மூன்றே வாக்யங்களில் மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்

பெண்ணாசை உடலோடு பிறந்தது
மண்ணாசை மனிதனோடு வளர்ந்தது
பொண்ணாசை இன்னும் வளர்கிறது
மூன்றே வாக்யங்களில்
மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
விஞ்ஞானம்,மெய்ஞ்ஞானம் என அத்தனை ஞானங்களை திரட்டிய‌சத்ய வேத வாக்குகள் இவை.
காமம் என்பது நம் உடல் சுரப்பி எனும் ஹார்மோன்களால்
ஒவ்வொரு அனுவுக்குள் புகுந்து பரந்துள்ளது
ஒருயிரிலிருந்து அது மனிதகுலம் வரை பாகுபாடின்றி பதிந்துள்ளது
பரிணாம வளர்ச்சியில் நம் மிருக இனத்தின் மீது அது.
அது மன்னிக்கப்பட கூடும்,
நம் உடலோடு ஒட்டிப்பிறந்த பாரம் அது,
ஆனால் அடுத்தது பதவியாசை,
கால் பதித்த தடங்கள்
கண் பார்த்த நிலங்களை வளைத்து போட்டது
பட்டா போட்டு பத்திரமாக பதிவு செய்தது
படையெடுத்து சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்தது
எத்த்னை போர்கள்
எத்தனை கொலைகள்
மனித வரலாறு அத்த்னையும்
உதிரம் நிரம்பிய பேனாவால் எழுதப்பட்டது
அது வளர்ந்தது என்றான்
இரண்டாம் உலகப் போருடன்
கொஞ்சம் ஓய்ந்து கிடக்கிறது என்று நம்பினான்.
மூன்றாவது பென்னாசை வளர்கிறது என்றான்
தங்கத்தின் விலை நிலவைத் தொட்டாலும்
நிற்கப் போவதில்லை என்று எதிர்காலத்தையும்
உணர்ந்திருந்தான் போலும்
மூன்று காலத்தையும் உணர்ந்தவன் அவன் ஞானி.
பெண்ணாசை வாலிபத்தில் தீரும்
மண்ணாசை ரோகத்தில் மாறும்
ஆனால் செல்வத்தின் மீதுள்ள ஆசை
உலகப் பொக்கிஷங்கள் யாவும் தந்தாலும் குறைவதில்லை
தள்ளாத வயதில்
தடியூன்றி நிற்க முடியாத போதும்
தளராது இந்த தங்கவெட்டை
உலகில் திகட்டாதது எதுவும் இல்லை
செல்வத்தை தவிர‌
போதும் என்று சொல்ல முடியதாதது
செல்வம் ஒன்றுதானே.
தங்கமும்,வைரமும்,செல்வமும்,
என பிரிந்தது அத்தனையும் அச்சடித்து காகிதம்
எனும் பணத்தால் இன்னும் பலமடங்கு ஆசையூட்டுகிறது
மனிதன் கண்டுபிடித்ததில் மகத்தானது பணம்
முதன்மையானது இந்த அச்சடித்த பச்சை நோட்டு
அதற்கு மயங்காதவர் யாருமில்லை
பனியாதவர் எவருமில்லை
அதன் ஆட்சி நிலையானது

அழியாதது உலகத்தை அழிக்கும் வரை 

பின்னூட்டமொன்றை இடுக