திற்க்குபிறகு துவக்கப்படும் சிகிச்சைகள் எதிர்பார்த படிபலன்கள் தருவதில்லை என நிரூபனம் செய்கின்றன.
       துவக்க காலத்தில் தயங்காமல் தாமதியாமல்,நோயாளி ஒத்துழைப்பு தரவில்லையென்று தளராமல் மருத்துவரிடம் உறவினராவது சென்று கலந்தாலோசித்துமருத்துவ சிகிச்சையை செய்ய வேண்டும்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
029
            மனசிதைவினால் அவரது குடும்பம் பாதிக்கப்படுமா?
         உறுதியாக குடும்ப பாரம் அதிகமாகும்.உடல் நல,மன நல,பாதிப்புகள்,சமூக,பொருளாதார
வளர்ச்சிக்கு தடைகள் ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு வரும் குறைகளால்மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும்.தகப்பனுக்கு ஏற்படுவதால்பொருளாதார நெருக்கடிகள் உறவினரினால் புறக்கணிக்கப்படுதல்வருமானமின்மை போன்ற பல நெருக்கடிகள் உருவாகும். கணவன் மனைவி எவரொருவர் குறைப்பட்டாலும் திருமண பிரிவு, திருமண முறிவு ஏற்பட வாய்ப்புண்டு. இவை யாவும் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் அவர்களது உடல் நல மன முதிர்ச்சி பாதிக்கலாம்.
              மனபதட்டம், மனச்சோர்வு ,கல்வியிழப்பு ஆதாரவின்மை,தற்கொலை யற்சிகள்,போதை பழக்கவழக்கங்கள் போன்ற தீய விளைவுகள் குழந்தைகளுக்கு ஏற்பட மனசிதைவு உள்ள பெற்றோர் ஒருவர் காரணமாகிறார்.சூழல்,பாரம்பர்ய பலகீனம் இரண்டும் சேர்ந்து கொள்ள
வாய்ப்புள்ளது.  இளம் வயது நோயளிகளால் பெற்றோரது எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றமடைந்து அவர்களுக்கு உடல் நலம்,மன நலம்,தொழில் திறமைகள்,பொருளாதார வளர்ச்சிக்கு பாதிக்கப்படலாம்.இதனால் மற்ற சகோதர சகோதரிகளின் நலன்களுக்கு இடையூறு வர மனசிதைவு நோய் வழி செய்கிறது. மிக மிக அதிகமாக பாதிக்கப்படுவது மனைவியே.அதிலும் குறிப்பாக சந்தேக வகை மனசிதைவுள்ள கணவரால் அவரது மனைவியின் பாதிப்புகள் கணக்கில் சொல்ல முடியாது.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு030
          தற்கொலையை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
            மனச்சிதைவு குறைபாட்டில் தற்கொலை முயற்சிகளும்,மரணங்களும் மிக அதிகமாக காணப்படுகிறது.தற்கொலைக்கான தூண்டுதலும் காரணங்களும் ஒவ்வொரு நோயாளியிடம் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
          பிரமைகள் குறிப்பாக காதில் கேட்கும் குரல்கள் மிக முக்கிய தூண்டுதலாக இருந்திருக்கிறது.மிரட்டும்,அதிகாரம் செய்யும்,வழி நடத்தும்,குற்றம் சொல்லும் குரல்கள் அடிக்கடி காரணமாகிறது.குறிப்பாக கடவுளின் குரல்,இறந்து போன பாசமானவரின் குரல்,மிரட்டுகின்ற எதிரியின் குரல்,குற்றம் சொல்கின்ற,குறிப்பாக பெண்களின் கற்பொழுக்கத்தை இழிவு படுத்தும் சமுதாய குரல் போன்றவை தீவிர பாதிப்பின் போது தற்கொலை செய்து கொள்ள தூண்டுதல்களாக உள்ளன.
          அடுத்ததாக கற்பனைகள் குறிப்பாக பெண்கள் அடுத்தது ஆண்கள் தங்களது கணவன்/மனைவின் நடத்தையின் மீது ஏற்பட்ட உறுதியான சந்தேகம் தற்கொலையை நாட தூண்டுகிறது.கற்பனையில் சமுதாய,சமூக,சட்டதுறை,காவல்துறை,அரசு போன்றவர்கள் தன்னை தண்டிக்கும் முன் அவமான படுத்துவதற்கு முன்பு தப்பிக்கும் முயற்சியாக தற்கொலை முயற்சி நடக்கிறது. பல நேரங்களில்,உறவினர் சமூக புறக்கணிப்பால் வேலையின்மை,கல்வி,இழப்பு,வறுமை,ஆதரவின்மை,மன தற்கொலை தீர்வை தேடுகிறது.
சிலருக்கு தன் நோயின் சுய அறிவு தன்னம்பிக்கை இழக்க வைத்து தற்கொலையை தேர்ந்தெடுக்கிறது.இவை உடனடியாக மன நல மருத்துவரிடம் கலந்தாலோசிக்க காரணமான அறிகுறிகளாம்.              
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு031
தீய விளைவுகளை எப்படி தடுப்பது?
           மனசிதைவின் மிக முக்கிய அடிப்படை கோளாறு கற்பனைகளும்,பிரமைகளும்,அதை கட்டுபடுத்த மருந்துகளை தவிர மாற்று வழி எதுவுமில்லை.தீவிர பாதிப்புகள்,கட்டுகடங்காத ஆக்ரோசம்,போன்றவை மின் அதிர்வு சிகிச்சையால் பயன்பெறலாம்.
           மீண்டும் வராமல் தொடர் மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும். நோயாளி ஒத்துழைப்பு தரமறுத்தால் நீண்ட காலம் வேலை செய்யும் ஊசி மருந்துகள் மாதம் ஒருமுறை கொடுப்பதில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
          நோயாளிக்கும்,உறவினருக்கும் மனசிதைவு நோய் பற்றிய தெளிவான அறிவியல் உண்மைகள் கற்பிக்க பட வேண்டும். நோய் காரணம்,மூட நம்பிக்கை ஒழிப்பு, நோயின் போக்கு,தீமையான விளைவுகள் மருத்துவ சிகிச்சைகள் தடுக்கும் முறைகள் யாவும் உறுதியாக வலியுறுத்த பட வேண்டும்.சமூக திறமைகள்,தொழில் திறமைகளுக்கு பயிற்சி தர வேண்டும்.மருத்துவ கண்காணிப்பில்லாத காப்பகங்கள் தடுக்கப்பட வேண்டும்.
         குடும்பத்திலும்,சமூகத்திலும் திறமையாக செயல்பட பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.தேவையானால் குறைந்த நாட்கள் மருத்துவமனை சிகிச்சையளிக்கலாம்.பகல் நேர பராமரிப்புடன் கூடிய பயிற்சி மையங்கள் செயல்பட வேண்டும்.மறுவாழ்வு தொழில் பயிற்சி,பராமரிப்பு மையங்கள் அமைய வேண்டும்.
       உடல் நல,மன நல மருத்துவர்கள்,மன நல ஆலோசகர்கள்,மன நல சமூக பணியாளர்கள் ,மன நல செவிலியர்கள் போன்ற ஒரு சிறப்பான அணியின் ஒருங்கிணைந்த முழு ஈடுபாட்டுடன் கூடிய பணிகள் மனசிதைவின் தீமைகளை ஓரளவு கட்டுபடுத்த உதவும்.               
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு032
 பரிபூரணமாக மனசிதைவை குணப்படுத்த முடியுமா?
        இது ஒரு தொடர் நோய்,அடிப்படையாக சர்க்கரை நோய் போல இராசயண‌ குறைபாடுகளினால் வருவதால் கிருமிகள் நோய் போல அழித்து விட முடியாது.பல ஹார்மோன் குறைபாடுகளை போல தொடர்ந்து செயற்கையாக சமன்படுத்தும் மருந்துகளை உள்ளே கொடுக்க வேண்டியுள்ளது.
        நோயின் முதல் ஆறுமாத காலத்தில் சிகிச்சை எடுத்த பலருக்கு நல்ல பயன்கள் கிடைப்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.பலருக்கு இடையில் நீண்டகாலம் கூட பிரச்சனைகள் வராமல் தவிர்க்கபட்டுள்ளது.என்றாலும் பல வருடங்கள் தீவிரமாக பாதிக்கபட்டவரை முழுமையாக குணபடுத்த முடியாவிட்டாலும் மேலும் மேலும் அவரது நடத்தைகள் மோசமாகாமல் தடுத்து நிறுத்த முடியும்.காணாமல் போவது,தற்கொலை ஆபத்து,சுய பராமரிப்பில்லாமல் மோசமடைவது,மற்றவருக்கு குறிப்பாக குடும்ப வளர்ச்சிக்கும்,மன அமைதிக்கும் தடையாக இருப்பது,இன்னும் இது போன்ற பல தீய விளைவுகளுக்காவது கட்டாயம் சிகிச்சை தேவை.குணமாகாது என்ற விரக்தியில் சிகிச்சையை தாமதிப்பது மேலும் மேலும் அவர் குணமடைய உள்ள வாய்ப்புகளை குறைத்து விடும்.    Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு 
033

மீண்டும் மீண்டும் 
வராமல் தடுக்க முடியுமா?
        மனசிதைவு நோய் என்பது கிருமிகளால் ஏற்படும் தற்காலிக நோயல்ல.அது சர்க்கரை நோய் மாதிரி சில இராசயண‌ பொருள்களின் சமன்பாடு வீதம் ஏற்ற இறக்கமடைவதால் வருவது.
chronic progressive metabalic disorder with degeneration in mutiple organs and systems   என்று நீரழிவு என்ற சர்க்கரை வியாதியை சொல்வார்கள்.
         அதே போல மனசிதைவும் தற்காலிகமானது அல்லது மீண்டும் மீண்டும் அடங்கி கிடக்கும் அறிகுறிகள்,ஆமையின் ஓட்டுக்குள் அடைந்து கிடப்பது போல மறைந்திருந்து வெளிப்படும். கற்பனைகளும்,பிரமைகளும் தற்காலிகமாக குறைந்து மறைந்த கிடந்தாலும் ஆழ்மனதிலிருந்து மீண்டும் சுய நினைவிற்கு வரும்.எனவே மறைந்து கிடக்கும் காலத்தை என்றும் குறிப்பிடுவார்கள்.
        இதற்கு முக்கிய காரணம் உறவினரோ, நோயாளியோ குணமாகி  விட்டது என்ற நம்பிக்கையில் மருந்தை நிறுத்தி விடுவது தான் அல்லது நோயாளி பிடிவாதமாக மறுத்து விடுவது அல்லது தானாக குறைந்து கொள்வது.சில நேரங்களில் புற வலாக,குடும்ப சூழல்கள்,மன,சமூக,பொருளாதார நெருக்கடிகள் நோயை அதிகப்படுத்தலாம்.
    நோயாளி மறுத்தால் மாதமொரு ஊசி என்ற நீண்ட கால மருந்துகள் உதவி செய்யும்.உறவினர்களுக்கு நோயை பற்றிய தெளிவான விளக்கமும்,ஆலோசனைகளும் அறிகுறிகள் மீண்டும் வருவதை தடை செய்யும்.          
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு
033
      
வேறு என்ன என்ன 
சிறப்பான உதவிகள் தேவை?

மனசிதைவு என்பது முழுக்க மூளை நரம்பு  மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மன நல பாதிப்பின் விளைவுகளால் செயல் திறன், கல்வி,உறவு,தொழில்,நட்பு பாதிக்கப்படுகிறது.எனவே சமூக பயிற்சிகள்,மறுவாழ்வுதிட்டங்கள் மிக மிக அவசியம். முக்கியமாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்,பகிர்ந்துகொள்ளும் திறமையை இவர்களுக்கு பயிற்றுவிப்பதுஅவசியம். மௌத்துவத்தின் அவசியத்தையும் வலியுறுத்த வேண்டியுள்ளது.
சுயபராமரிப்பு பயிற்சிகள் தேவை உறவினர்,நண்பர்,இவர்களுடன்நட்புறவு ஏற்பட பல திட்டங்கள் தேவைப்படுகிறது.      வேலை,தொழில்,சமூக திறமைகள் பலவற்றில்இவர்களுக்கு மிக தீவிர குறைகள் ஏற்பட்டு விடுகிறது.ஓரளவிற்காகவே மீட்டு கொண்டு வர பயிற்சிகள் அவசியம்.
சுய வருமானம்,தன்னிறைவு,சார்பற்ற நிலைக்கு கொண்டுவருவது அவசியம்.மனநல காப்பகங்களுக்கு தேவையற்ற நிலை வர வேண்டும்.இவர்கள் சமூகத்தில் பராமரிக்கப்பட்ட பல்வேறுமறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
      பாதிக்கப்பட்டவருக்கு அவரது உறவினருக்கும் மனசிதைவுபற்றி தெளிவான சந்தேகமில்லாத விழிப்புணர்வு வந்தால் எந்த வித இடையூறுமின்றிசிறப்பாக பலனளிக்க உதவி செய்யும்.
         உறவினர் சுய உதவி குழுக்கள் அமைத்துகொள்வது சிறந்த பலன்க‌ள் தரும்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு 
034

மன சிதைவினால் 
என்ன தீய விளைவுகள் ஏற்படுமா?

1.இளம் வாலிப பிராயத்தில் கல்வி திறமைகள் பாதிக்கப்படும்.
2.பெண்களின் இளம்பருவத்தில் திருமண வாய்ப்புகள் தடையிடும்.
3.மற்ற சகோதர சகோதரிகளின் பாசத்தை இழக்க நேரிடும்.
4.கல்வியின் தொடர்சி தடை ஏற்பட்டு நிறுத்தி விடுவார்கள்.
5.வேறு தொழில் திறமைகளை கற்று கொள்ள தடை ஏற்படுகிறது.
6.மற்றவருடன் அனுசரிக்க முடியாமல் அடிக்கடி வேலை மாறுகிறார்கள்.
7.அயலாருடன் பகைமையால் பலமுறை வீடு மாற வேண்டியுள்ளது.
8.உறவினருடன் பிரச்சனைகளால் அவர்களால் புறக்கணிக்கப்படுகிறார்.
9.குறிப்பாக வாலிபர்கள் தகப்பனால் வெறுக்கப்படுகிறார்கள்.
10.குறிப்பாக இளம் பெண் தாயினால் வெறுக்கப்படுகிறார்கள்.
11.பல நேரங்களில் ஆண்கள் பாதிப்பினால் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
12.வெளியிடங்களில் வேலையின்மையால் அவதிப்பட நேர்கிறது.
13.பொருளாதார நெருக்கடிகளால் தனிமைபடுத்த படுகிறார்கள்.
14.வறுமை,தனிமை,ஆதரவற்ற நிலை ஒருமித்து ஏற்படுகிறது.
15.மனைவியின் குறையால் கணவனால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
16.பல நேரங்களில் திருமண பிரிவினால் தாய்வீடு வருகின்றனர்.
17.நிரந்தரமாக திருமண வாழ்க்கையை இழக்க நேரிடலாம்.
18.சில நேரங்களில் திருமண முறிவினால் பாதிக்கப்படுகிறார்கள்.
19.கணவனின் மறுமணத்தால் இரண்டாம் தர வாழ்க்கை வாழ்கிறார்கள்.
20.இளம் பெண்கள் சில சமயம் வீட்டை விட்டு வெளியில் வாழ்கிறார்கள்.
21.வெளியுலகில் ஆதரவற்று,பாலியல் பலாத்காரம் ஏற்படலாம்.
22.சில பெண் நோயளிகள் பாலியல் தொழிலாளர்களாகிறார்கள்.
23.கணவனின் குறையால் பெண் துணையை இழக்க வாய்ப்புள்ளது.
24.தனிமையில் மறுமணமின்றிதனித்து வாழ நேரிடுகிறது.
25.மீண்டும் மறுமணமின்றி தனித்து வாழ நேரிடுகிறது.
26.தனிமை மறுமணங்களும் ஆண்களுக்கு தோல்வியாக வாய்ப்புள்ளது.
27.இது போன்ற சூழ்நிலைகள் தீவிர மனச்சோர்வை உண்டாக்கும்.
28.தற்கொலை முயற்சிகளால் தற்கொலை மரணங்கள் உண்டாகலாம்.
29.சுய பராமரிப்பின்மை தீவிர உடல் சக்தி குறைகளை ஏற்படுத்தும்.
30.சுய சுத்தமின்மை பல கிருமி நோய்களால் தாக்கப்பட வாய்ப்பளிக்கும்.
31.தெருவில் திரியும் நோயாளிகள் தான் மிக மிக பாதிப்புள்ளானவர்கள்
32.மனநல காப்பகங்களில் சீரழியும் நோயாளிகள் தீமையின் உச்சகட்டம்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மனசிதைவு

035

மின் அதிர்வு சிகிச்சை எப்போது தேவை?
        வன்முறை,கொலை,தற்கொலை கட்டுக்கடங்காத தீவிர ஆக்ரோசம் போன்ற நெருக்கடியான நேரங்கள் நோயாளியை உடனடியாக பாதுகாக்க‌ வேண்டிய அவசியமுள்ளது. அந்த நேரத்தில் அவர் ஆலோசனைக்கு மருந்து உட்கொள்ளும் சிகிச்சைக்கோ ஊசி போட்டு கொள்ள ஒத்துழைப்போ தருவதில்லை.தன் சுய உணர்வில் இருப்பதில்லை.
       தீவிர கற்பனைகள் பிரமைகள் குறிப்பாக பீதி,பயம்,அச்சம் சந்தேகம் போன்ற பிரமைகல் அவரை கனவுலக நிகழ்வுகள் போல வழு நடத்தும்.எனவே உடனடியாக பலன்,பயன்,பெற பல சமயங்களில் நடைமுறை நினைவுலகுக்கு கொண்டு வர வேண்டியுள்ளது.
        இதற்க்கு உடனடியாக மின்னதிர்வு சிகிச்சையை தாமதிக்காமல் செய்வது அவரையும் sமற்றவரையும் பாதுகாக்க உதவும் உடன் தன்னுணர்வு ஏற்பட்டு கற்பனைகள் பிரமைகள் நீங்க உணவு சுய பராமரிப்பு உறவினருடன் நட்புறவு போன்ற அடிப்படை செயல் திறன்கள் ஏற்பட மின்னதிர்வு மருத்துவம் தேவை….
பிடினிலை என்ற மயக்க நிலையில் பேச்சற்ற புற உலக தொடற்பற்ற பிரக்ஞை இழந்த நிலையை உடனடியாக மாற்றி உயிர் காத்து உதவும் மின்னதிர்வு சிகிச்சை மிக சிறப்பாக செயல்படுகிறது.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


mind

மனச்சிதைவு நோய் வருவதற்கு காரணங்கள்

மனச்சிதைவு நோய் வருவதற்கு காரணங்கள்…

மனசிதைவு

003

மனச்சிதைவு நோய் வருவதற்கு காரணங்கள்

பாரம்பர்யமாக பலவிதமான நோய்கள் வருகின்றன மிகச் சிறந்த உதாரணம் சர்க்கரை நோய் இதற்கு பலர் நினைப்பது போல சர்க்கரை காரணமல்ல சர்க்கரையானது நமது இரத்தத்தில் குறிப்பிட்ட அளவை எடையைத் தாண்டாமல் இன்சுலின் என்ற இராசயனப் பொள் கட்டுபடுத்தி வைக்கிறது இதை சுரக்க வைக்கும் மரபு வழி அணுக்கூறுகள் ஏற்படுத்தும் குறைபாடுகளால் இன்சுலின் சுரப்பு தடுமாறி அவரது இரத்த சர்க்கரை கட்டுபாட்டை கெடுத்து குழப்பி விடுகிறது.இந்த செய்திகள் யாவரும் அறிந்ததே.
இதே போல மூளையில் டோபமின் போன்ற இராசயண பொருள்களை குழப்பிவிடும் சில குறைபட்ட மரபு வழி அணுக்கூறுகள் மனச்சிதைவு நோய் வருவதற்கு காரணங்கள் என கண்டறியபட்டுள்ளது.இதன் விளைவாக குழப்பமான கற்பனைகள் பல மனிதமூளையில் ஆழமாக அழிக்க முடியாமல் எழுதி வைக்கபடுகிறது.இதனால் பாதிக்கபட்ட மனமுடைய மனிதனின் வெளி நடவடிக்கைளும் திசை திரும்பிய இயந்திர மனிதனைப்போல பைத்ய கார தன்மையுடையதாக நமக்கு தோன்றுகின்றது.
உதாரணமாக புரியாத வயதில் நம் கண்ணால் கண்ட அல்லது காதால் கேட்ட ஒழுக்க நடத்தை தவறிய பெண் நினைவு நம் ஆழ்மனதில் அழுத்தமாக பதிகிறது.ஆனால் ம‌னச்சிதைவு நோய் உள்ள மனதில் இது பரவி வளர்ந்து எதிர்காலத்தில் தன் மனைவியையும் அது போன்றவள் என்று சந்தேகப்படும் அவல நிலைக்கு கொண்டு போகிறது.இது ஒரு உதாரணம் தான்.ஆனால் இது போன்ற பல நூறு விதமான மனகுழப்பங்களும் கற்பனைகளும் பிரம்மைகளும் பாதிக்கப்பட்டவரது மனதை பாழ்படுத்தி மனச்சிதைவு என்ற நோயை கருவாக்கி உருவாக்குகிறது.

இதற்கு மேல் தெளிவாக உங்களை குழப்ப எங்களுக்கு தெரியவில்லை காரணம் இதை நுட்பமாக புரிந்து கொள்வது என்பது மருத்துவர்களுக்கே கடினம் எனவே புரிந்து கொள்ள முடியாவிட்டால் பரவாயில்லை மனசிதைவு என்பது மரபுவழி நரம்பு மண்டல இராசயனப் பொருள்களின் சிக்கல்களால் மூளையின் சிந்தனை,செயல்,உணர்வுகள் பாதிக்கப்பட்டு மனநிலையும் நடத்தைகளும் மாறுபடுவது என்பதை ஏற்றுக் கொண்டாலே போதுமானது.
ஏற்றுக்கொள்ளாமல் இன்றும் பெரும்பாலானோர் பல விதமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடப்பது வேதனைக்குரியது.எத்தனை விதமான மூடநம்பிக்கைகள்அதைபட்டியல்இடுவதுகடினம்.

பேய்,
பிசாசு,
பில்லி,
சூன்யம்
முற்பிறவி ஞாபகம்
என்று பரவலாக மக்கள் ஏமாற்றபடுகிறார்கள்.

சாமி பேசுகிறது,
ஆவிபேசுகிறது,
பாவ தண்டனை,
ரேடியோ,
வயர்லெஸ் பதித்து விட்டார்கள்.
என்று இன்னும் இன்றும் இது போன்ற பலநுறூ கண்மூடித்தனமான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன.

படிக்காத பாமர மக்கள் நம்பினால் மன்னித்து விடலாம் ஆனால் படித்த பகுத்தறிவுள்ளவர்களும் விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் ம‌றுப்பது வருத்தம் தான்.
மனித குலத்தின் எல்லா திசைகளின் இலக்கியங்களிலும் வரலாற்று பதிவுகளிலும் மனநல மாறுபாடுகள் சிறப்பாக தெளிவாக வர்ணனை செய்யபட்டுள்ளது.ஆனால் பெரும்பாலான தேசங்களில் இவர்கள் புறக்கணிக்கப்படும் ஒதுக்கப்படும் அல்லது தண்டிக்கப்பட்டும் இருந்துள்ளனர்.மேலும் மூட நம்பிக்கைகளின் அடிப்படையிலான சித்ரவதைகளையும் கொடூரங்களையும் காலங்காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னும் மனசிதைவு நோய் பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.படித்தவர்கள் மத்தியில் கூட இதைப்பற்றிய தெளிவான அறிவு இன்னும் உருவாகவில்லை.