உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்





உண்மையைச் சொல்லி 

நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்


உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய் என்று ஏன் சொன்னார்?

நன்மையைச் செய்யக் கூட பொய் சொல்ல வேண்டுமா?

உண்மை தான் இது,இன்று எதிலுமேஉண்மையில்லை
உள்ளது உள்ளபடி சொனனால் நம்புவர் எவருமில்லை இன்று

பிறர் துயரைக்கண்டு மகிழ்பவர் மிருகம்
பிறர் துயரிலே லாபம் காண்பவர் அதைவிட மிருகம்

எதைச்செய்தாலும் அதிலே தனக்கு ஏதாவது நன்மை உண்டா
என கணக்கு போடுகிறது நவீன மனம்

கையூட்டு,கமிஸன்,வெட்டு,பர்ஸன்டேஜ் என பல பெயர்களில்
ஊக்கத் தொகையாக உலாவருகிறது இந்த ஊழல் தேர்.

தவறு என அன்று சொல்லப்பட்ட 
இது இன்றுநியாயபடுத்த்ப்பட்டுநிலை பெற்று விட்டது.

பாம்புக்கு பாலூட்டி வளர்த்தாலும் அது ஒரு நாள்
கடிக்காமல் விடாது.

சுய லாபத்துக்கு செய்யப்படும் நன்மை கூட நாளடைவில்நஞ்சாவது எப்படி?

நமது கைக்கு என்ன வருகிறது என்பதில்
கவனம் போனால் பொருளின்,சேவையின் தரம்
குறைந்து கொண்டேபோகும்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல தரம்
குறைந்தது உதவியை விட உபத்திரவமாகப் போகும்
நாம் விரித்த வலையில் நாமே வீழ்வோம்.

சமுதாயம் என்பது ஒரு வலைப்பின்னல்
சங்கிலித்தொடர்
ஒருவர் காலை ஒருவர் வாரி விட்டால் அது
தொடர் நிகழ்வாகி மொத்தத்தில் அனைவரும் கால் தடுமாறிதலை குப்புற விழுவது உறுதி

சாலையாகட்டும்,பாலமாகட்டும்
ஆயுதமாகட்டும்,காகிதமாகட்டும்
மருந்தாகட்டும்,விருந்தாகட்டும்
நாம் அனைவருமே உற்பத்தியாளர்கள்
நாம் அனைவருமே உபயோகிப்பாளர்கள்

இதில் எதிலும் உண்மையில்லாது போனால் அது
நன்மையில்லாது போகும்

உண்மை என்பது உடை போல,
கால் தடுக்கும் வேட்டி அது
போட்டி போடும் வியாபார ஓட்டப் பந்தயத்தில்
வேட்டி கட்டி ஓடுவது சுலபமல்ல‌
வேட்டியை கழற்றி போட்டு ஓடும் நிர்வாண எலிகள் வெல்வது சுலபம்

 அது வெற்றியல்ல சிரிப்புக்குரிய வேடிக்கை

இதை பார்த்து இன்று எல்லோரும் உண்மை என்ற உடையைஉதறி விட்டு ஓடப் பார்ப்பது வாடிக்கையாகி விட்டது

அத்தனை பேரும் ஆடையின்றி ஓடினாலும்
இறுதி வெற்றிஒருவருக்குத்தான் என்பது புரியாதோ?

பிறகு அதுவும் சலித்து போனால்
பிறர் காலை தடுக்கி விடும் தந்திரம் வளர்கிறது.

அதுவும் எல்லாரும் செய்தால் அனைவருமே கவிழ்ந்துதான் கிடப்போம்.

நன்மையை செய்வோம்
அதையும் உண்மையாகச் செய்வோம்.

பின்னூட்டமொன்றை இடுக