நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்


ஆசை கோபம் கள‌வு கொண்டவன் பேசத்தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருனை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

பேசத் தெரியாத மிருகம் மோசமானதா
பேசத்தெரிந்த மனிதன் அதிலும் மோசமானதடா என்றானே

ஆசை அதுதானே கோபம்,கள‌வு என்று இரு பாவ‌ங்களை பிரசவித்தது

ஆசை அது தவறா?
ஆசையை துயரங்களின் தாய் என்றான் புத்தன்
அத்தனைக்கும் ஆசைப்படு என்றார் ஒருவர்

அது சரி ஆசைகளில்
ஒன்று நியாய‌மானது
ஒன்று அநீதியானது
ஒன்று ஆசை மற்றது பேராசை
அளவுக்கு மிஞ்சிய அமுது நஞ்சானது
தகுதிக்கு மிஞ்சிய ஆசை ஆபத்தானது

காமம் தவறில்லை கைக்கிளையது பொருந்தாக்காமம்
தன் மனைவி மீது ஆசை அது காதல்
பிறர் மனைவி மீது காமம் அது பாவம்

தன் நிலத்தை சொந்தம் கொண்டாடுவது சரி
பக்கத்து நிலத்தைஆக்ரமிப்பது பேராசை
இப்படி மிதமிஞ்சிப் போனது ஆசை அழிவாகும்

ஆசைக்கு யாராவது அணை போட்டால் கோபம் வரும்
சட்டம் தடுத்தால் அதை புறக்கணித்து களவாடும்
சமூகத்தில் வாழத்தெரியாத மிருகமாகும்
சில சமயம் சிறையிடப்படுவதுண்டு விலங்கிட்டு விலங்காக‌

ஆசை,கோபம்,களவைத் துறந்தவன் மிருகபரிமாணத்தை தாண்டுகிரான்
ஆனால் அது மனிதனாகப் போதுமானதாகுமா?

அன்பு,நன்றி,கருணை
இது மூன்றும் மந்திரங்கள் மனிதனாக‌
அன்னையை,தந்தையை நேசிப்பது
முதல் அன்பு

அது வளர்ந்து  மனித நேயமாக மட்டுமல்ல‌
சீவ காருண்யமாக மாறி புல் பூண்டு வரை நேசிக்கும்

அடுத்தது நன்றி,
நன்மை செய்தவருக்கு நாம் காட்டும் அன்பு நன்றி
நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
நன்மை தனக்கு என்று அறியாத புரியாத விலங்குகள் ந‌ன்றியறியாதவர்
அது நீரில் கிடக்கும் தே ளை எடுத்து நிலத்தில் விட்டவரை கொட்டிவிடும் பண்பு

நன்மையை அறியும் நன்றியுணர்வே
மனிதர்களை மீண்டும் மீண்டும் 
நன்மைசெய்ய ஊக்கும் மருந்து
மகன் பாசத்தின் நன்றியே 
அன்னைக்கு அமைதி
மாணவன் காட்டும் நன்றியே 
ஆசிரியருக்கு சம்பளம்
மனிதன் சொல்லும் நன்றியே 
மருத்துவ்ருக்கு மருந்து
தொண்டன் செய்யும் நன்றியே 
தலைவனுக்கு ஊக்கம்
மக்கள் வணங்கும் நன்றியே 
மன்னனுக்கு கிரீடம்
அன்பும் நன்றியும் வளர்ந்து 
கருணை என்பது செயலாகும்
கிடைத்தவர் கிடைக்காதவருக்கு பகிர்ந்தளிப்பது கருணை
இருப்பவர் இல்லாதவர்க்கு 
விருந்தளிப்பது கருணை
அதுவே ஆன்டவ‌னின் குணம்.

பின்னூட்டமொன்றை இடுக