நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே





நாளைய உலகம் நம் வசமே

நல்லதும் தீயதும் நம்மிடமே


நன்றும் தீதும் பிறர் தர வரது
பலரும் அவர் எனக்கு நன்மை செய்ததில்லை
இவர் எனக்கு தீமை செய்தார்
என அழுது புலம்புவதை கேட்கிறோம்.
எனக்கு நேரம் சரியில்லை
உடல் சரியில்லை
அது சரியில்லை
இது சரியில்லை
என அன்றாடம் சலிப்பதை பார்க்கிறோம்
நான் உப்பு விற்க போனால் மழைவருகிறது
உமி விற்க போனால் காற்றடிக்கிறது
என நொந்து நூலாவது ஏனோ?
மழை வரும்போது குடை விற்க்கலாம்
காற்று வரும் போது உப்பு விற்கலாமே
நல்லதும் கெட்டதும் நம் உள்ளத்தில் உள்ளது
நம் பார்வையில் உள்ளது
நம் செயலில் உள்ளது
எண்ணுவது நல்லதானால் நல்லதே நடக்கும்
செய்வது சிறப்பானால் நல்லதே கிடைக்கும்
இது புரிந்து விட்டால் குழப்பம் இல்லை குறையும் இல்லை
நமது உள்ளத்தின் உள்ளே குப்பைகளும் மணிகளும்
குவிந்து கிடக்கின்றன.
குப்பை போல கிடக்கும் எண்ணங்களை அகற்றி
குண்டுமணியாக கிடைக்கும் நல்ல எண்ணங்களை கண்டுபிடிப்போம்.
உள்ளம் நல்லதையே நினைத்தால்
நமது புலன்க‌ளும் அதை பின் தொடரும்
நம் செயல்கள் பிறர்க்கும் நன்மை தருவதாக இருந்தால்
நமக்கும் நன்மையே ஊதியமாக கிடைக்கும் இது உறுதி
செய்வினை எனபார்கள்
அது பிறர் நமக்கு செய்த சூன்யமல்ல‌
நம் செயல்களுக்கு விளைந்த எதிர் விளைவே அது
நமது வினைகளின் விளைவுகள் நம்மை நிழல் போல தொடரும்
நல்ல செயல்களால் நல்ல புகழ் தொடரும்
தீய செயல்களால் பழியும் பாவமும் தொடரும்
நல்ல பலன் கூட தாமதமாக கிடைக்கும்
தீமையின் பலன் உடனே கைமேல் கிடைக்கும்
அதனால்தான் பிற்பகல் விளையும் என்றார் வள்ளுவர்
நல்லதும் கெட்டதும் பிறரால் அல்ல‌
நம்மிடமே என்பதை உணர்ந்து விட்டால்
நல்லதை தொடர்ந்து சென்றால்
அல்லாததை தவிர்த்து விட்டால்
நாளைய உலகம் என்ன
இன்றைய உலகமும் நம் வசம்தானே
தீமை என்பது முயல் போல ஓடித்தடுமாறிவிழும்
நன்மை என்பது ஆமை போல நொண்டி நொண்டி வரும்,வெல்லும்
அதனால்தானோ கவிஞர் நாளைய உலகம் நம் வசம் என்றாரோ?

பின்னூட்டமொன்றை இடுக