STRUCTURE OF MIND –4


சிறுநீர்தாரை நிலை ஏறக்குறைய ஆசனவாய்நிலையை போலவே பிரச்சனைகளையும்,தீர்வுகளையும் உடையது.சிறுநீர் கழிப்பது தளர்வான இன்ப நிலையையும்,பாலுணர்வு இன்ப உணர்வுகளுக்கு முன்னோட்டமாகவும் அமைவதாக பிராய்ட் நம்பினார்.

ஆண் குழந்தைகளுக்கு ஆண்குறி பற்றிய தற்பெருமையும் பெண் குழந்தைகளுக்கு அது இல்லையென்ற பொறாமையும்,தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுவதாக பிராய்ட் கருத்து கொண்டிருந்தார்.இந்த வளர் பருவ சூழலில் ஆண்/பெண் பேதம் பற்றிய புரிதலும்,சுயபால் உணர்வு பற்றி உணர்வும் உருவாகிற்து என விளக்கினார்.

அடுத்ததாக 3 முதல் 5 வயது வரையுள்ள குறி இன்ப உணர்வுகள் உருவாகும் குறி நிலை பருவத்தை பற்றிய பிராய்டின் கருத்துக்கள் மிக தீவிரமான வாதவிவாதங்களையும்,எதிர்ப்புக்களையும்,கண்டணங்களையும் சந்தித்தது.

இந்த வயதில் ஆண்குறி என்பது இருபால் குழந்தைகளின் பிரதான முக்யத்துவம் பெறுகிறது என வாதித்தார்.ஆண்குழந்தைகள் தனது குறியை இழந்து விடுவோமோ என்ற ஆழ்மனபயம் கொள்வதாக நம்பினார்.

நினைவிலி மனத்தில் ஆண்குழந்தைகள் தாயுடனும் பெண்குழந்தைகள் தகப்பனுடனும் பாலுணர்வு 

கற்பனைகளும்,சுயஇன்பமும் கொள்வதாக தெரிவித்தார்.இதை உலக புகழ் பெற்ற”[எடிப்ஸ் காம்ப்ளெக்ஸ்]”

தாய் மீது காமம் [தகப்பன் மீது காமம்]என்ற துணிச்சலான கருத்தாக வெளியிட்டார்.இதன் மூலம் உலகின் அனைத்து அரசியல்,மத,இலக்கிய அறிவியல்,ஆன்மீக வாதிகளால் விமர்சிக்க பட்டார்.

இந்த வயதில் காம உணர்வு,பாலுணர்வு,இன்ப உணர்வு யாவும் ஆண்குறியிலும்,பெண்குறியிலும் அரும்புவதாக உறிதியாக நம்பினார்.இதில் நிலை கொண்ட புயல் தாய்/தகப்பன் மீது காமமாக,காதலாக மலர்கிறது என்பதில் தீவிரமாக இருந்தார். 
————————————————————————
தன் பாலுணர்வு பற்றிய தெளிவும்,தனது கடமையுணர்வுகளும் எடிப்ஸ் காம்ப்ளெக்ஸை வெற்றி கொள்ளும் திறனும்,திறம்பட பாலுணர்வுகளை கட்டுபடுத்தும் திறமையும்,

தாய் அல்லது தகப்பன் போன்ற‌வர்களை முன்மாதிரியாக கொண்டு தனது நடத்தையை நெறிபடுத்தும் ஒழுக்கவுணர்வும்,மொத்தத்தில் தான் யார் என்ற மனசாட்சி உருபெருகிறது இந்த பருவத்தில்தான்.

இந்த நிலையில் தீராத மன போராட்டங்களும்,காயங்களும்,இதை தாண்டாத பிடிப்பு நிலை யும்,எதிர்காலத்தில் தீவிர பல மனநல குறைபாடுகளையும்,மனநோய்களையும் ஏற்படுத்துகிறது என்று கருத்து தெரிவித்தார்.

ஆண்குறி தற்பெருமை

ஆண்குறி பொறாமை

தாய்/தகப்பன் மீது காமம்

ஆண்குறி இழப்பு பயம்

ஆண்குறி குறைதாழ்வு மனப்பான்மை

பாலுணர்வு கற்பனை சுயைன்பம்

இது போன்ற பல விமர்சனத்துகுரிய துணிச்சலான செய்திகளுடன் இந்த நிலையை கடந்த பின்,

அமைதிநிலை என்பது 6முதல்12வயது வரை உள்ள பருவம்.புயலுக்கு பின்/முன் அமைதியைபோல மனசாட்சி என்ற அரசாட்சியும்,ஈகோ என்ற சிறப்பான நிர்வாகியும்,உடல் என்ற நாட்டை நெறிபடுத்தி

ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் கொன்டுவர பயிற்சி பெரும் அமைதியான காலம்.பெற்றோர்,அயலார்,ஆசிரியர்,கலை,இலக்கிய,விளையாட்டு,போன்ற பல வித தாக்கங்களும் நல்ல அல்லது கெட்ட பாதிப்புக்களை ஆழமாக பதியவைக்கும் கூட்டுபுழு பருவம்.

அதீதமான சுய உள் கட்டுபாடு‍ மனசுழற்சி, அதீதசுத்த சுபாவம் போன்ற குறைகளை உண்டாக்கலாம் மாறாக சுய கட்டுபாடின்மை கல்வி,பயிற்சி போன்ற திறமைகளை வளர்த்து கொள்ளும் வாய்ப்பை கெடுத்துவிடுகிறது. ‍ 
——————————————————————————————-

உச்சகட்டமாக இன்புணர்வு கலவிறுப்புகளில் மையம் கொள்ளும் 13 முதல் திருமணம் வரையிலான அலைபாயும் மனமும்,வயதும் உள்ள வாலிப பருவம் மிக மிக சோதனையானது.

கடல் பயணத்தின் மிக ஆபத்தன சுழல் பகுதிக்கு ஒப்பிடலாம் இதை வெற்றியுடன் விழ்ச்சியில்லாமல் தாண்டி கடப்பது கடினம்.

இது நுட்பமாக துவக்கம்,மத்ய,இறுதி மற்றும் பின் வாலிப பருவம் என்று பல கட்டங்களாக பகுத்து ஆழமாக ஆராயப்பட்டது.

உடல் இராசயண மாற்றங்கள்,காம உணர்வுகளை அதீதமாக தூண்டும் பருவம்.
மனதளவில் பெற்றோரின் கூட்டிலிருந்து பாதுகாப்பு வளையத்தைவிட்டு இறக்கை முளைத்து சுதந்திரமாக முயற்சிக்கும் விடுதலை போர் என்றே இந்த பருவத்தை கற்பனை செய்யலாம்.

முதிர்ந்த அறிவும்,தன்னுணர்வும்,தனது சமுதாய பங்கு பற்றிய தெளிவும்,தனது நட்பு,உறவுகளை கண்டறியும் தேடலும்,எடிபஸ் காம்ப்ளெக்ஸிலிருந்து தப்பித்து.

முறையான பாலுணர்வு கொள்லும் பக்குவமும் இது போன்ற குணாதிசயம் முழுமை பெறும் பல அத்தியாவசயமான நோக்கங்களுடைய வளர்பருவம் விடலை பருவம்.

இதுவரை வந்த வளர்பருவ காயங்களும்,தழும்புகளும்,குணமாக வாய்ப்புள்ள இறுதி கட்டம்.இந்த பருவத்தின் தீவிர பாதிப்புக்கள் தன்னுணர்வு தெளிவாக உறுதிபடாமல் குணாதிசய குறைபாடுகள்,குழப்பமான சுபாவங்கள் இறுதிவரை உறுதியாக பதிய வழிவகுக்கிறது.

இதில் சரியான தெளிவான இனிமையான பயணம் முதிர்ந்த இயல்பான,சுயபாலுணர்வு,தெளிந்த தன்னுணர்வு,முறையான காம உணர்வு,சுய சாதனைகள் படைக்கும்,தொழில்,குடும்ப,சமூக உயர்வுகளையுடைய வெற்றிகரமான இயற்கையான சுபாவங்கள் உறுதியாக வழி வகுக்கிறது.

பிராய்ட் அவர்களின் சித்தாத்தங்கள் திருமணம் என்ற எல்லையுடன் நின்றுவிட்டது.

ஆனால் ஆப்ரகாம் மாஸ்லோ போன்ற மனித நேயம், ந‌ம்பிக்கை வாதிகள் மனிதனுடைய சிறப்பான மன வளர்ச்சி உண்மையில் அதற்கு பிறகுதான் ஆரம்பமாகிறது என தெளிவாக தெரிவித்தனர்.

உடல் சுகம்,உறக்கம்,பசி,தாகம்,காமம்,பாலுணர்வு,காதல்,உடலுறவு, நட்புறவு என்ர அடிப்படை தேவைகள் தீர்ந்த பின் தனி மனித,குடும்ப,உறவினர்,சமூக,சமுதாய,தேசிய பாதுகாப்பு,

மனித நேய கொள்கைகள்

கோட்பாடுகள்

தத்துவங்கள்

சமூக சாதனைகள்

முயற்சிகள்

சுய காதல்

சுய உணர்வு

சுய முன்னேற்றம்

சுய சாதனைகள்

இன்னும் இது போன்ற பல உயர்வான புகழ்,பதவி பெருமை போன்ற சிறப்பான உயர் மனித தேவைகள் சமூக மிருகமான மனிதனுக்கு அவசியமாகிறது.

வரலாற்று கால காலமாக இது கோபுரம் போல உயர உயர கட்டபடுகிறது.
சுயமாக தூண்டப்பட்ட சாதனையாளர்களுக்கு உள்ளுக்குள் ஒரு நெருப்பு உள்ளது.தனது உண்மையான விதையை ஒரு நாள் ஆலமரமாக்கி நிரூபணம் செய்கிறார்கள்.
தலைசிறந்தகலைஞர்களும்,சாதனைபடைக்கும்இசையாளர்களும்,புகழடைந்த தலைவர்களும்,வரலாறு படைக்கும் இலக்கிய வாதிகளும்,தனது சுயத்தை உண்மையாக்கியவர்களே என்று விளக்கம் தந்தார் மாஸ்லோ 

STRUCTURE OF MIND –3

STRUCTURE OF MIND –3 

மனகட்டமைப்பு
குழந்தை முதல் பெரியவர்  வரை பிடிப்பு முதல் இறப்பு வரை நமது சிந்தனைகளையும்,செயல்களையும் இன்பம்/துன்பம் என்ற காந்தங்கள்தான் ஊசலாட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இவையிரண்டும் உருவாக்கும் தேவைகளின் பிறப்பிடங்களை குழந்தை முதல் திருமணம் வரை தெளிவாக படம் பிடித்தார்.
நவீன யுகத்தில் பசி முதல் பாலுணர்வு வரை என்ற எல்லையை தாண்டி உயர்ந்த மனித நேய தேவைகள்,தனிமனிதனின் சுய சாதனை தேவைகள் போன்ற புதிய பரிணாமங்களை மாஸ்லோ போன்ற மகத்தான மன நல அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள்.
பிராய்ட்,இன்ப உணர்வு அதை தரும் உறவினர் உறவு என்ற இந்த இரு பிணைப்பு மன வளர்ச்சியில் எத்தனை  முக்ய பங்கு வகிக்கிறது என்பது பற்றி அறிவியல் பூர்வமான கோட்பாடுகளாக விளக்கமளித்தார்.
இன்புணர்வு நிலை கொள்ளும் பிரதான உடலுறுப்புகளின் பெயரால் அந்தந்த நிலைகளை பகுத்தார்.

1.வாய் நிலை
2.ஆசன வாய் நிலை
3. நீர் தாரை நிலை
4.குறி நிலை
5.அமைதி நிலை
6.கலவிறுப்பு நிலை

இந்த 6நிலைகளில் பிரதான இன்ப உறுப்புக்கும் அதை தணிக்கும் பராமரிப்பாளருக்கும் உள்ள உறவின் திருப்தியோ/திருப்தியின்மையோ மன நல இயக்கங்களுக்கும்/ஈடுபாடுகளுக்கும் அடித்தளம் அமைக்கிறது என ஆதாரங்களுடன் வாதிட்டார்.

————————————————————————————————–


ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் யுத்தங்களின் தழும்புகள் ஒவ்வொரு விதமான மன நல குறைபாடுகளாக பரிணமிக்கிறது என்று மிக மிக சுவாரஸ்யமாக,சுவையாக படம் பிடித்தார்.    1.பிரதான உறுப்பு
2.முக்யமான உணர்வு
3.வயது வரம்புகள்
4.சிந்தனைகள்
5.செயல் திட்டங்கள்
6.திருப்தி
7.திருப்தியின்மை
ஆறு நிலைகளில் குழந்தை முதல் வாலிபர் வரை வளர் பருவ மன முதிர்ச்சி,மன வளர்ச்சி மெல்ல,படிபடியாக உயர் நிலையை வந்தடைவதாக பிராய்ட் பல நுட்பான மனோதத்துவ ஆய்வுகள் வழியாக கண்டறிந்தார்.ஒவ்வொரு நிலைக்கும் உள்ள மேற்கண்ட ஏழு தீர்மானமான பொது செய்திகளை விளக்கமாக தெரிவித்தார்.
   
வாய் நிலை

பசி என்பது துன்பம் பசி நிறைவென்பது இன்பம்.குழந்தையின் முதல் இன்பவுணர்வு தேவை உணவு.எனவே வாய்தான் முதல் நிலையின் பிரதான இன்ப உறுப்பு.
   
பசி,தாக பாலுறுஞ்சும் திருப்தி,சுகம் போன்ற பல திருப்திகள் வாயின் வழியாக குழந்தைக்கு கிடைக்கிறது
திருப்தியை சிரிப்பு,உறக்கம் வழியாக தாயுடன் அன்பில் தெரிவிக்கிறது.
   
திருப்தியின்மை என்பதி துப்புவது,கடிப்பது,அழுவது போன்ற செயல்களால் எதிர்ப்புணர்வை வெளிபடுத்துகிறது.
   
தாயுடன் பாதுகாப்பான பராமரிக்கப்படும் திருப்தியுணர்வு மன நலம் சிறப்பாக வளர வாய்ப்பளிக்கிறது.
   
பிற்காலத்தில் நம்பிக்கையுணர்வையும்,மற்றவரை விரும்பும் உணர்வும்,மற்றவரிடம் கொடுக்கவும்,வாங்கி கொள்ளவும் நம்பிக்கையுடன் நட்புறவை வளர்த்து கொள்ளும் பக்குவத்தையும் தருகிறது.பகையுணர்வு,சார்புணர்வில்லாத சுயதிருப்தியுள்ள மனிதனை உருவாக்குகிறது.
   
மாறாக அதீத கவனிப்பு,அல்லது உதாசீனம்,வெறுப்பு அல்லது இழப்பு போன்ற தாயின் மாறுபாடான நடவடிக்கைகள் குழந்தை மனதில் சுய காதல்,சார்பு நிலை,அவ நம்பிக்கை போன்ற மன மச்சர்யங்களை ஆழமாக பதிக்கிறது.
    
இரண்டாவது ஆசன வாய் நிலை.ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள காலம்.ஆசன வாய் மலம் கழிப்பதை குழந்தை தனது சுயகட்டுபாடுக்குள் கொண்டு வரும் முதல் மன பயிற்சி/செயல் திட்டம்.பெற்றோருடன் முதல் யுத்தம் ஆரம்பமாகிறது.மலம் கழிப்பதை,இடம் நேரம் போன்ற கட்டுபாடுதிட்டங்களுக்கு கொண்டு வர பெற்றோர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
   
சமூகமான பெற்றோர்கள்,சுமூகமான ஒத்துழைக்கும் குழந்தைகள்.இந்த கூட்டணி இந்த பயிற்சி நிலையை திருப்தியாக கடக்கிறது.சுதந்திர உணர்வு,இயல்பாக ஒத்துழைப்பு சுய கட்டுபாடு,என்ற நல்ல குணங்கள் உருவாகிறது.
   
ஆனால் முதல் நிலையான வாய் நிலை திருப்தியின்மையோ அதீத கடுமையான கட்டுபாடுகளோ,அல்லது கட்டுபடுத்தாத அனுமதியோ,அல்லது பிடிவாதமாக கட்டுபடாத குழந்தையோ,பயந்த ஒடுங்கும் சுபாவமோ பல வித மன நல குறைபாடுகள் இந்த காலகட்டத்தில் தீவிரமாக பதிய  வழி வகுக்கிறது.
   
இரட்டை மன நிலை,தீர்மானமின்மை,அதிக பிடிவாதம்,அதீத சுத்தவுணர்வு,ஒத்துழையாமை,ஆக்ரோசம் போன்ற பல தீவிர சுபாவங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. 
 ————————————————————————————————STRUCTURE OF MIND -2STRUCTURE OF MIND -2சிக்மண்ட் பிராய்ட்மனதை ஒரு மூன்று மாடிகள் கொண்ட பாத்திரமாக கற்பனை செய்தார்.

ஆனால் முன்பு நாம் கண்ட மன தின் நினைவு தொகுதிகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.

காரணம்இந்த ego என்பது எல்லா வகை நினைவு நிலைகளிலும் இருக்க கூடும்.இவை அறிவு மனதிலோ,ஆழ்மனதிலோ எதிலும் செயல்பட கூடும்.
    
மன நிலைகளை திட,திரவ,வாயு நிலைகள் மாதிரியும்  கற்பனை செய்து கொண்டால் புரிந்து கொள்ள  முடியும்.
     

superego –என்பதை நாட்டின் அரசியலமைப்பு சட்டமென்றும்
  
ஈகோ –நாட்டின் நடைமுறை அரசாங்கமென்றும்
  
id –என்று சொல்லபடுவதை மக்களின் தேவைகளாகவும் கற்பனை செய்யலாம்.
     

பிராய்டுக்கு பின் வந்தவர்கள்
     
parent (தகப்பன்/தாய்) 
adult (கணவன்/மனைவி) 
child [குழந்தை ]

என்று விளக்கம் தந்தார்கள்.
       

அடிப்படை விலங்கின உந்துதல் தூண்டுதல் தேவைகளான உணவு,உடலுறவு,உறக்கம் மற்றும் உடல் சுகம் போன்ற தேவைகள்,(வெப்பம்/குளிர்) மற்றும் உடல்வலி பாதுகாப்பு தேவைகள் போன்றவற்றின்  தொகுப்பு.இவை பெரும்பாலும் நினைவு மனத்தின் எல்லைக்குள் இருக்கிறது.
      
ஆனால் மனிதமனத்தின்நுட்பானகுரோத,விரோத,பழிவாங்கும்,ஆளுமை,போட்டி,பொறாமை போன்ற பல ஆயிரம் உணர்வுகளாக ஆழ்மனதின் ஆழத்தில் நினைவற்று தொகுப்பே நினைவற்ற மனம்.
        
இவை கிழக்கத்து நாடுகளின் சீரிய சிந்தனைகளில் தெளிவாக உள்ளன.என்றாலும் பிராய்ட்  இதை அறிவியல் ஆதாரங்களுடன் தெளிவு படுத்தியுள்ளார்.
      
EGO என்பது நான் அல்லது தான் சுய உணர்வு பகுதி ராஜாங்கம் சில சமயங்களில் தவறுதலாக பொதுமக்களால்  EGO என்ற அகங்காரத்திற்கும் சூட்டபட்டு விட்டது.
     

உண்மையில் EGO  என்பது ஒரு நிர்வாகி  என்று பிராய்ட் விளக்கம் தந்தார்.இதன் வேலை நடைமுறை உலகோடும்,மக்களோடும் ஆபத்தின்றி ஒருங்கிணைக்கவும்,அடிப்படை தேவைகளை சீர்படுத்தி, நேர்படுத்தி,ஒழுங்குபடுத்தும் காவலாளியாகவும் திறன்மிக்க நிர்வாகியாகவும் செயல்படும்.
     
சிந்தனைகளையும்,செயல்களையும்,உடல்,மனஇயக்கங்களையும்,பேச்சையும்,புற உலக தொடர்புகளையும் கட்டுபடுத்தி அரசாளும் EGO  பற்றிய நமது நினைவறிவு சில மட்டுமே நமது புற நினைவு மனத்திலுண்டு இதன் பெரும்பகுதியும் ஆழ்மனதில் புதையுண்டு நிற்கிறது.
      
இதற்கு சுயபாதுகாப்பு,தற்காப்பு அமைப்புகள்,பயிற்சிகள், நுணுக்கங்கள் என்ற நிர்வாக கட்டுபாடு போன்ற EGO  சுய நினைவற்ற முறையில் உள்ளிருந்து செயல்படுவதாக பிராய்ட் அறிவித்தார்.
     
மூன்றாவது superego என்பது மனசாட்சி,ஆத்மா என்று சொல்லலாம்.இது பெரும்பாலும் புற உலக,மனித குல ஒழுக்க நெறிகளும்,சமுதாய ஒப்பந்தங்களும்,சமூக நிர்பந்தங்களும் குடும்ப தேவைகள் போன்ற முழுக்க முழுக்க அவனது புற‌த்தேவைகளினால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு போன்றது.இவை பல ஆயிரம் வருடங்களாக உருவாகி உள்ளும் புறமும் இருந்து வளர்பருவத்தில் பெற்றோர் ஆசிரியர்,சமூக,சமுதாயம் இவற்றின் தாக்கங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பு.
      

superego என்பதும்ID   என்பதும் உள்ளிருந்து போராடும் நேர் எதிரிகள்,இரண்டு இனங்கள்,இரண்டுமதங்கள்,வீரர்கள் போன்றவை.இவற்றோடு நிரந்தர சமாதானத்திற்காக நிரந்தரமாக போராடும் பரிதாபத்திற்குரிய ஆனால் பலமான தலைவர் போன்றதுEGO 
      
ஒரு தளபதி,superego 
           
தேரோட்டி,EGO 
          
குதிரை–ID
  
போன்ற ஒப்பிடுதல் வழியாக நாம் இதை எளிதில் புரிந்து கொள்ளாலாம்.உடல் தேவைகளுக்கும்,உலக தேவைகளுக்கும் நடுவில் சரியான தராசு போன்று கொண்டு செலுத்தும் ஒரு தேரோட்டியின் வேலையைசெய்கிறது என்று விளங்கி கொள்ளலாம்.மனோதத்துவத்தின் மகத்தான ஒரு இடம் பிராய்ட் அவர்களுக்கு உண்டு.அவரது கருத்துக்களை ஒரு பிரிவு ஆதரித்தும்,மற்றொன்று எதிர்த்தும் நடந்த யுத்தத்தில் பிறந்ததுதான் மன நல ம‌ருத்துவம்.
    
இன்று அவரது கருத்துக்கள் கொஞ்சம்  பூமிக்கடியில் புதைந்து விட்டது.காரணம் அவரது வார்த்தைகளில் அடிக்கடி சமுதாயத்தால் மறைக்கப்படும்,அடக்கபடும்,ஒடுக்கபடும்,புதைக்கப்படும் “பாலுணர்வு” பேசப்பட்டதுதான்.பாலுணர்வை போலவே பிரய்ட் உணர்வுகளும் தீண்டாமையில் ஒதுக்கப்பட்டுவிட்டது.
     
அவர் சொல்வது போல நிரைய பேருக்கு பாலுணர்வு மேல் உள்ள ஆசை நெருப்பை போன்று எரித்து விடும் என்ற அச்சமாக மாறி அறுவெறுப்பு என்ற கவசத்தை மாட்டி கொள்ள தூண்டும்.இந்த அறுவெறுப்பு கவசம் இறுதியில் அவரது கொள்கைகளுக்கும் மாட்டபட்டுவிட்டது.
    
பிராய்ட் மீண்டும் மீண்டும் மனம் என்பதின் பரிணாமம் இன்பவுணர்வு,துன்பத்தை தவிர்ப்பது என்ற இரு அடிப்படை தேவைகளின் ஆதாரத்திலே வளர்கிறது என்பதை வலியுறுத்தி வந்தார்.
    
அதை குழந்தை வளர்பருவத்தில் இன்பமும்,துன்பமும் எந்த உடலுறுப்பிலே புயல் போல நிலை கொள்கிறது,பிறகு எவ்வாறு இடம் பெயர்கிறது என்று தெளிவிக்க முயற்சித்தார்.
    
தன் சொந்த முகமூடியை கிழித்து விட்டு துணிச்சலாக பாலுணர்வின் பங்கை பேச முயற்சி செய்தார்அச்சம் கொண்ட பலருக்கு கேட்க காதுகளில் துணிவில்லை ஒடுக்கிவிட்ட பாலுணர்வு பழக்கம் கொண்டவர்கள் அவரது கோட்பாடுகளை மறுத்துவிட்டனர். 

         

மனகட்டமைப்பு

                             
STRUCTURE OF MIND –1
      

மனகட்டமைப்பு(structure of mind)
    
மனம் என்பது ஒரு செயல்திறன் தொகுப்பே.அதன் சார்பு மத்ய,புற நரம்பு  மண்டலமும்,அது சார்ந்த மிக நுட்பமான இச்சை,அனிச்சை நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பிகள் நரம்பு மண்டலம்,போன்ற பல பின்னி பினைந்த அரசின் செயல்பாடே மனம் என்ற கூட்டமைப்பு.
    
பிராய்ட் மனதை இரண்டு கோணங்களில் கண்டார்.

ஒன்றுtopography,

இரண்டு structure Topography என்பது மாநிலத்தின் விஸ்தீரணத்தை  தொகுதி பிரிப்பது போல,மனதை மூன்று பரப்பாக மூன்று தொகுதிகளாக பெயரிட்டார்.
   
Areas :   1. நினைவு ம‌னம்,concious
                 2. நினைவாற்றல் மனம்,preconcious
                 3. நினைவற்ற மனம்,unconcious

Structure என்பது ஒரு கருவியின் பகுதிகளை போல மனதையும் மூன்று அமைப்புகளாக பிரித்தார்.

Parts:           1.id
                    2.ego
                   3.superego
       
இதை த‌மிழில் மொழிபெயர்க்க செய்யும் முயற்சிகள் மிகுந்த
குழப்பங்களையும்,எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறது.காரணம் பல நூற்றாண்டுகளாக கிழக்கின் தீவிர முயற்சிகள் மனதின் ஆழத்தை அளந்து பார்த்திருக்கின்றன.

ஏற்கனவே நிறைய கருத்துக்கள் நிறைந்துள்ளன.
     
இருந்தாலும் தற்போதைக்கு தைர்யமாக‌
  உள்ளம் id
  மனம் ego
  ஆன்மா superego
என்று பெயரிட்டு கொண்டு புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

Conscious mind: 

மொழியாலும்,செயலாலும் மனதிற்கும் புற உலகிற்கும் உள்ள தெளிவான நினைவுள்ள தொடர்பும்,விழிப்புள்ள நினைவு நிலையும் சிந்தனைகளும்,செயல்களும் கொண்ட விழிப்பு நிலையை நினைவு மனம் என்றார்.


Preconcious mind:

மறைந்திருந்தாலும்,மறந்திருந்திருந்தாலும் ஆழமாக கவனத்துடன் மனதை ஒருமுகமாக்கி நினைவு கூர்ந்து முயற்சி செய்தால் தோண்டப்பட்டால் மேலெழும்பும் பகுதியை(ஒரு கேக்கின் கிரிமூக்கும் உடலுக்கும் நடுப்பக்கத்தின் உள்ள தோல் பகுதி போல)இடைமனம், நினைவாற்றல் மனம்(preconcious mind)என்று பெயரிட்டார்.

Unconscious mind:

முக்யமான மூன்றாவது பகுதி ஆழம் கான இயலாத ஆழ்கடல் போன்ற ஆச்சர்யங்கள்நிறைந்தநினைவற்ற,மறக்கப்பட்ட,மறைக்கபட்ட,அடக்கப்பட்ட,ஒடுக்கப்பட்ட,அமுத்தப்பட்ட,ஒளிக்கப்பட்ட,புதைக்கப்பட்ட  நினைவுகளின் சுரங்கத்தை unconscious mind என்று கண்டு கொண்டார்.மன நல இயங்கியலின் ஆதாரமாக விளங்கும் இந்த சூட்சுமங்களை,இரகசியங்களை புலனாய்ந்து வெளியிட்டார்.
    
புலன்களால் உருவாகும் உணர்சிகள்(sensations) ஒரு நீண்ட சங்கிலி தொடர் கொண்டு பொறிகளால் செய்யப்படும் செயல்களாக முடிகின்றன.

    
இந்த சங்கிலியின் நினைவுகளும்,தொடர்களும் அடுக்கடுக்காக அமைந்துள்ளன.இதை அவர் reflex arc அதாவது விளைவு வளையம் என்றார்.இந்த சங்கிலியின் சிக்கல்களே ஆழ்மனம் என்று அழகாக விளக்கம் தந்தார்.